தோசை வார்க்கும் எந்திரம். மறவன்புலவு க.சச்சிதானந்தன் அவர்களின் காணொலிப் பதிவு.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

தோசை வார்க்கும் எந்திரம். மறவன்புலவு க.சச்சிதானந்தன் அவர்களின் காணொலிப் பதிவு.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

மறவன்புலவு க.சச்சிதானந்தன்
சிங்கப்பூர் திருமுறை அடியவருடைய நிதிப் பங்களிப்பு.
இந்தியா அசாம் மாநிலம் குவகாத்திப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் விசயகுமார் அவருடைய மொழிபெயர்ப்புப் பங்களிப்பு.
இந்தியா அசாம் மாநிலம் குவகாத்தித் தமிழ்ச் சங்கத் தலைவர் திருமதி உமா இலட்சுமணன் அவர்களுடைய ஒருங்கிணைப்புப் பங்களிப்பு.
இந்தியா மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் தவத்திரு 26ஆவது குருமகாசன்னிதானம் அவர்களுடைய வழிகாட்டலில் தவத்திரு 27ஆவது குரு மகா சந்நிதானம் அவருடைய ஆசியுடன் இலங்கை யாழ்ப்பாணம் மறவன்புலவு க சச்சிதானந்தன் ஆகிய நான் கடந்த ஆறு ஆண்டுகளாகத் தொடர்ந்து விடாமுயற்சியுடன் அசாம் மொழிக்குப் பன்னிரு திருமுறைகளை எடுத்துச் செல்ல வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டேன்.
தமிழ்ப் பெண். அசாமியரை திருமணம் செய்தவர். தமிழிலும் அசாமிலும் வல்லமை பெற்றவர். சிவபுராணத்தை மொழிபெயர்த்து தந்தார். அதற்கு பின்பு அவர் தொடர்பு எனக்குக் கிடைக்கவில்லை.
அப்பெண்ணை அறிமுகம் செய்தவர் அசாம் மாநில ஆளுநர் அவர்களின் தலைமைச் செயலாளர் திரு மீனாட்சிசுந்தரம் ஐஏஎஸ் அவர்களுடைய தாயார் திருமதி விசாலாட்சி அம்மையார்.
எனவே விடாது என் முயற்சியைத் தொடர்ந்தேன். கடந்த பங்குனி மாதக் கடைசியில் ஏப்ரல் 7 8 9 நாள்களில் குவகாத்தியில் இருந்தேன்.
குவகாத்தியில் தமிழ்ச் சங்கத் தலைவர் திருமதி உமா இலட்சுமணனைச் சந்தித்தேன். அவருடன் சேர்ந்து சென்று சிவத்திரு விசாலாட்சி அம்மையாரைச் சந்தித்தேன். திருமதி உமா இலட்சுமணனுடன் சேர்ந்து சென்று பேராசிரியர் விசயகுமாரைச் சந்தித்தேன்.
இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.
தேவாரம் மின்னம்பல தளத்திற்கும் அதன் முயற்சிகளுக்கும் அதன் வளர்ச்சிக்கும் சிறப்பாகச் சிங்கப்பூர்த் திருமுறை அடியார்கள் ஆற்றி வரும் அளப்பரிய பங்கை நான் அவர்கள் திருவடிகள் தொட்டு வணங்குகிறேன்.
1 சிவபுராணம் தொடக்கம்
20 திருப்பள்ளியெழுச்சி வரையான மாணிக்கவாசகப் பெருமானின் திருவாசக வரிகளை அசாமியர்கள் படித்துச் சொல்லிய பாட்டின் பொருள் உணருமாறு பேராசிரியர் முனைவர் விசயகுமார் மொழிபெயர்த்துத் தந்துள்ளார்கள்.
என்னுடைய வயதும் தளர்ச்சியும் பணிகளில் ஈடுபடத் தடையாகுமோ என நான் நினைக்கும் பொழுதெல்லாம் அன்று அன்று, நாங்கள் இருக்கிறோம் என எனக்கு உதவியாக இருப்பவர்கள் பலர்.
அவ்வாறுள்வர்களுள் மும்பையில் உள்ள திருமதி நித்யா கணேசன் (மயிலாடுதுறை செம்பொன்ள்ளி) அவர்கள் ஒருவர்.
ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். கணிணியில் தனித்தகைமை வாய்ந்தவர். மின்னம்பல தளத்தைச் செம்மையாகப் பேணுவதில் கடந்த 20 ஆண்டுகளாக எனக்கு ஒத்துழைப்பவர். திருமணமாகி மும்பையில் இருக்கிறார். அவர்தான் எனக்கு உதவுகிறார். ஒத்துழைக்கிறார். மின்னம்பல தளத்தில் ஏற்றுகிறார். மொழிபெயர்ப்பாளரோடு ஒருங்கிணைத்து பணிகளை முடுக்குகிறார்.
அசாமிய மொழிபெயர்ப்பைத் தேவாரம் தளத்தில் www.thevaaram.org ஏற்றியுள்ளார். தயை கூர்ந்து ஒவ்வொரு பாடலாகப் பார்க்க.
21 கோயில் மூத்த திருப்பதிகம் தொடக்கம்
51 அச்சோப் பதிகம் வரை
பேராசிரியர் முனைவர் விசயகுமார் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
விரைவில் அவற்றையும் மின்னம்பல தளத்தில் நீங்கள் பார்க்கலாம்.
அசாமியர்களுக்குப் பரிந்துரைக்கலாம்.
உங்கள் அசாமிய நண்பர்களுக்குப் பரிந்துரைக்க.
திருவாசகம் சிவபுராணம் www.thevaaram.org தளத்தில் மொழிபெயர்ப்புகள்
தமிழ் (1200 ஆண்டுகளுக்கு முன்)
நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க
கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க
ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க
ஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க 5
அசாம் (2006க்குப்பின் மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர் மறவன்புலவு க. சச்தானந்தன்)
1. শিৱপুৰাণ
(আদি অন্তহীন প্ৰাচীন স্বৰূপ শিৱৰ গাঁথা)
ওম নমঃ শিৱায়ৰ জয়। নাথৰ শ্ৰীচৰণৰ জয়।
ক্ষন্তেক সময়ৰ বাবেও মোৰ হৃদয়ৰপৰা বেলেগ নোহোৱা সেই শ্ৰীচৰণৰ জয়।
গোকলীৰ আৰাধ্য গুৰুদেৱ ভগৱান (শিৱ)ৰ শ্ৰীচৰণৰ জয়।
আগম-স্বৰূপ ভগৱানৰ মধুৰ শ্ৰীচৰণৰ জয়।
এজনৰ বা সকলোৰে শ্ৰীচৰণৰ জয়। 5
தெலுங்கு (2006க்குப்பின் மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர் மறவன்புலவு க. சச்தானந்தன்)
తిరువాసహం-సివబురాణం
నమశ్శివాయ నాదుడి పాదం వర్థిల్లు నాధుడి పాదం వర్థిల్లు
రెప్పపాటు కూడా నా మనసునుంచి వెళ్ళని వాణ్ణి పాదం వర్థిల్లు
కోకళి ఏలిన చిన్న మణి పాదం వర్థిల్లు
ఆగమమై నిలిచిన భగవాన్ పాదం వర్థిల్లు
ఏకాకి అనేకుడైన భగవానుడి పాదం వర్థిల్లు
கன்னடம் (2006க்குப்பின் மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர் மறவன்புலவு க. சச்தானந்தன்)
1. ಶಿವಪುರಾಣ
[ತಿರುಪೆರುಂದುರೈ ಕ್ಷೇತ್ರದಲ್ಲಿ ಅನುಗ್ರಹಿಸಿದುದು]
ಶಿವನ ಅನಾದಿಯ ಹಿರಿಮೆ
ಶ್ರೀ ಸಿಟ್ರಂಬಲಂ
ನಮಃ ಶಿವಾಯವೆಂಬ ಪಂಚಾಕ್ಷರಗಳು ಬಾಳ್ಗೆ. ಪಂಚಾಕ್ಷರಗಳ ಸಾರವಾಗಿ ಶೋಭಿಸುವ ಭಗವಂತನ ಪವಿತ್ರ ಪಾದಗಳು ಬಾಳ್ಗೆ. ಕಣ್ಣೆವೆ ಮಿಟುಕಿಸುವಷ್ಟು ಸಮಯವೂ ಭಕ್ತನ ಬಿಟ್ಟಗಲದ ಪವಿತ್ರ ಪಾದಗಳು ಬಾಳ್ಗೆ. ಕೋಗಳಿ ಎಂಬ ಸ್ಥಳದಲ್ಲಿ ನೆಲೆಸಿ ಅನುಗ್ರಹಿಸಿದ ಗುರುಮೂರ್ತಿಯ ಪವಿತ್ರಪಾದ ಬಾಳ್ಗೆ. ಶಿವಾಗಮದ ಸಾಕಾರ ರೂಪವಾಗಿ ನಿಂತು ಸುಖವ ನೀಡುವ ಭಗವಂತನ ಪವಿತ್ರ ಪಾದ ಬಾಳ್ಗೆ. ಏಕವೂ ಅನೇಕವೂ ಆದ ದೇವನ ಪವಿತ್ರ ಪಾದ ಬಾಳ್ಗೆ. (5)
மலையாளம் (2006க்குப்பின் மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர் மறவன்புலவு க. சச்தானந்தன்)
തിരുവാചകം
കശിവപുരാണം
അനാദിവര്ണ്ണന
നമശിവായ വാഴ്ത്തുന്നേന് നാഥന് താള് വാഴ്ത്തുന്നേന്
ഇമപ്പൊഴുതും അകം തനില് അകലാതിരിപ്പോന് താള് വാഴ്ത്തുന്നേന്
കോകഴികാത്തരുളിയ ഗുരുമണിതന് താള് വാഴ്ത്തുന്നേന്
ആഗമമായ് നിന്നാനന്ദമളിപ്പോന് താള് വാഴ്ത്തുന്നേന്
ഏകന് അനേകനന് തന് ഇണയടി വാഴ്ത്തുന്നേന് 5
சிங்களம் (2006க்குப்பின் மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர் மறவன்புலவு க. சச்தானந்தன்)
තිරුවාසගම් – අට වැනි තිරුමුරෙයි
සිවපුරාණම්.
නමසිවාය ජයතු, නාදන් සිරි පා ජයතු
සැණෙක් හෝ ම’හදින් වෙන් නොවන> සිරි පා ජයතු
කෝකලි රජ කළ ගුරු දෙවිඳුන් සිරි පා ජයතු
වේදයන් සේ සිටි මිහිරි සිරි පා ජයතු
එක් රුවකින් ද> අනේක රූ සේ ද සිටිනා සිරි පා ජයතු 05
மலாய் (2006க்குப்பின் மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர் மறவன்புலவு க. சச்தானந்தன்)
Dirgahayu Namasivaya, dirgahayu tapak kaki Tuhan-ku
Dirgahayu tapak kaki Tuhan-ku yang tidak terpisah daripada kalbuku walau sekelip mata
Dirgahayu tapak kaki Guru-ku bak permata manikam dan yang bertakhta di Koahazhi
Dirgahayu tapak kaki Tuhan-ku yang bermanifestasi sebagai Agama dan mendekatiku
Dirgahayu tapak kaki Tuhan-ku yang esa dan aneka! 5
இந்தி (1956 மொழிபெயரப்பு)
तिरुवाचकम
1-षिवपुराण
( आदि अंत रहित प्राचीन स्वरूप षिव की गाथा)
नमः षिवाय की जय। नाथ के श्रीचरणों की जय।
क्षण-भर के लिए भी मेरे हृदय से विलग न होनेवाले श्रीचरणों की जय।
गोकली के आराध्य गुरुवर भगवान(षिव) के श्रीचरणों की जय।
आगम-स्वरूप भगवान के मधुर श्रीचरणों की जय।
एक भी, अनेक भी, उस ईष के श्रीचरणों की जय।
வடமொழி (2006க்குப்பின் மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர் மறவன்புலவு க. சச்தானந்தன்)
शिवपुराणम्
नमश्शिवायमन्त्रो जयतु । नाथस्य पादौ जयताम् ।
क्षणमपि मम हृदयात् अनपसारिणौ पादौ जयताम् ।
कोकळिवासिनः गुरुमणेः पादौ जयताम्।
आगमरूपं धारयतः मधुदायकस्य पादौ जयताम् ।
एकरूपिणः अनेकरूपिणः ईशस्य पादौ जयताम् ।
யேர்மன் (1925 மொழிபெயரப்பு)
ŠIVAPURĀNA
Das Alter ŠIVAS
DAS ALTER DES ANFANGLOSEN WESENS ŠIVAS
Kundgegeben in Tirupperuntuṛai
Die Buchstaben seien gepriesen,
Die heiligen fünf-Namašivāya!
Des Höchsten Fuß sei gepriesen!
Des Fuß sei gepriesen, der niemals
Von meinem Herzen sich trennt!
ஆங்கிலம் (1990 மொழிபெயர்ப்பு)
Blessed is the name Na Ma Si Va Ya !
blessed are the Lord`s feet !
Blessed are the feet that part not from my bosom even for the time,
the eyes take to wink !
Blessed are the feet of the Gem of a Guru who rules over Kokazhi !
Blessed are the feet of God who turning into the Aagamas,
tastes sweet !
Blessed are the feet of Him who is one as well as many !
செயற்கரிய செய்யும் பெரியோர்!எம் சச்சி
சொலற்கரிய செய்கைத் திரு.
மறவன்புலவு க.சச்சிதானந்தன் அவர்களுக்கு இன்று 80ஆவது பிறந்தநாள். கார்த்திகை மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்த அவர், தமிழ் முறைப்படி இந்த நட்சத்திர நாளையே பிறந்தநாள் என ஏற்றுக்கொள்வார். பல துறைகளில் பெரும்பணி ஆற்றி வருகிறார். சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் என்ற திருக்குறள், அவருக்கு மிகப் பொருத்தம். உலகெங்கும் 60 நாடுகளுக்கும் மேல் பயணித்த அவர், இப்போது ஈழத்தில் தாம் பிறந்த மறவன்புலவுச் சிற்றூரைக் களமாகக் கொண்டு இயங்குகிறார்.
சச்சி ஐயாவின் 70ஆவது பிறந்தநாளை முன்னிட்டு உருவாக்கிய வலைப்பூ.
https://sachi70.blogspot.com
சச்சி ஐயா நீடூழி வாழ்க!

மறவன்புலவு க சச்சிதானந்தன்
சிவ சேனை
கூகுள் வரை படத்தில் கச்சத் தீவைப் பெரிதாக்கிப் பார்த்தால் அங்கு மேற்குக் கரையில் அண்ணமார் கோயில் இந்துக் கோயில் என இடுகை இருக்கும். (படம் இணைப்பில்)
கய் > கயர் > காய், தமிழின் வேர்ச் சொற்கள். அறு சுவைகளுள் கயர் > கய்ப்புச் சுவை ஒன்று.
உப்புச் சுவை கய்க்கும் சுவை. உப்பு நீர் > உவர்நீர். கய்க்கும் நீர்.
தமிழில் நேயம் > நேசம் ஆகும். பையன்கள் > பசங்கள் ஆவார். வாயில் > வாசல் ஆகும். வயம் > வசம் ஆகும். யகர உச்சரிப்புக் காலப்போக்கில் சகர உச்சரிப்பாக மாறுவது இயல்பு.
கயர் > கசர். கயப்பு > கசப்பு. உப்புக் கயக்கும் அதே உப்புக் கசக்கும். கடல் நீர் > கச்சல் நீர். கடல் நீர் ஊறும் நிலம் கச்சல் நிலம்
ஒரு தீவில் கிணறு தோண்டக் கயர் நீர் வருமாயின் கச்சல் நீர் வரும் தீவு, கச்சல் தீவு > கச்சத் தீவு.
நாகப்பட்டினத்திலிருந்து கடாரம் நோக்கி வணிகக் கப்பல்கள் பயணிக்கின்றன. நக்காவரம் தீவுக் கூட்டங்களைக் கடக்கும் இடத்தில் நன்னீர் கிடைக்குமா? எனத் தமிழ்க் கடலாடிகள் தேடுகின்றனர். கிணறு தோண்டக் கயர் நீர் ஊறுகிறது.
எனவே அத் தீவில் நன்னீர் கிடைக்காது என்பதைத் தெரிவிக்கக் கச்சத் தீவு என்று பெயரிடுகின்றனர். பல்லாயிரம் ஆண்டுகளாக அத் தீவு கச்சத் தீவு.
நக்காவரம் தீவுக் கூட்டங்களில் தெற்கு எல்லையில் சுமாத்திராவிற்கு வடக்கே இந்திரா முனை என இன்று அழைக்கும் தீவின் பெயர் இன்றும் கச்சத் தீவு. கடலாடித் தமிழர் சூட்டிய பெயர். அட்மிராலிற்றி வரை படங்களில் (கப்பல் ஓட்டிகட்கு உதவும் பிரித்தானியத் தாயாரிப்பான வரை படங்களில்) இப் பெயரே உண்டு (Admirality Charts)
அவ்வாறே நெடுந் தீவுக்கு மேற்காக உள்ள தீவில் கிணறு தோண்டினால் உவர் நீர் அல்லது கயர் நீர் அல்லது கச்சல் நீர் வருவதால் அந்தத் தீவின் பெயர் கச்சத் தீவு.
பசுத் தீவு அல்லது நெடுந் தீவுக்கும் இராமேச்சரத்துக்கும் இடையே பயணிக்கும் வழிபடு பயணிகள், நன்னீர் கொண்டு செல்ல வேண்டும். வழியில் கச்சத் தீவு வரும் தங்கலாம். அங்கே நன்னீர் கிடைக்காது என்பதைச் சுட்டுவதே கச்சத் தீவு என்ற பெயர்.
கச்சத் தீவில் உள்ள சிவன்கோயில் திருக்கச்சேச்சரம். அருள்மிகு கயற்கண்ணி உடன் உறை கச்சேச்சரநாதர் திருக்கோயில் அமைந்த தீவு கச்சத் தீவு.
திருக்கோயில் வாயிலில் அருள்மிகு பிள்ளையார். அவரை வணங்கி உட்சென்று அருள்மிகு கயற்கண்ணி உடனுறை கச்சேச்சரநாதரை வணங்கி, சுற்று மண்டபங்களில் உள்ள அருள்மிகு வள்ளி தெய்வானை உடனுறை முருகப் பெருமானை வணங்கி, அருள்மிகு பைரவரை வணங்கி, அருள்மிகு வீரபத்திரரை வணங்கி, வெளியே வந்து நெடுந் தீவில் இருந்தோ இராமேச்சரத்தில் இருந்தோ கொண்டு சென்ற பொங்கலுக்கு உரிய பொருள்கள், நீர் முதலியவற்றால் பொங்கல் பொங்கி வழிபடுவது 10 ஆயிரம் ஆண்டுகளாக நெடுந் தீவு மற்றும் இராமேச்சரச் சைவத் தமிழரின் மரபு.
400 ஆண்டுகளுக்கு முன்பு சங்கிலி மன்னனைத் தோற்கடிக்க மன்னார்த் தீவில் இருந்து இருமுனைத் தாக்குதலை மேற்கொண்டவன் போர்த்துக்கேயத் தளபதி பிலிப்பு டி ஒலிவரா.
முதலில் தனது கடற்படையை அனுப்பினான். நெடுந் தீவுக்குப் போர்த்துக்கேயக் கடற்படை வந்தது. அங்கே சங்கிலிக்கு உதவியாக நிலைகொண்டிருந்த மலையாளத்துக் குஞ்சலியின் கடற்படை, போர்த்துக்கேயக் கடற்படையைத் தாக்கியது.
பின்வாங்கிய போர்த்துகேயக் கடற்படை, கச்சத் தீவில் தங்கியது. அங்கே இருந்த அருள்மிகு கயற்கண்ணி உடனாய கச்சேச்சரநாதர் திருக்கோயிலை முற்றுமுழுதாக உடைத்தது.
பின்வாங்கிய போர்த்துக்கேயக் கடற்படையைக் குஞ்சலி துரத்தினான். கச்சத் தீவு சென்றான். போர்த்துக்கேயக் கடற்படையை முற்றாக அழித்தான். போர்த்துக்கேய வீரர்களைச் சிறைப் பிடித்தான். நெடுந் தீவுக்குக் கொண்டு வந்தான்.
வைகாசி தேய்பிறை எட்டாம் நாள் யாழ்ப்பாணத்தில் சங்கிலியனைப் பிலிப்பு டி ஒலிவரா சிறைப் பிடித்ததும் நெடுந் தீவில் இருந்த குஞ்சலி வீரர் கடற்படை மலையாளத்துக்குப் புறப்பட்டது.
நெடுந் தீவு போர்த்துக்கேயர் வயமானது. துப்பாக்கி முனையில் நெடுந் தீவில் வாழ்ந்த சைவர் சிலரைப் போர்த்துகேயர் கத்தோலிக்கராக மாற்றினர்.
கத்தோலிக்கத்துக்கு மாறாத சைவர்கள் கச்சத் தீவில் உடைந்து தரைமட்டமாகிய அருள்மிகு கயற்கண்ணி உடனாய கச்சேச்சரநாதர் திருக்கோயில் இருந்த இடத்தில் அண்ணமார் (சிவனின் சூலம்) திருமேனி வைத்து வழிபட்டு வருகின்றனர். நெடுந்தீவு மீனவருக்கும் தொண்டி தொடக்கம் இராமேச்சரம் வரை வாழும் தமிழக மீனவர்களுக்கும் இடையே திருமண உறவுகள் நெடுங்கால மரபு. எனவே நேர்த்திக் கடன்களை நிறைவேற்றத் தமிழகக் கரைகளில் இருந்தும் கச்சத் தீவுக்கு மீனவர் வருவர்.
கடந்த 100 ஆண்டுகளுக்குள் நெடுந் தீவுக் கத்தோலிக்க மீனவர் அந்தோணியார் சிலையை அமைத்து வழிபடத் தொடங்கினர். சைவ வழிபடு மரபுகள் தொய்வுற, கத்தோலிக்கத் திருவிழா மரபு அண்மையக் காலத்தில் தொடங்கியது.
400 ஆண்டுகளுக்கு முன்பு வரை பத்தாயிரம் ஆண்டுகளுக்கும் கூடுதலாகக் கச்சத் தீவில் அமைந்திருந்த அருள்மிகு கயற்கண்ணி உடனாய கச்சேச்சரநாதர் திருக்கோயிலை மீண்டும் திருப்பணி செய்வித்துக் கட்டிக் குடமுழுக்கு நீராட்டினால் இலங்கையில் வாழ்கின்ற சைவர்களின் துன்பங்கள் துயரங்கள் நீங்கும்.

Maravanpulavu K. Sachithananthan
Mannar, one of the five districts in the Northern Province, one of the nine provinces of Sri lanka.
It is a Hindu minority district in a province with 85% Hindus.
Around 9,000 Hindu families are at the mercy of the Bishop of Mannar. This is the situation since Portugese conquest. Francis Xavier came to Mannar. His infamous Mannar inquisition left many pits of human skeleton now under excavation by the Archeological department.
Empowering Hindu families is our goal. Mens agitat molem is the Latin phrase. Mind moves matter. Stronger the mind, stronger is your will power. Stronger will power of individuals makes a strong social fabric. Hindu social fabric is weak because Hindu minds are weak.
When you are surrounded by a strongly knit Abrahmic social order, determined to break the minority Hindu social fabric, weaker minds further weakens.
Empowering them has been my agenda for the last 50 years.
As Secretary General of the Federation of Young Men’s Hindu Associations, I had the direction from my colleagues to plan a Hindu Youth empowerment programme in Mannar district, fifty years ago.
We formed Young Men’s Hindu Associations in almost all Hindu villages in Mannar district. We took volunteers from other districts to inject moral courage among Hindu youth.
We planned self employment projects. We arranged for training of Hindu youth from Mannar in Canada and India. Mr. Ganeshamurthy from Mannar who was tarined at Madurai, is now the secretary of the Federation of Saiva Tamil templs in UK. He always addresses me as his guru.
War intervened and all our projects were abandoned. Internal displacements and international migration made the Abrahamic religionists to strengthen their base. In fact people here talk about how Abrahamic religionists were fanning and flaming the war to weaken the Hindu base and exploit the weakness to penetrate, permeate and proselytize.
Post war, the Abrahamic priesthood induced their missionaries and love jihadis to fully exploit the situation. Demographically Hindus became a minority in a district where they were the only religionists a few centuries ago.
During the past four years I took upon myself the task of recruiting volunteers to stem this tsunami tidal wave of Abrahmic onslaught. I should say that the Abramists are taking me seriously and working out ways to elbow me out without much success.
My success in the neighbouring Cheddikulam division of the district of Vavuniya in wiping out missionary activity was due to visits to every Hindu house, installing Hindu flag posts in each house. We followed it with a poster campaign. Periodically I took Hindu sevakas from South India (Tamil Nadu and Karnataka) to conduct in-situ training for the youth.
Dedicated volunteering made it possible to nearly wipe out any activity. Vigilance continues as these carcinogenic proselytizers do not give up easily.
A volunteer from Mannar having been invited went to Goa to attend the Hindu Jana Jaguritu conference during July 2018.
In Mannar I am following the Cheddikulam pattern with one addition. I compiled an 864 page hard bound book on Mannar and its hallowed Hindu history. I wrote in detail about the Mannar inquisition of Francis Xavier.
I included a chapter to make any one perform pooja at a temple.
I included a chapter on the ceremonies related to the death of a Hindu.
I included a chapter on days of pooja and fasting for each of the 12 months.
Then I followed with the relevant hymns to be recited at these poojas.
I have given a list of 424 temples in the district against a government list of 92 registrations.
I have given the denominational demographic composition of each of the 153 basic administrative units.
A la Cheddikulam, I am visiting along with volunteers carrying Hindu flags, a copy of the 864 page book and a poster to each Hindu house in Mannar district, initially covering the vulnerable areas.
The pictures you see are images of our work on 28th and 29th Nov. covering six villages, viz: Musali – Puthukudyiruppu 62 Hindu families, Musali -Kouukupadayan 45 Hindu famuilies, Musali – Maruthamadu 17 Hindu families, Musali – Potkerny 7 Hindu families, Mannar town – Nagathalvu 67 Hindu fmilies and Mannar town Sinnakadai 83 Hindu families.
These are the projections. It is for Sivaperuman to decide and direct us to the pattern and design HE has.

மறவன்புலவு க சச்சிதானந்தன்
சிவ சேனை
அருள்மிகு உமையம்மை உடனாய ஆதிலிங்கேச்சரர் வெடுக்குநாறிக் குன்றில் (அது மலையன்று; அது குன்று) திருக்கோயில் சார்ந்த அருளாட்சி.
வரலாற்றுக்கு முந்திய காலம் தொட்டே அங்கு அருளாட்சி.
ஆதி என்றாலே பழமையானது தொன்மையானது.
சைவத் திருக்கோயில் இருந்த இடங்களில் புத்தரும் சமணரும் வாழ்ந்த கதைகள் ஏராளம் ஏராளம்.
திருநாவுக்கரசு நாயனார் வடதளி பழையாறைத் திருக்கோயிலில் வழிபடச் செல்கிறார். நீண்ட வரலாறு கொண்ட பழைய சிவன் கோயில். சமணர்கள் அக்கோயிலை தமதாக்கிப் பூட்டி வைத்திருக்கிறார்கள்.
அப்பர் பெருமானை வழிபட விட மாட்டோம் என அடம் பிடிக்கிறார்கள். சிவனை வழிபாடு செய்த பின்பே உண்பேன் என உண்ணாநோன்பு இருக்கிறார் அப்பர் பெருமான்.
தமிழர் வரலாற்றில் உணவைத் தவிர்க்கும் போராட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய வரலாற்று நாயகன் அப்பர் பெருமான்.
வண்ணங் கண்டு நான்உம்மை
வணங்கி யன்றிப் போகேனென்
றெண்ண முடிக்கும் வாகீசர்
இருந்தார் அமுது செய்யாதே
அண்ண லாரும் அதுவுணர்ந்தங்
கரசு தம்மைப் பணிவதற்குத்
திண்ண மாக மன்னனுக்குக்
கனவில் அருளிச் செய்கின்றார் தி12210296.
அங்கு வந்த சோழ மன்னன் சமணர் பள்ளிகளையும் ஓராயிரம் சமணர்களையும் அழித்தான். திருக்கோயிலைத் திறந்தான். அப்பர் சிவனை வழிபட்டார்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, வடதளி பழையாறை நிகழ்ச்சி. 1,400 ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சி
காலத்தால் தொன்மையான சைவத்துக்குப் பின்வந்த புத்தரும் சமணரும் சைவத் திருக்கோயில்களைப் பூட்டினர். அருகே சமணப் பள்ளிகளை, புத்த பல சாலைகளை அமைத்தனர்.
அவ்வாறு சமணரும் புத்தரும் பள்ளிகள் அமைத்த இடங்களுள் ஒன்று வெடுக்குநாறிக் குன்று அருள்மிகு ஆதிலிங்கேச்சரர் திருக்கோயில்.
சைவ மீள்எழுச்சிக் காலத்தில் ஏறத்தாழ 1500 ஆண்டுகளுக்கு முன்பு வெடுக்குநாறிக் குன்று அருள்மிகு ஆதி லிங்கேச்சரர் திருக்கோயில் மீண்டும் சைவர்களின் வழிபாட்டுக்கு வந்தது.
புத்தர் சமணர் இடையிட்டுப் பள்ளிகள் அமைந்திருந்தாலும் சைவ சமயப் பூசைகள்வழிபாடுகள் தொடர்ந்தன. இடையீடின்றி இன்றுவரை சைவர்களின் பூசைக்குரிய திருக்கோயிலாக அருள்மிகு ஆதி லிங்கேச்சரர் திருக்கோயில் தொடர்கிறது.
வெடுக்குநாறிக் குன்றுச் சிவன் கோயில் பூசைகள் கடந்த 2 வாரத்துக்கு முன் காவல்துறையால் நிறுத்தப்படும் வரை பல்லாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்திருக்கின்றன.
வெடுக்குநாறிக் குன்றுக்கு வழிபடச் செல்லும் சைவ அடியவர்கள் அடையும் துன்பத்தைக் கண்ட நெடுங்கேணி காவல்துறைப் பொறுப்பதிகாரி ஈராண்டுகளுக்கு முன்பு அங்கு சென்றவர், வழிபாட்டில் ஈடுபட்டார். அடியார்கள் குன்றில் ஏறிச் செல்வதற்கு ஏணி ஒன்றைப் பொருத்திக் கொடுத்தார்.
இந்த ஆண்டு நெடுங்கேணிக்கு மாற்றலாகி வந்து பணிபுரியும் காவல்துறைப் பொறுப்பதிகாரி வெடுக்குநாறிக் குன்றில் சைவசமயப் பூசைகள் நடைபெறுவதைத் தடுக்க முயன்றார்.
பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கின்ற நிகழ்ச்சி எனச் சைவ சமயப் பூசைகளைச் சுட்டிக்காட்டிய நெடுங்கேணி காவல் நிலையப் பொறுப்பதிகாரி, வவுனியா நீதிமன்றத்தில் விண்ணப்பித்தார்.
சைவ சமயப் பூசைகள் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் விதிகளின் கீழ் அமையாது என நீதிமன்றம் அவரது விண்ணப்பத்தை ஏற்கவில்லை.
எனவே பூசைகள் தொடர்ந்தன. பத்து நாள் திருவிழாக்கள் நடந்தன. இறுதி நாளன்று பொங்கல் அன்னதானம் என ஆயிரக்கணக்கான சைவ மக்கள் கூடி வழிபட்டனர்.
முதல் நாள் திருவிழா நிகழ்ச்சிக்கு நான் போயிருந்தேன். பூசகருடன் இணைந்து வழிப்பட்டேன். பூசை முறைகளில் பங்கு பற்றினேன்.
உடல் சிலிர்த்தேன். மெய் விதிர்விதிர்த்தேன். கை தலை மேல் வைத்தேன். கண்ணீர் ததும்பியது. உள்ளம் வெதும்பியது. தேவாரம் திருவாசகம் திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருப்புராணம் என மனம் உருகிப் போற்றிகள் பாடினேன்.
26. 9. 2020 விழா இறுதி நாள்.
அதற்குப் பின் நெடுங்கேணி காவல் நிலையப் பொறுப்பதிகாரி நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் முறையிட்டார்
1 தொல்பொருள் திணைக்களத்துக்கு உரித்தான இடம் வெடுக்குநாறிக் குன்று.
2 பொங்கல் நிகழ்ச்சிக்காகத் தீ மூட்டினர், தொல்லியல் நிலைகளுக்குக் கேடு விளைவித்தனர்.
3 உணவு சமைப்பதற்காக பகிர்வதற்காக ஐந்து கொட்டகைகளை இடைக்காலமாக அமைத்தனர். அதனால் அங்குள்ள தொல்லியல் தடயங்கள் குலைந்தன.
4 திருவிழாவுக்காக ஆட்சி குழுவினர் துண்டு அறிக்கை வெளியிட்டனர், அடியார்களைத் திரட்டினர். தொல்லியல் தடயங்களுக்கு அடியார்களின் கூட்டம் சேதங்களை விளைத்தது.
5 புத்து சமயத்தவரும் இந்த இடத்தில் வழிபாடு செய்தவர்கள் என்பதற்கான சான்று இருப்பதால் சமய நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைந்தது.
6 தொல்லியல் சட்டத்தின் 24வது அத்தியாயத்தின் 15ஆவது பிரிவிலும் 31 32 34 பிரிவவுகளிலும் மேற்காணும் 5 செயல்களும் குற்றமாக உள்ளதால் அறங்காவலர் இருவர் பூசகர் ஒருவர் ஆகிய மூவரையும் பிணையில் விட முடியாத சிறையில் அடைக்குமாறு வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் நெடுங்கேணி காவல்துறை பொறுப்பதிகாரி கேட்டார்.
தொடக்க நாளன்று வழக்கின் விண்ணப்பம் முழுமையற்றதால் குற்றச் சாட்டை ஏற்க மறுத்த நீதவான் மூவரையும் தளையிட மறுத்தார்.
தொல்லியல் ஆணையர் சான்றிதழான ஆவணத்தை நீதிமன்றத்தில் கொடுக்காததால் இரண்டாவது தவணையிலும் (23.10.2020) நீதவான் மூவரையும் தளையிட மறுத்தார். இரண்டாவது தவணைக்கு நானும் வவுனியா சென்று நீதிமன்றத்தில் பார்வையாளராக இருந்தேன்.
மூன்றாவது தவணை நவம்பர் முதல் வாரத்தில் வருகிறது.
வெடுக்குநாறிக் குன்று பூசைக்குரிய இடம் என்பதை அடுத்த தவணையில் நிலைநாட்டுவதே வழக்குரைஞர்களின் குறிக்கோள் இலக்கு. ஆட்சிக் குழுவினருக்கும் பூசகருக்கும் சைவ சமயத்தைப் பின்பற்றுவதைத் தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை என்பதை நீதிமன்றத்தில் கூறி அவர்களைத் தளையிட வேண்டாம் என வழக்குரைஞர் கூறுவர்.

மறவன்புலவு க. சச்சிதானந்தன்
சங்கிலி மன்னனின் நீத்தார் கடன் நிகழ்வுகள் நீர்நிலைகளில் நடைபெற உள்ளன.
வடக்கே கீரிமலை தொடக்கம் தெற்கே கதிர்காமம் வரை, மேற்கே உடைப்புத் தொடக்கம் கிழக்கே கல்முனை வரை பல்வேறு ஊர்களில் ஆறுகள் குளங்களில் கடல் ஓரத்தில் மன்னன் சங்கிலியனுக்கு நீத்தார் கடன் செய்யப் பலர் முன்வந்துள்ளனர்.
தீநுண்மி பரவாமல் தடுப்பதற்காகச் சமூக இடைவெளியைக் கருத்தில்கொண்டு நீத்தார் கடன் நிகழ்வுகளில் ஒருவர் அல்லது இருவர் பங்கேற்பர்.
வெள்ளிக்கிழமை 12.06.2020 காலை ஒன்பது மணிக்கு யாழ்ப்பாணம் நல்லூர் சங்கிலியன் தோப்பு சங்கிலியன் சிலைக்கு மாலை அணிவிக்க ஏணி வசதிகளை யாழ் மாநகரசபை செய்துள்ளது.
மாலை அணிவித்த பின் யமுனா ஏரி சென்று பூத்தூவி வழிபட மூத்த குடிமக்கள் வருவர்.
சனிக்கிழமை காலை 9 மணிக்குக் கீரிமலைக் கடற்கரை தொடக்கம் கதிர்காமம் மாணிக்க கங்கை வரை இலங்கை முழுவதும் பல்வேறு நீர்நிலைகளில் நீத்தார் கடன் நிகழ்வுகள் நடைபெறும். சைவ சமய முறைப்படி நடைபெறும் இந்நிகழ்வுகளில் சைவக் குருமார் பங்கேற்பர்.
இல்லத்தில் இருந்தவாரே இந்த ஆண்டு சங்கிலியன் நினைவை நீத்தார் கடன்களை மேற்கொள்ளுமாறு சைவத் தமிழ் அன்பர்களைகக் கேட்டுக்கொள்கிறோம்.
கூட்டமாகக் கூடி நீத்தார் கடன்களைச் செய்வது பொருத்தமானதல்ல. தீநுண்மி பரவலைத் தடுப்போம்.
மறவன்புலவு க சச்சிதானந்தன்
தலைவர், சிவசேனை, இலங்கை
உண்ணா நோன்பிருக்கிறேன்
போர்த்துக்கேயரின் அடிவருடிகள், ஊர்காவற்றுறையில் ஒளிந்திருந்த காக்கை வன்னியன் வாரிசுகள், யாழ்ப்பாண ஊடகங்களின் அச்சு இதழான வலம்புரி இதழ் அலுவலகத்துக்கு இன்று 20.02.2020 வியாழன் மாலை வந்தார்கள்.
அடித்து நொறுக்க முயன்றார்கள்
இடித்து அழிக்க முயன்றார்கள்
விட்டிருந்தால் தீயிட்டுக் கொளுத்தி இருப்பார்கள்.
ஊர்காவற்றுறையில் சைவத் தெருப்பெயர்களைக் கிறித்தவப் பெயர்களாக மாற்ற முனைகிறார்கள் எனச் செய்தி வெளியிட்டதற்காகத் தாக்கினார்கள்
ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தையும் காட்டு என்ற இயேசு பெருமானின் வரிகளை மறந்து, வன்முறையில் ஈடுபடுகின்ற போர்த்துக்கேயரின் அடிவருடிகளை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
வலம்புரி இதழ் மீது கைவைத்தால் சைவத் தமிழ் உலகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது.
வன்முறையைத் கண்டித்து
ஊடக சுதந்திரத்தை ஆதரித்து
சைவத் தமிழ் பண்புகளைக் காக்க
21.2.2020 வெள்ளி காலை தொடக்கம், யாழ்ப்பாணம் கண்டி வீதி சுண்டிக்குளி ஆயர் இல்லத்துக்கு முன்பாக அடையாள உண்ணா நோன்பிருக்கிறேன்.
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
அழைக்கிறேன் செந்தமிழ் அருள் விழாவுக்கு, இணைப்புப் பார்க்க
திருப்பணி நிதி அனுப்புவோர்
If sending direct to the Bank please email details immediately. email: tamilnool@gmail.com
Sampath Bank PLC, Chavakachcheri, Sri Lanka, Account No. 116 961 000 901, Swift Code: BSAMLKLX
Name: Arulmiku Vallakkulam Veerakathy Pillaiyaar Koil
OR
HDFC Bank ITC Branch Chennai
Savings Account Number 00041000182519
IFSC code HDFC0000004
Name. K. Sachithananthan
மறவன்புலவு க.சச்சிதானந்தன்
இணைப்பில் அழைப்பிதழ்
சென்னைப் பல்கலைக்கழகம்
தமிழ் இலக்கியத் துறை
பங்குனி 11, 2047 (24.03.2016) வியாழன்
காலை 1030 மணி.
அழைக்கிறேன் வாய்ப்பிருப்பின் வருக
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தனுக்கும்
இலங்கைக்கும் நெருங்கிய தொடர்பு.
ஆறுமுகநாவலர் பதிப்பித்த பெரிய புரணைம், 
அரசங்குடி சரவண முதலியாரின் கைந்நூல்.
அவரது சொற்பொழிவுகளுக்கு அந்த நூலே பயன்படும்.
தந்தையாரின் பெரியபுராண நுண் மா நுழை புலத்தின் வழிவந்த
அசஞாவுக்கும் அதுவே கைந்நூல்.
பச்சையப்பன் கல்லூரிப் பேராசிரியரான காலத்தில்
சனிக்கிழமை காலை சென்னையில் புறப்பட்டு
விமானத்தில் யாழ்ப்பாணம் வருவார்.
கரவெட்டி தச்சன்தோப்புத் திருக்கோயிலில் மாலைச் சொற்பொழிவு.
ஞாயிறு மாலையும் அங்கே சொற்பொழிவு.
திங்கள் காலை யாழ்ப்பாணத்திலிருந்து விமானத்தில் புறப்பட்டுச்
சென்னை சென்று பச்சையப்பன் கல்லூரியில் பணிக்குப் போவார்
பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்.
1959 தொடக்கம் அவர் 2002இல் மறையும் வரை சென்னையில் எனக்கு ஆசானாய், வழிகாட்டியாய், இருந்தவர் பேராசிரியர் அ. ச. ஞா.
இன்றுவரை அவருடைய மக்களும் என்னைத் தன்னுள் ஒருவராகக் கருதி வருகின்றனர்.
அப்பாவின் நூல்களை அந்தந்தத் துறை சார்ந்தவரிடம் கொடுக்கிறோம் என 2013இல் மூத்த மகன் மெய்கண்டான் மற்றும் கடைசி மகள் மீரா என்னிடம் சொன்னபொழுது, நூல்களுக்கான யாழ்ப்பாணப் புலமையாளரின் தவிப்பும் ஏக்கமும் என் கண்ணில் தெரிந்தன.
யாழ்ப்பாணத்தில் உள்ள நூலகத்துக்கு எடுத்துச் செல்கிறேன் என்றேன். மகிழ்ச்சி பொங்க, 440 தலைப்புகளைத் தந்தார்கள்.
17 பெட்டிகளில் கட்டுவித்தேன். யாழ்ப்பாணம் கொணர்ந்தேன்.
இணுவில் பொது நூலகக் காப்பாளர் அண்ணா தொழிலகம் திரு. சு. பொ. நடராசா என்னை அழைத்து நூலக வளரச்சிக்கு உதவுமாறு கேட்டது என் நினைவில் இருந்தது. 17 பெட்டிகளையும் அவர்களிடம் கையளித்தேன்.
29.6.2014 மாலை 1630 மணிக்கு முறையாகக் கையளித்தேன். படங்கள் பார்க்க
மலேசியாவில் இந்துத் தொண்டுக்கான உயர்விருது. மலேசிய இந்து சங்கம் வழங்கிய விருது – சங்கரத்தினா விருது
15.09.2013 மதியம், கோலாம்பூர் பெற்றாலிங்கு செயா குடிமக்கள் மண்டபம் மலேசிய இந்து சங்கத் தலைவர் டத்தோ மோகன் சண் வழங்குகிறார். உடனிருப்பவர் மலேசிய இந்து சங்கத் துணைத் தலைவர் கந்தசாமி. நிகழச்சி முதலாவது உலகத் திருமுறை மாநாடு 36ஆவது திருமுறை விழா
‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்று தம் வாழ்நாள் முழுவதையுமே இறைப்பணிக்காகவும், மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற நல்ல எண்ணத்தோடு துயருற்றோருக்கு உதவிக்கரம் நீட்டி உன்னத வாழ்க்கை வாழ்பவர் ஐயா திரு மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்கள். இவ்வரிய விருதினை ஐயாவிற்கு வழங்கும் விதமாக இவ்விருது பெருமை கொள்கிறது. வல்லமையின் மனம் நிறைந்த வாழ்த்துகள். ஐயாவின் பிறப்பு, வளர்ப்பு, கல்வி, அவர் பெற்ற விருதுகள் பற்றி அறிய:
1941 திசம்பர் 5இல் யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். தந்தையார் நல்லாசிரியர், சைவசிகாமணி முருகேசு கணபதிப்பிள்ளை, சைவ சமய நூல்களை 30 ஆண்டுகளாகப் பதிப்பித்து வந்தவர். தாயார் தங்கம்மா. மனைவி இராசேசுவரி, மக்கள் கயல்விழி, சிவகாமி, முருகவேள், பிஞ்ஞகன்.
கல்வி
1945 மறவன்புலவு சகலகலா வித்தியாசாலை,
1949 யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி,
1959 சென்னை பச்சையப்பன் கல்லூரி,
1969 யப்பான் தோக்காய் சுவிசங்கு கேங்கிசோ ஆய்வகம்,
1973 சிங்கப்பூர் நன்யாங்கு பல்கலைக்கழகம்,
1976 இங்கிலாந்து சதாம்பரன் பல்கலைக்கழகம்
1988 சென்னைப் பல்கலைக்கழகம்.
விருதுகள்
1963 இலங்கை அறிவியல் வளர்ச்சிச் சங்கப் புலமைப் பரிசில் விருது.
1964 இந்திய அரசின் புலமைப் பரிசில் விருது.
1969 யப்பானிய அரசின் புலமைப் பரிசில் விருது.
1973 யூனெஸ்கோவின் புலமைப் பரிசில் விருது.
1976 பிரித்தானிய கழகத்தின் சதாம்பரன் பல்கலைக்கழகப் புலமைப்பரிசில் விருது.
1976 ஆத்திரேலிய அறிவியல் கழகத்தின் வங்காள தேச வளர்ச்சிப் பயணத்துக்கானன புலமைப் பரிசில் விருது.
1986 சீசெல்சு இந்துக் கோவில் சங்கப் பாராட்டு விருது.
1987 சென்னை தலைநகர்த் தமிழ்ச் சங்கம், பாவேந்தர் பாரதிதாசன் விருது.
1995 சென்னைக் கம்பன் கழகம் சிறந்த பதிப்பாளர் விருது.
2000 திருவாவடுதுறை ஆதீனம் சிவநெறித்தொண்டர் விருது.
2008 அறவாணன் அறக்கட்டளை சாதனையாளர் விருது.
2010 சிங்கப்பூர்த் திருமுறை மாநாட்டு விழாவில் பாராட்டு.
2012 கோயம்புத்தூர் கற்பகம் பல்கலைக்கழகத்தின் மதிப்புறு முதுமுனைவர் பட்டம்.
2013 காரைக்குடிக் கம்பன் கழகத்தார், தமிழ்த் தாய்க் கோயிலில் பரிவட்டப் பாராட்டும் முடிசூடல் விருதும்.
தொழில்
1963 கொழும்பு இறக்குதிக் கட்டுப்பாட்டுத் திணைக்கள உதவியாளர்,
1966 யாழ்ப்பாணக் கல்லூரி விரிவுரையாளர்,
1966 கொழும்பு உள்ளூராட்சி அமைச்சரின் தனிச் செயலர்,
1967 கொழும்பு கடற்றொழில் ஆராய்ச்சி நிலைய அறிவியல் ஆய்வாளர்,
1977 யாழ்ப்பாணம் காந்தளகம் பதிப்பாளர்,
1977 யாழ்ப்பாணப் பல்கைலக்கழகப் பேராசிரியர்,
1979 ஐக்கிய நாடுகள் அமைப்பின் சார்பாக 23 அரசுகளுக்கு ஆலோசகர்,
1986 சென்னை காந்தளகம் பதிப்பாளர்,
1999 மின்னம்பலத்தில் கலைமாமணி பா. சசிரேகா மேற்பார்வையில் உலகெங்கும் 62 நாடுகளில் தமிழ்நூல் www.tamilnool.com விற்பனையாளர்,
2000 சத்தியமங்கலம், தாம்பரம், இராமநாதபுரம், நாகர்கோயில், சிதம்பரம், சேலம் காந்தளம் புத்தக விற்பனை நிலையங்களின் அமைப்பாளர்,
2013 யாழ்ப்பாணம் காந்தளகம் மீளமைத்துப் பதிப்பாளர்.
சைவ சமயப் பணி
1950 ஆறுமுக நாவலர் விழா, திருமுறைப் போட்டியிலும், பேச்சுப் போட்டியிலும் பங்கேற்றவர்.
1954, 1955, 1956 தவத்திரு யோகர் சுவாமியின் நேரடி வழிகாட்டலில் யாழ்ப்பாணம் சிவதொண்டன் நிலையத்தில் புராண படனர்.
1959 சென்னையில் சைவப் பேரறிஞர், பேரா. அ. ச. ஞானசம்பந்தன் வழிகாட்டலில், பாதுகாப்பில் வாழத் தொடங்கியவர்.
1962 சென்னை சைவசித்தாந்தப் பெருமன்ற இளஞ் சைவப் புலவர் மாணவர்.
1963 யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில் திருக்கோயில் – திருக்குள மீளமைப்பாளர்.
1965 தருமபுரம் ஆதீனம் 25ஆவது குருமகாசந்நிதானத்திடம் திருமுறைத் தொடக்கப் பதிப்புகள் பெற்றவர், பயின்றவர்.
1966 யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில் திருக்கோயில் – திருத்தேர் மீளமைப்பாளர்.
1968 கொழும்பு இந்து வாலிபர் சங்கத் துணைச் செயலாளர்.
1969 மார்கழியில் சுங்கைப் பட்டாணியில் டத்தோ வைத்தியலிங்கம் தலைமையில் நடைபெற்ற மலேசிய இந்து இளைஞர் பேரவை மாநாட்டில் பங்கேற்றவர்.
1971 சிங்கப்பூரில் திரு. ஈ. வி. சிங்கனுடன் இணைந்து ஞாயிறு திருக்குறள் வகுப்புகளில் ஆசிரியர்.
1971 பிஜித்தீவில் தென் இந்திய ஐக்கிய சன்மார்க்க சங்கம் மற்றும் இலவுற்றோக்கா, விவேகானந்தர் பாடசாலையில் திருமுறை ஆசிரியர்.
1971 சாவகத்துக்கு அருகே, பாலித்தீவுச் சிவன் கோயில்களில் வழிபாடு, சாவகத்தில் சொக்சகார்த்தாவில் பெரும்பாணண் சிவன்கோயிலில் வழிபாடு.
1971 இலங்கை இந்து இளைஞர் பேரவை அமைப்பாளர், 60 அமைப்புகளின் கூட்டமைப்பின் தொடக்கத் தலைமைச் செயலாளர் 1977 வரை. ஆண்டு தோறும் கொழும்பு, நீர்கொழும்பு, வவுனியா, இலுப்பைக்கடவை, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் இந்து இளைஞர் மாநாடுகள் நடத்தியவர்.
1973 இலங்கை இந்து இளைஞர் பேரவை தலைமைச் செயலாளராகத் தீவு முழுவதும் இந்து இளைஞர் கொடிநாள் 1975இல் நடத்தத் தொடங்கி 1977 வரை நடத்தி வந்தவர்.
1973 மதுரையில் நடைபெற்ற சைவ மாநாட்டிற்கு இலங்கை இந்து இளைஞர் பேரவை சார்பில் இலுப்பைக்கடவை, திரு. கணேசமூர்த்தி பேராளராகச் செல்ல வழிவகுத்தவர்.
1974 யாழ்ப்பாணத்தில் நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை நடத்திய அமைப்புக் குழுத் துணைச் செயலாளர்.
1975 இப்பைக்கடவை இந்து இளைஞர் மன்ற உறுப்பினர் இளைஞர் பணிப் பயிற்சிக்காகக் கனடாவுக்கும் கொழும்பு இந்து வாலிபர் சங்க உறுப்பினர் யப்பானுக்கும் செல்ல ஏற்பாடு செய்தவர்.
1976 மலேசிய, மொரிசியசு, பிஜி நாடுகளின் பேராளர்கள் கலந்துகொண்ட உலக இந்து இளைஞர் மாநாட்டைக் கொழும்பில் நடத்தியவர். டத்தோ வைத்தியலிங்கம் மலேசியவில் இருந்து வந்திருந்த பேராளர்.
1977 விசுவ இந்து பரிசத்தின் காசி மாநாட்டுக்கு இலங்கை இந்து இளைஞர் பேரவைப் பேராளர்களை அனுப்பியவர்.
1979 யாழ்ப்பாணம், கைதடி, பிள்ளையார் கோயில் தேர்த்திருவிழாவில் அனைவரும் வடம் பிடிக்க முடியாத நிலையில், அவர் தலைமையில் அறவழிப் போராட்டம், தேர்த்திருவிழா நிறுத்தம், பின் அனைவரும் கோயிலில் அனைத்து நிலைகளிலும் வழிபடும் உரிமை.
1980 மொரிசியசு தமிழ்க்கோயில் கூட்டமைப்புக்கு ஆலோசகர், கருத்துரை வழங்கி வந்தவர்.
1984 சீசெல்சு இந்துக் கோயில் சங்க நிறுவனர். 200 ஆண்டுகாலமாகச் சீசெல்சில் வாழும் தமிழருக்கான முதலாவது கோயில் அமைக்கக் கால்கோளிட்டதால் பிள்ளையார் நகர் நடுவே அருள் இன்றும் பாலிக்கிறார்.
1985 சீசெல்சு இந்துக்களுக்குத் தைப் பொங்கல், தீபாவளி நாள்கள் பகுதி விடுப்புகளாகச் சீசெல்சு இந்துக் கோயில் சங்கம் வழியாக அரசிடம் ஆணை பெற்றவர்.
1988 முருகன் பாடல்கள் நூல், 12 பகுதிகள் 4,800 பக்கங்கள் கொண்ட தொகுதியைக் கொழும்பு தெட்சணத்தார் வேளாளர் மகமைக்காகத் தயாரித்தவர்.
1989 சிதம்பரம் ஆருமுகநாவலர் அற்க்கட்டளைக் குழுவில் யாழ்பாணம் சைவபரிபாலன சபையின் சார்பில் இரு ஆண்டுகள் உருப்புரிமை.
1994 மலேசிய சைவநெறித் திருக்கூட்டத்தினருக்காகச் சிவருமோத்திரம் நூலைப் பதிப்பித்தவர்.
1994 மலேசிய சைவ நெறித் திருக்கூட்டம், மலேசியச் சைவப் பெரியார்கள் தான்சிறீ சோமசுந்தரம், ஆறுமுகம், குலவீரசிங்கம் ஆகியோர் ஆதரவுடன் பெரியபுராணம் மூலமும் ஆறுமுகநாவலர் மற்றும் ஏழாலை மு. கந்தையா எழுதிய சூசனங்களைப் பதிப்பித்தவர். கோலாலம்பூர் செட்டியார் மண்டபத்தில் நடைபெற்ற வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டவர்.
1996 தருமபுரம் ஆதீனம் 26ஆவது குருமகாசந்நிதானத்தின் ஆசியுடன் மலேசியச் சைவப் பெரியார்கள் ஆறுமுகம், குலவீரசிங்கம் வழிகாட்டலில், தருமபுரம் ஆதீனம் பன்னிரு திருமுறைப் பதிப்பு மீண்டும் வெளிவரப் பணிபுரிந்தவர். 12 திருமுறைகள் 16 பகுதிகளாக வெளிவரும் திட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக உழைத்தவர். செம்பதிப்பாக, 18,600 பக்கங்கள் கொண்ட அப்பதிப்புப் பணியில் முழுமையாக ஈடுபட்டு வருபவர்.
1997 இலங்கையில் இந்துக் கோயில்கள் அழிக்கப்படுவதைத் தடுக்கும் முயற்சியாகத் தமிழகத்தில் அரசியலாருடன் தொடர்புகொண்ட முயற்சிகளால் சென்னைச் சிறையில் ஒருமாதம் இருந்தவர்.
2003 திருக்கயிலாயப் புனிதப் பயணம் மேற்கொண்டவர். ஆவணி நான்காம்பிறை நாளில் திருக்கயிலாயக் காட்சி பெற்றவர்.
2005 மின்னம்பலத்தில் தருமபுரம் ஆதீனம் பன்னிரு திருமுறை முழுவதையும் www.thevaaram.org தளத்தில் ஏற்றி உலகெங்கும் 72 நாடுகளில் 720 நகரங்களில் நாள்தொறும் சராசரியாக 20,000 தட்டித் திறப்பாளர் பார்த்துப் பயனுறச் செய்தவர்.
2007 திருமலை திருப்பதி தேவத்தானத்தின் பன்னிரு திருமுறைத் தெலுங்கு மொழிபெயர்ப்புக்கான ரூ. 13 இலட்சம் நிதி ஒதுக்கீட்டுத் திட்ட ஒருங்கிணைப்பாளர்.
2009 பன்னிரு திருமுறையின் 18,268 பாடல்களில் 10,585 பாடல்களைத் தருமபுரம் ப. சுவாமிநாதன் குரலிசையாகப் பாடி முடித்திருக்க, குரலிசையாகப் பாடி முடிக்காத எஞ்சிய பாடல்களைப் பதிவுசெய்யச் சிங்கப்பூர்த் திருமுறை அன்பர்களின் நிதி உதவியுடன் பொற்றாளம் துரை. ஆறுமுகம் மேற்பார்வையில் ஓதுவார் பா.சற்குருநாதன் பாடி முடிக்கும் திட்டத்தை ஒருங்கிணைப்பவர்.
2010 பன்னிரு திருமுறையின் மியன்மார், சிங்களம், மலையாளம், கன்னடம், வடமொழி, இந்தி மொழிபெயர்ப்புகள் வெளிவருவதற்காக 25 மொழிபெய ர்ப்பாளரின் பணிகளை ஒருங்கிணைப்பவர். மலாய் மொழிபெயர்ப்பு வெளிவர ஆக்கபூர்வமான முயற்சிகளில் ஈடுபடுபவர்.
2011 பன்னிரு திருமுறையில் உள்ள தமிழ் ஒலிகளை ஞால மொழியொலி நெடுங்கணக்குடன் இயைந்து ஒப்பு நோக்கிய மொழியியலாளர் பேரா. புனல் க. முருகையன் முயற்சியை நூலாக்கி, கணிணி மொழியியலாளர் பேரா. வினோதராசன் வழியாகப் பன்னிரு திருமுறையின் 18,268 பாடல்களையும் 20 மொழியாளர் ஒலிபெயர்ப்பாகப் பயிலுமாறு ஒருங்கிணைப்பவர்.
2011 தாய்லாந்து அரச குருவான தவத்திரு வாமதேவ முனிவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, தாய்லாந்து அரசரின் திருக்கோயிலில் மார்கழி 30 நாள்களும் திருவெம்பாவைப் பாடல்களைச் செம்மையாக ஓத உதவியாக, கிரந்தம், சீயம் ஆகிய வரிவடிவங்களில் நூலாக்கிக் கொடுத்தவர்.
2011 மியன்மாரில் மாநிலங்கள் தோறும் தேவாரம் மின்னம்பலத் தளப் பரப்புரையாளர். மியம்மா மொழிக்குத் திருமுறை மொழிபெயர்ப்புக்குத் தளம் அமைத்தவர். மியம்மா மொழிபெயர்பாகத் திருவெம்பாவை நூல் வெளியீட்டை ஒருங்கிணைத்தவர்.
2011 கம்போடியாவில் காரைக்காலம்மையார் சிலைகள் தாங்கிய கோயில்கள் சென்று காணொலிகளாக்கியவர், கம்போடியாவின் 1008 சிவலிங்கத் திருமேனிகளின் கோயில்கள் சென்று காணொலிகளாக்கியவர்.
2011 சிங்கப்பூர் செண்பகப் பிள்ளையார் கோயிலாரின் திருமுறை வகுப்பு மாணவர்களுக்காக நூல்கள், சிங்கப்பூர்த் திருமுறை மாநாட்டு அமைப்பாளரின் மாநாடுகளுக்காக நூல்கள் தயாரித்தவர்.
2012 ஆத்திரேலியாவின் மாநிலத் தலைநகர் தோறும் சென்று தேவாரம் மின்னம்பல தளம் பரப்புரைத்தவர்.
2012 ஆறுமுகநாவலர் தயாரித்த 71 நூல்களையும் மின்னம்பலம் வழி எவரும் படிக்குமாறான செயற்றிட்ட ஒருங்கிணைப்பாளர். இத்திட்ட முன்னோடி ஆத்திரேலியா மெல்போர்ண் வாழ் பொறியியலாளர் திரு. சிறீஸ்கந்தராசா.
2012 சிலாங்கூர், பெராக், பினாங்கு, கெடா, மலாக்கா, சரவாக்கு, சபா மாநிலங்களிலும் கோலாம்பூர் மற்றும் இலபுவான் நகரங்களிலும் மலேசிய இந்து சங்கத்தின் கிளைகள் தோறும் சென்று தங்கி, திருமுறை வளர்ச்சிப் பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டவர்.
2013 ஓராயிரம் ஆண்டுகளாக மறவன்புலவில் தம் முன்னோர் அறங்காத்துத் தொண்டாற்றி வரும் திருக்கோயில் இலங்கையின் 30 ஆண்டுகாலப் போரினால் சிதைந்து போக, புதுப்பித்து மீளமைக்கும் திருப்பணியாளர்.
மறவன்புலவு சச்சிதானந்தம்
அண்ணை, கண்ணீரை வரவழைத்தார் அந்த எழுத்தாளர் என்றார் தொலைப்பேசியில் அழைத்த திருமதி அங்கயற்கண்ணி.
யார்? என்று கேட்டேன்.
பெயர் சரியாக விளங்கவில்லை. இப்பொழுது (29.8.13 வியாழக்கிழமை காலை 0730 மணி) கேட்டுக் கொண்டிருக்கிறேன், இலங்கை வானொலியில் அவரது செவ்வி.
அப்படி என்ன சொன்னார்? கேட்பவரை ஏன் அழ வைக்கிறார்?என்றேன்.
உங்களைப் பற்றிச் சொன்னவை எனக்குக் கண்ணீரை வரவழைத்தன. நீங்கள் அவருக்குக் கொடுத்த உற்சாகமே, ஊக்கமே, ஆதரவே, வழிகாட்டலே அவரைச் சிறுகதை எழுத்தாளராக்கியதாம் என்று உணர்ச்சிவசப்பாட்டார் திருமதி அங்கயற்கண்ணி.
அந்த எழுத்தாளர் காந்தளகத்தைப் பாராட்டினார். அங்கு பணி புரியும் திருமதி சசிரேகாவைப் பாராட்டினார். முன்பு தன் வாழ்க்கை அநுபவங்களை எழுதினாராம். இப்பொழுது சிறுகதைத் தொகுதி வெளிவந்திருக்காம், புகழ் பூத்த வானதிப் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறார்களாம் என்றார் திருமதி அங்கயற்கண்ணி.
ஓ.. ஈசுவரன் பேசுகிறாரா? அவர் என் நண்பர். வானொலியில் செவ்வியைக் கேட்டு முடிந்ததும் நேரே அவருடன் பேசுங்கள் எனக் கூறிய நான் திரு. ஈசுவரனின் தொலைப்பேசி எண் கொடுத்தேன்.
ஈசுவரன் எனக்கு நண்பர். 1959இல் தொடங்கிய நட்பு. அவரது 72ஆவது பிறந்த நாளுக்குக் கொழும்பில் அவரது விருந்தோம்பலை ஏற்ற செய்தியை எழுதினேன்.
நாளை மறுநாள் 31.8.13 சனிக்கிழமை மாலை 0630 மணி) . கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் ஈசுவரினின் சிறுகதைகள் நூல் வெளியீட்டு விழா, நான் கலந்துகொண்டு பாராட்டிப் பேச உள்ளேன்.
மறவன்புலவு க.சச்சிதானந்தன்

இந்தியாவிலிருந்து இலங்கைக்குச் சென்றவரே சிங்களவர் எனத் தில்லியிலுள்ள இலங்கைத் தூதர் காரியவாசம் சில வாரங்களுக்கு முன் சொன்னாரல்லவா?
மகாவமிசம் (கிபி 500 அளவில் வெளியானது) என்ற நூலும் அதற்கு முன்பு வெளியான அட்டகதை, தீபவமிசம் (கிபி 100 அளவில் வெளியானவை) ஆகிய பாளி நூல்களுமே காரியவாசம் கூற்றுக்கு ஆதாரம்.
பண்டைய இந்திய நூலாசிரியர் எவரின் குறிப்போ, வேறு வரலாற்றுச் சான்றுகளோ இந்தக் ‘கதைக்கு’ ஆதாரமாக இதுவரை கிடைக்கவில்லை.
இலங்கைக்குப் புத்தர் பயணித்தமையை மகாவமிசமும் அதற்கு ஆதாரங்களாக அமைந்த அட்டகதை, தீபவமிசம் போன்ற நூல்களும் சொல்கின்றன. மணிமேகலைக் காப்பியத்திலும் (கிபி 200 அளவில் வெளியான நூல்) இக் குறிப்பு உண்டு. பிற்காலத்தில் சீனப் பயணிகளும் இக்குறிப்பைப் பதிவுசெய்துளர் (See: Foreign Notices of South India by Neelakanda Sastri, Uni. of Madras).
இலங்கைக்குப் புத்தர் பயணித்த செய்தியை வட இந்திய நூலாசிரியர் எவரும் சொன்னதாகத் தெரியவில்லை, வரலாற்றுச் சான்றுகளும் அங்கில்லை.
காரியவாசம் சொன்ன விசயனின் வருகை பற்றிய குறிப்பும் படமும் கீழே பார்க்க. சென்னை – காந்தளகத்தில் (0091 44 2841 4505) இந்தப் படங்கள், நான் எழுதிய இச்செய்திகள் தாங்கிய நூல் விற்பனைக்கு உண்டு.
மணிமேகலை ஆங்கில மொழிபெயர்ப்பு (சைவ. சித். நூற் பதி. கழகம்) மற்றும் Foreign Notices of South India by Neelakanda Sastri, (Uni. of Madras) காந்தளகத்தில் கேட்டால் பெற்றுத் தருவர்.
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
ஒருவரை ஒருவர் விரும்பும் தலைவனும் தலைவியும் சந்திக்கும் நேரம். தலைவியைத் தலைவன் தொடுவான்.
தலைவி கழுத்தை வளைப்பாள், தலை குனிவாள், முகம் சிவப்பாள், கொடுப்புக்குள் சிரிப்பாள், உடல் நெளிவாள், கால் விரல்களால் நிலத்தில் கோடிடுவாள், மேனி சிலிர்ப்பாள். காதுகளைக் கூர்மையாக்கிக் கொள்வாள்.
கண்களின் கடைக்கோடிக்கு விழிகள் போவதும் வருவதுமாய்… அடுத்துத் தலைவன் என் செய்வானோ என்ற ஏக்கம் ஒருபுறம்.. ஏதும் செய்யாமலிருக்கும் தலைவனின் தேக்கத்தால் வரும் ஏக்கம் மறுபுறம்..
இவ்வளவு நீண்ட விளக்கத்துக்குத் தமிழில் ஒரே சொல் நாணம்…. தலைவியின் நாணம்.
இறியூனியன் தீவில் பரத நாட்டியப் பள்ளி. கலாச்சேத்திராவில் பயின்ற ஆசிரியை சொல்லிக் கொடுக்கிறார். நாணத்துக்குரிய அடவுகளைக் கூறுகிறார். பிரஞ்சு மொழியில் விளக்குகிறார். பதம் பிடித்துக் காட்டுகிறார்.
மாணவிகளுள் ஒருத்தி. 18 வயதுப் பெண். தமிழ் மொழி தெரியாத தமிழ்ப் பெண். பிரஞ்சு மொழியில் கேட்கிறாள். நாணம் என்றால் என்ன? பிரஞ்சு மொழியிலோ ஆங்கில மொழியிலோ அதற்கான சொல்லை ஆசிரியையால் கூற முடியவில்லை. தலைவன் தொட்டால் ஏன் நாண வேண்டும்? இது அடுத்த வினா.
அந்த மாணவி மட்டுமன்று, அங்கிருந்த மாணவிகளுள் பெரும்பாலோரின் உள்ளத்தில் எழுந்த வினாக்கள் அவை.
250 ஆண்டு காலமாகத் தமிழர் இறியூனியனில் வாழ்கின்றனர். பிரஞ்சுக்காரர், ஆபிரிக்கர், கலப்பினத்தார் நடுவே இன்றைய (2013) மதிப்பீட்டில் ஐந்து இலட்சம் தமிழர்.
தமிழ் மரபுகளை மழுங்கடிப்பதையே தலைமுறைகள் பலவூடாக ஊக்குவிக்கும் பிரஞ்சு மேலாதிக்கச் சூழல். வெங்கானத்தில் காணற்கரிய நீரூற்றையும் சுற்றிய நிழல்தரு மரங்களையும் போல, அங்கங்கே தமிழ் ஆர்வலர்கள், கோயில்கள், ஊடகங்கள், நூல்கள், சைவ சமயச் சடங்குகள், இசை நாட்டியப் பள்ளிகள், தமிழ் வகுப்புகள். இவையே தமிழ் மரபுகளுக்கு நங்கூரங்கள்.
நாணம் என்ற தமிழ் மரபின் பொருளை அறியாமலே பேதையாகிப் பெதும்பையாகி நங்கையாவோர்.
இறியூனியனுக்கு மட்டுமன்று, புலம்பெயர்ந்து உலகெங்கும் பல நாடுகளில் பரந்து வாழும் தமிழர், அங்கங்கே பெற்று வளர்க்கும் தமிழ்த் தலைமுறைக் கொடுப்பனவுகள் இவை.
30 ஆண்டுகளுக்கு முன் புலம்பெயர்ந்த தமிழர் ஆத்திரேலியாவில் பெற்றெடுக்கும் தமிழ்க் குழந்தைகள் விதிவிலக்காவாரா? அவர்களுள் பெரும்பாலோர் கொண்ட கோலம் அதுவே. ஆனாலும் விதிவிலக்காக வாழ்கிறோம் என்கின்றனர் மெல்போணில் வாழும் வாசன் இல்லத்தவர்.
வாசனும் மங்களமும் பெற்றெடுத்த மக்கள், 18 வயதான இலட்சணியா, 14 வயதான வசீசர்.
மயிலாப்பூரின் கிழக்கு மாட வீதியில், பாரதப் பண்பாட்டுப் பேழை போற்றும் பாரதீய வித்தியா பவன அரங்கில், 2013 மார்கழி இசை விழாவிற்குப் பங்களிப்பாக, 06. 01. 2013 அன்று சென்னையின் விற்பன்னர் நடுவே, தெரிந்து சுவைக்கும் சுவைஞர் குழாம் சூழ இலட்சணியாவும் வசீசும் ஆடிய பரத நாட்டிய நிகழ்ச்சி.
அலாரிப்பில் கணேச கவுத்துவம். சிறீகாந்தரின் செழுமைக் குரலில் கஜானனம். எடுத்த எடுப்பிலேயே வசீசரின் கால் அடிகளின் கட்டுக்கோப்பும் இலட்சணியாவின் முக பாவங்களும் மேடையைக் கொள்ளைகொண்டன. இருவரா? மேடையில் ஒருவரா? அதே பதங்களை ஒரே நேரத்தில் இருவரும் இரு பாவைகளாக, பதம் பிடித்தனரே, இம்மியும் பிறழாது ஒத்திசைந்து நடனமாடினரே.
அடியார் மேல் பரிவு கொண்டார். காலனைக் காலால் உதைத்தார். மார்க்கண்டேயருக்கு வாழ்வளித்தார். நம்மை ஆட்கொண்டவர். மௌவலும் மாதவியும் புன்னையும் வேங்கையும் செருந்தியும் செண்பகமும் குருந்தும் முல்லையும் வளரும் சோலை சூழ்ந்த திருக்கோணமலை இறைவன் எனத் திருஞானசம்பந்தர் 1400 ஆண்டுகளுக்கு முன் பாடிய தேவாரப் பாடல். மூன்றாம் திருமுறை 123ஆம் பதிகம் 6ஆவது பாடல். பரிந்து நன் மனத்தால் எனத் தொடங்கும் அப்பாடல் வரிகளுக்குப் பதம் பிடித்தனர் இலட்சணியாவும் வசீசரும். இருவரின் தாய்வழிப் பாட்டனார் யாழ்ப்பாணத்து மாவிட்டபுரத்தார். எனவே இலங்கையர்கோன் வழிபட்ட ஈசருக்கு அஞ்சலி!
அடுத்துத் தோடி இராகம், ஆதி தாளம், ஆதிசிவனைக் காணவே எனத் தொடங்கும் பாடல். தண்டாயுதபாணிப்பிள்ளை ஈந்த பாடல் வர்ணமாக. ஒன்பான் சுவைகள், ஒன்பதுக்கும் முக பாவங்கள் முன்னெடுத்த பதங்கள். நரேந்திராவின் சொற்கட்டுகளுக்கு நடனமணிகள் இருவர் ஈந்த அசைவுகள். ஒருவர் அசைந்த வழி ஒத்திசைந்த மற்றவரின் அசைவு. குழலிசைத்தார் அதுல் குமார். மத்தளம் ஒலித்தார் அரிபாபு. கலையரசன் இராமநாதன் வயலின் இசைத்தார். இலட்சணியா முக பாவங்களில் மிளிர்ந்தார், வசீசர் காலடிக் கட்டமைப்பு முதலாகக் கழுத்தசைவு வரையாக இயைந்து அசைந்து பரந்து ஒளிர்ந்தார்.
இருவரும் ஒரே நேரத்தில் மேடையிலாயின் மேடை பொலியுமா? அல்ல அல்ல, ஒவ்வொருவரும் தனித் தனியே திறமையாளர். அவரவர் பாணி அவரவருக்கு. இருவரையும் தனித தனியாகப் பார்க்கலாமா என்ற குரு நரேந்திரனாரின் ஆவலுக்கு விடை தந்தனர் வசீசரும் இலட்சணியாவும்.
கருணைரஞ்சனி இராகத்தில், கண்ட தாளத்தில் அம்புசம் கிருட்டினா இசையில், திருமால் பூவுலகிற்குக் குருவாயூரப்பனாக வந்து அருளுவதை வியக்கும் அடியாராக, ஓம் நமோ நாராயணா எனத் தொடங்கும் பாடலுக்குத் தனியாகவே வந்து நடனமாடி அசத்தினார் இலட்சணியா.
செஞ்சுருட்டி இராகத்தில் ஆதி தாளத்தில் காவடிச் சிந்துக்கு ஆடி அசத்தினார் வசீசர். பழனி மலையையும் காவடி ஆட்டத்தையும் மெல்போணில் இருந்தவாறே கண்டவரோ கேட்டவரோ வசீசர்? காவடிக்காக அவர் தோள்கள் வளைந்த அழகும் கால்கள் வைத்த அடி ஒழுங்கும் வியப்பில் என்னை ஆழ்த்தின.
அடுத்துக் காம்போதி இராகம், ஆதி தாளம், குழலூதி மனமெல்லாம் எனத் தொடங்கும் பாடல். ஊத்துக்காடு வேங்கட சுப்பிரமணியனாரின் பாடல். மயிலே வசீசரைப் பார்த்துப் போலச்செய்யுமோ என்ற மயிலாட்டம் இடையில் வந்தபோது என் கைகள் தாமே சேர்ந்தன, தட்டின. உள்ளமோ ஆர்ப்பரித்தது.
நாட்டிய இணையர் தனஞ்செயனும் சாந்தா தனஞ்செயனும் கற்பித்து ஆளாக்கிய நரேந்திராவின் மாணாக்கர் இலட்சணியாவும் வசீசரும் மேடையில் ஆடுந்தொறும் நரேந்திராவின் முகத்தில் பூரிப்பு. தன் முயற்சிக்கு முழு வடிவம் கொடுத்தனரே இருவரும் என்ற மன நிறைவு.
சிறப்பு விருந்தினரான சாந்தா தனஞ்செயன் மேடைக்கு வந்து இலட்சணியாவையும் வசீசையும் பாராட்டி மகிழ்ந்தார்.
திருமந்திரப் பாடலான அன்பு சிவம் இரண்டென்பர் எனத் தொடங்கும் பாடலுக்கும் அதையொத்த இரு பாடல்களுக்கும் இலட்சணியாவும் வசீசரும் ஆடி மகிழ்வித்தனர்.
பிருந்தாவன சாசங்க இராகத் தில்லானாவுடன் நிகழ்ச்சி நிறைவெய்திய பின்னரும், பாட்டியார் பாலம் இலட்சுமணனின் இராமகிருட்டிண மிசன் சார்ந்த மங்களப் பாடலை நினைவூட்டிச் சுவாமி அரங்கானந்தாவின் பாடலுக்கு நடனமாடி மங்களம் சேர்த்தனர் இருவரும்.
கொல்லன் தெருவில் ஊசி விற்கலாமா? மயிலாப்பூரில் பரத நாட்டிய மரபுகளைக் காட்டிப் பிழைக்கலாமா?
அருள்மிகு கபாலீச்சரர் கோயிலின் மாட வீதியில் தொடங்கி தெற்கே திருவான்மியூர் வரை, மேற்கே மாம்பலம் வரை, வடக்கே திருவல்லிக்கேணி வரை படைப்பாற்றலின் மேதைகள், இசையில் நுண்மா நுழைபுலத்தார், நடனத்தின் துல்லிய மரபுகளைத் துலக்குவோர் குவிந்து வாழ்கின்றனர் . அவர்களின் ஆற்றல், திறன், புலமை யாவுக்குமான அரங்குகள் தெருவுக்குத் தெருவாய், சந்து பொந்தெங்கும் விரவியுள.
மெல்போணில் பிறந்து, வெள்ளையர் நடுவே வளர்ந்து, ஆங்கில மொழி மூலம் கற்று, தமிழ்க் கலைகளோ, விளையாட்டுகளோ, பண்பாட்டுக் கூறுகளோ இல்லாத வெங்கானத்தில் நீரூற்றான பரத நாட்டியப் பள்ளி ஒன்றில் பயின்ற இருவர், மயிலாப்பூரின் பாரதீய வித்தியா பவன அரங்கில் நாணத்துக்கு இலக்கணம் வகுத்தனராயின், மயிலுக்கு ஆட்டத்தையும் மானுக்கு துள்ளலையும் கற்பித்தனராயின் அந்த நிகழ்ச்சியைக் கண்ணாரக் கண்டு களிகொண்டு என் உள்ளம் சிலிர்த்ததை, யான் பெற்ற இன்பத்தை என் தமிழில் பகிரவேண்டாமா?
என் தமிழ் எழுத்தை ஊக்குவித்தவர் இலட்சுமண ஐயர். என் தொண்டை ஊக்குவிப்பவர் அவரின் அருமைத் துணைவியார் பாலம் இலட்சுமணன். இருவரும் ஈந்த இளைய மகள் பெருமாட்டி மங்களம். அவர் கணவர் திருவுடையார் சீனிவாசன். இருவரும் இடையறாது உழைத்தனர். தம்மக்கள் இலட்சணியாவையும் வசீசைரையும் பரத நாட்டிய விற்பன்னராக்கினர். ஆத்திரேலியாவில் தமிழ் மரபு பேணுகின்றனர். அவர்களின் முயற்சிக்குத் தமிழுலகம் கடப்பாடுடையது.