மயக்கம் எனது தாயகம்

பாஸ்கர் சேஷாத்ரி
காலையில் எழுந்து அழகான பெண்கள் முகத்தைப் பார்
தாயோ, மகளோ, மனைவியோ யாராக இருப்பினும் சரி
ஒரு குழந்தையின் சிறு கைப்பிடியில்
உன் ஆள்காட்டி விரலைச் செருகு
அதன் கட்டில் சில விநாடிகள் இரு.
சிரிப்பை ரசி
விரலை எடுக்கமாட்டாய்.
ஓங்கி வளர்ந்த மரத்தைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடு
பூவைக் கிள்ளாமல் விரல் ஸ்பரிசத்தில் மேலும் மலரச்செய்.
பச்சைத் தண்ணீரில் தலை நனையக் குளி.
வானம் பார்த்துக் கண்களை விரி.
முடிந்தால் ஒரு பூனைக்குட்டியை மடியில் கிடத்தி அதன் ரோமம் தடவு.
வசதியிருப்பின் திண்ணையில் அடங்கு.
உன் கண்கள் தானாய் மூடிக்கொண்டால்
என்னைக் குறை சொல்லாதே.