90’s மிட்டாய் கடையின் உள்ளே ஓர் உலா
அண்ணாகண்ணன்
90’s மிட்டாய் கடை (90’s Mittai Kadai) என்ற பெயரில், சென்னை, தாம்பரத்திற்கு அருகில் உள்ள சிட்லபாக்கத்தில், ஒரு கடை இயங்கி வருகிறது. 1990களில் வழக்கில் இருந்த தின்பண்டங்கள், பொம்மைகள், கருவிகள், எழுதுபொருள்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை இங்கே விற்பனைக்கு வைத்துள்ளார்கள். இந்தக் கடைக்கு நானும் என் மனைவியும் நேற்று நேரில் சென்று வந்தோம். எங்கள் அனுபவத்தை, இந்தப் பதிவில் பகிர்ந்துள்ளோம்.
1980களில் 1990களில் பிறந்தவர்களுக்கு இது ஓர் அரிய வாய்ப்பு. உங்கள் இளமைப் பருவத்தை மீண்டும் வாழ்ந்து பார்க்க வேண்டுமா? 90’s மிட்டாய் கடையின் உள்ளே ஒரு முறை சென்று பாருங்கள். நீங்கள் சாப்பிட்ட தின்பண்டங்களும் விளையாடிய பொம்மைகளும் கருவிகளும் பயன்படுத்திய பொருள்களுமாக, உங்களை அந்தக் காலத்திற்கே அழைத்துச் செல்லும்.
அந்தப் பதிவு, இங்கே.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)