கதை பிறந்த கதை – நிர்மலா ராகவன் நேர்காணல்
Zoom சந்திப்பு: அண்ணாகண்ணன்
மலேசியத் தமிழ் எழுத்தாளர் நிர்மலா ராகவன், தம் எழுத்துலக அனுபவங்களை நம்முடன் தொடர்ந்து பகிர்ந்துகொள்கிறார். இந்த இரண்டாவது பகுதியில், தமது கதைகளுக்கான கரு எவ்விதம் கிடைத்தது என எடுத்துரைக்கிறார்.
ஆணைப் பெண்ணாக மாற்றிய மருத்துவர், பெண்ணாக மாறிய அந்த ஆண் நடந்துகொண்ட விதம், ஒருவரை ஒருவர் கொல்வதற்காக அரிவாள் வாங்கி வைத்துக்கொண்ட கணவன்-மனைவி, வாடகைத் தாய், இன்னோர் ஆணின் விந்தைப் பெற்றுத் தன் கருப்பையில் வைத்த மனைவி, அதைக் கணவன் எதிர்கொண்ட விதம், கற்பழிக்கப்பட்ட பெண், திருமணம் குறித்த இளைஞர்களின் – இளம் பெண்களின் எதிர்பார்ப்புகள், நெற்றிப் பொட்டு இட்டுக்கொண்டு வந்ததற்காகத் தமிழ்ப் பெண்களின் கன்னத்தில் அறைந்த கன்னியாஸ்திரீகள், திருமணம் ஆன ஒரே நாளில் நடந்த விவாகரத்து உள்ளிட்ட பலவற்றையும் விவரித்துள்ளார். அவருடைய கதை பிறந்த கதையை இந்தப் பதிவில் பாருங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)