Tag: மரபின்மைந்தன் முத்தையா
-

2019 நவராத்திரி கவிதைகள் 9
-மரபின் மைந்தன் முத்தையாவெண்ணிறப் பாற்கடல் மத்தியிலேவெண்ணிலவாக எழுந்தவளாம்தண்ணந் துழாயணி கேசவனின்திருமார் பினிலே அமர்ந்தவளாம்எண்ணிய யாவையும் நிகழ்ந்திடவேஎன்றும் இன்னருள் பொழிபவளாம்வண்ணத் திருமகள் திருவடிநம்வாசலில் வைத்தால் வாழ்ந்திடுவோம்பாம்பணை துயில்கிற பேரழகிபிள்ளைகள் பசியைப் போக்கிடுவாள்தேம்பும் மனங்களை தேற்றிவைத்துதேடரும் செல்வங்கள் ஆக்கிடுவாள்தாம்புக் கயிற்றினில் கட்டுண்டதாமோதரனின் மனையரசிஆம்நம் அன்பினில் சிறைப்படுவாள்ஆயிரம் நன்மைகள் அளித்திடுவாள்செக்கச் சிவந்த தாமரையேசிம்மா சனமாம் அவளுக்குதக்க தருணத்தில் தனம்தான்யம்தருவது வழக்கம் அவளுக்குபக்கம் இருந்து பாலூட்டிபுகழ்வரும் விதமாய் ஆளாக்கிஎக்கணமும் எமை ஆண்டிடுகஇலட்சுமி தேவியே காத்திடுக!! -

2019 நவராத்திரி கவிதைகள் 8
மரபின்மைந்தன் முத்தையா
காலை திருவாரூர் மாலை திருக்கடவூர்
கோலங்கள் காணக் கிடைத்ததே – சீலமாய்
அங்கே கமலாம்பா இங்கே அபிராமி
மங்கலத்தே ஆழும் மனம்.யோகா சனத்தே இருந்தாள் கமலாம்பா
ஏகாந்த மாக அபிராமி – ஆகா
விழிகண்ட காட்சி விரித்துரைப்பார் யாரோ
மொழிகொண்டு சேர்க்குமோ மாண்பு.புற்றிடங் கொண்டார் பொருந்தும் கமலாம்பா
மற்றிங் கமுதீசர் மாண்பரசி – குற்றங்கள்
நீக்கிடுந் தாயர் நயனக் கனிவன்றோ
காக்கும் நமையே கனிந்து.ஆரத்தி நேரம் அவளே இவளாவாள்
ஓரத்தில் நின்றே உளங்களித்தேன் – சாரத்தில்
சக்தி நிலையங்கள் சாநித்யம் ஒன்றேதான்
பக்தி கனிகின்ற போது.கீர்த்தனைகள் கேட்டாள் கமலாம்பா பட்டர்முன்
ஆர்த்தெழுந்தே வந்தாள் அபிராமி – சாத்திரங்கள்
காணாத தேவியைக் காட்டுகிற பக்திநலம்
பேணல் பிறவிப் பயன்.ஆசன மிட்டே அவளிருக்க, நின்றபடி
பூசனைகள் ஏற்றே இவள்சிரிக்க – தேசுடைய
பொன்விளக் கெல்லாமே பூரிக்க நன்னெஞ்சே
என்னிருட்டு நீங்கும் இனி. -

2019 நவராத்திரி கவிதைகள் 6
-மரபின்மைந்தன் முத்தையா
புத்தகம் என்பது கோயிலென்றே -அதை[
புரட்டிடும் நொடியினில் நினைந்திடுக
புத்தம் புதிய கலைகளெல்லாம் -அந்த
பாரதி கொடைஎன மகிழ்ந்திடுக
தத்துவ முட்டல்கள் வாதங்கள்- நிகழ்
தர்க்கங்கள் தீர்ப்புகள் எல்லாமே
சத்திய நாயகி வாணியவள்- பதச்
சலங்கையின் ஒலியென அறிந்திடுகஅவள்தான் எழுவகை ஸ்வரமமைத்தாள்-இங்கு
அபிநயம் ஆயிரம் வடித்தளித்தாள்
கவிதைகள் காவியம் மலரவைத்தாள்-கருங்
கல்லுக்குள் சிற்பங்கள் ஒளித்துவைத்தாள்
இவரும் அவரும் விருதுபெற -கலை
இயற்றிடும் ஆற்றலும் அவள்கொடுத்தாள்
தவங்கள் செய்ததன் பயனாக -கலை
தேர்ந்திடும் வல்லமை அவள்கொடுத்தாள்பிள்ளைகள் விரல்களை நாம்பிடித்தே-நல்ல
பசுநெல் பரப்பினில் எழுதுகையில்
கிள்ளைக் குரலினில் அக்ஷரமாய்-சிறு
கண்களில் தெரிபவள் கலைமகளே
கொள்ளும் செயல்கள் அனைத்திலுமே- அவள்
கூட வருவாள் எண்ணெழுத்தாய்
விள்ள முடியாப் புதுமையினள் -எங்கள்
வாணியின் திருவடி சரண்புகுவோம்நுண்கலை வாணர்கள் திரண்டிடுக-பல
நூதனக் கவிஞர்கள் இசைத்திடுக
பண்கலையாளர்கள் பாடிடுக-நடம்
புரிகிற வித்தகர் ஆடிடுக
வண்ணக் கலைமகள் கொண்டாட்டம்-இங்கு
விதந்து கலைகளைப் பேணுதலே
மண்மிசை வானகம் தென்படுக-எங்கள்
மகத்துவக் கலைமகள் அருள் தருக! -

2019 நவராத்திரி கவிதைகள் 5
மரபின்மைந்தன் முத்தையா
எழுதப் படாத ஏடுகளில்- வந்து
எழுது கோல்முனை தீண்டுகையில்
உழுத நிலத்தில் பயிர்போலே-அங்கே
உதித்திடும் எண்ணம் கொடுப்பது யார்?
பழுது நிரம்பிய மனதுக்குள்ளே -உயர்
பாட்டும் இசையும் பிறப்பதெங்கே
தொழுது சொல்வேன் இவையெல்லாம்- தினம்
தருவது வாணியின் கருணையன்றோ!பாரதி சரஸ்வதி பேரெழிலாள்- ஒளி
பொலிந்திடும் வெண்மலர் வீற்றிருப்பாள்
நேருறக் கலைகளை ஆண்டிருப்பாள்- அவள்
நேர்த்தியில் கீர்த்தியாய் நிறைந்திருப்பாள்
சீரிய விரல்களின் கோலங்களில்- எழில்
சித்திரம் தீட்டிடும் தூரிகையில்
காரியம் யாவையும் நிகழ்த்திவிடும்-எங்கள்
கலைமகள் பதமலர் வணங்கிடுவோம்!நான்முகன் படைக்கின்ற உலகமெல்லாம்- எங்கள்
நாயகி கலையின்றிச் சிறந்திடுமோ
வான்வரை வளர்புகழ் பெருமையெலாம்- அவள்
வாரித் தராவிடில் வந்திடுமோ
தேன்மழை அவளது பெருங்கருணை- எட்டுத்
திக்குகள் ஆள்வதும் அவள் அறிவே
மான்விழி நோக்கினில் கலைமகளே -பல
மாண்புகள் நிறைந்திட அருளுகிறாள்!சுவடிகள் தேன்மலர் ஜெபமாலை -அன்னை
சுந்தரக் கரங்களில் தவழ்ந்திடுமாம்
தவம்செய்த பயனாய் ஒரு வீணை- எங்கள்
தேவியின் திருமடி கிடந்திடுமாம்
நவமென ஒளிர்ந்திடும் கலைகளெலாம்- அவள்
நளினத் திருவிரல் நகங்களடா
அவள் விரல் துகள்படக் காத்திருப்போம்- நாம்
அதன்பின்னர் அவனியை ஆண்டிருப்போம்! -

2019 நவராத்திரி 2
-மரபின்மைந்தன் முத்தையா
இடைவெளியே இல்லா இவள்கருணை கிட்ட
தடை – வெளியே இல்லை தனக்குள் – மடையை
அடைக்கும் அகந்தை அடித்தே உடைத்தால்
கிடைக்குமே சக்தி கனிவு .சிறகசைத்துப் பாடுகிற சின்னப் பறவை
உறவென்று வானத்தை உன்னும் _ பிறவியினைப்
பெற்றவர்க் கெல்லாம் பராசக்தி தாய்தானே
உற்றிந்த உண்மை உணர்.உன்னில் ஒரு துளியாய் உள்ளாள் அவளைநாம்
உன்னும் பொழுதே உருத்தெரிவாள் – இன்னும்
தொடரும் பிறவித் துயர்நீங்க தேவி
சுடரடிகள் நீசென்று சூழ்.மாயத் திரைகள் மறைக்கும் மஹாமாயை
தாயென் றழைத்தால் திரை விலகும் – ஓயுமே
எண்ணில் பிறவிகள் எல்லாமே சக்தியை
எண்ணில் நிகழும் இது.தானே வெயிலாகித் தானே நிழலாகி
தானே இயங்குந் தயாபரி _ தேனாய்
சிவக்கூட்டில் நின்றொழுகும் சுந்தரி பாதம்
தவக்காட்சி கண்டு தெளிமும்மலப் பிள்ளையை மோகிக்கும் தாய்மையே
அம்மையே எங்கள் அபிராமி – இம்மையே
எம்மையே ஆளும் எழிலரசி செம்மையாய்
நம்மையே காப்பாள் நயந்து . -
மரபின் மைந்தன் முத்தையாவின் வலைதளம்
அன்பினிய நண்பர்களே,
www.marabinmaindan.com எனும் பெயரில், மரபின் மைந்தன் முத்தையாவின் வலைதளம்தொடங்கப்படுகிறது. இதன் தொடக்கவிழா 07.11.2015 சனி மாலை 6.30 மணிக்கு கோவை ராம்நகரிலுள்ள விஜய் பார்க் இன் ஹோட்டலில் உள்ள வெங்கடேஷ் மஹாலில் நிகழ்கிறது.
எழுத்தாளர்,பேச்சாளர், சுயமுன்னேற்றப் பயிற்சியாளர்,கவிஞர், பத்திரிகையாளர் என்று பன்முக பரிமாணங்கள் கொண்டவர் திரு.மரபின்மைந்தன் முத்தையா.இவரது படைப்புகள் நிகழ்ச்சிகள் பயிலரங்குகள் புத்தகங்கள் வலைப்பதிவுகள் உரைகள் காணொளிகள் என அனைத்தையும் ஒரே இடத்தில் காண்கிற விதமாக www.marabinmaindan.com என்னும் பெயரில் வலைதளம் அமைக்கப்பட்டு அதன் தொடக்க விழா நிகழ்கிறது.
இவ்விழாவிற்கு எழுத்தாளர் நாஞ்சில் நாடன் தலைமை வகிக்கிறார்.கோவை ஶ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் திருமதி எஸ்.மலர்விழி, வலைதளத்தை தொடங்கி வைக்கிறார்.ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அதிபர் திரு.ம,கிருஷ்ணன் முன்னிலை வகிக்கிறார்.
பாலரிஷி ஶ்ரீ விஸ்வசிராஷினி ஆசியுரை வழங்குகிறார். எழுத்தாளர் வண்ணதாசன் சிறப்புரை ஆற்றுகிறார்.வெற்றித் தமிழர் பேரவையின் சென்னை மாவட்ட செயலாளர் திரு.வி.பி.குமார், கோவை மாவட்ட அமைப்பாளர் திரு,கோவை ரமேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
திரு.நா.வெங்கடேஷ் வலைதள விளக்கம் வழங்குகிறார். முன்னதாக வெற்றித் தமிழர்பேரவையின் கோவை மாவட்ட அமைப்பாளர் திரு. மு. முருகன் வரவேற்புரை வழங்குகிறார்.நமது நம்பிக்கை மாத இதழின் உதவி ஆசிரியர் திரு.சிவக்குமார் பழனியப்பன் நன்றி நவில்கிறார்.
விழா நிகழ்ச்சிகளை செல்வி.அகிலா தொகுத்து வழங்குகிறார்
-
VETRIVAASAL -Full day Motivation Seminar
MarabinMaindan Muthiah
“Namadhu Nambikkai” magazine is conducting a full day motivation
seminar on 21.12.2014for the ninth year.Reputed Professionals are delivering lectures and the theme for this year is Cooordination of body,mind,emotions and intellect.Each subject has an exclusive session and this theme is being done for the first time in Tamil.
I am sure that this program would be of immense benefit to your staff members.I request you to kindly enroll your Staff members.I am enclosing details of the same
regards
Marabin Maindan Muthiah
98430 63572



