(நாலடியார் மன்னிக்க வேண்டும்)

சி. ஜெயபாரதன், கனடா

பிரிவு

காயும் நிலா காத்திருக்கு
கனத்த நெஞ்சம் பூத்திருக்கு
பாயும் தரையில் விரிச்சிருக்கு
பாவை போனாள் திரும்பவில்லை.

பருவம் விரைவாய் போயிருச்சு
பயிரும்  செழிப்பாய் விளைஞ்சிருச்சு
புருவம் பாதி நரைச்சிருச்சு.
புவியில் தொடுவான்  சிவந்திருச்சு.

நட்பு என்பது உதட்டளவு
நடிப்பு பார்த்தால் உடலளவு
இச்சை  தோன்றின் தோலளவு
இன்பம்  விளைவது மனத்தளவு.

இரவு பகலாய் விடிந்திருச்சு
இடரும் துயரும் நேர்ந்திருச்சு
பிணக்கு நேரும் முன்னே
பிரிவு வரும் பின்னே.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *