Tag Archives: முகில் தினகரன்

‘உப்பு’…..கவிதை

முகில் தினகரன் கடல் காடு பூத்த கசப்பு மலர்! காலங்கள் கரைக்காத கண்ணீர்ச்சுவை! தூத்துக்குடி மக்களின் சோத்துப் பசி தீர்க்க சமுத்திரக் கன்னி வழங்கிய சாத்துக்குடி சாறு! நீரில் பிறந்து நீரில் சாகும் சர்க்கரையின் சக்களத்தி! இது குறைந்து விட்டால் எப்பண்டமும் குப்பைத் தொட்டிக்கு உறவு! இது எகிறி விட்டால் எம்மனிதனும் சவப்பெட்டிக்கு உறவு! ரத்த அழுத்த ரவுடிக்கும் கிட்னி ஃபெயிலியர் கில்லாடிக்கும் வெண்சாமரம் வீசும் சைவ சண்டியர்! வாலிப வயதில் உன்னுடன் வரைமுறையின்றி உறவு கொண்டோர்க்கு முதுமை இரவில் சப்பை உணவையே சிம்னியாக்கி ...

Read More »

காவிரிக்கு ஒரு கடிதம்

முகில் தினகரன் (1)   காவிரிக்கு ஒரு கடிதம் அன்புள்ள காவிரியே! என் நினைவின் பக்கங்களில் மறைத்து வைத்திருக்கிறேன் நீ தளும்பித் தளும்பிச் சிரித்த அந்தக் கருப்பு வெள்ளைக் காட்சிகளை! உன்னில் மூழ்கிக் குளித்து உவகை ஊஞ்சலாட நயாகரா நீர்வீழ்ச்சியே விண்ணப்பமிட்ட காலமுண்டு! புது வெள்ளக் காலத்தில் பூப்படைந்த பெண்ணாய் நாணம் பொங்க நீ நளினத்தோடு வளைந்து நெளிந்து வருவதைப் பார்த்த இந்தக் கண்கள் இன்று நீரற்று வெள்ளச் சேலை கட்டிய விதவையாய்… மொட்டையடித்து நீட்டிப் படுத்திருக்கும் உனைக் கண்டு சிந்திய கண்ணீர் எப்போதோ ...

Read More »

கூர் வாள்

முகில் தினகரன் கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட வீடியோக் காமிராக்கள் லென்ஸ் கண்களால் அந்த பெட்டியை விழுங்கிக் கொண்டிருக்க, பதினைந்திற்கும் மேற்பட்ட பத்திரிக்கை நிருபர்கள் அந்த ஆவேசப் பேச்சைக் குறிப்பெடுத்துக் கொண்டிருக்க, ஊழல்…லஞ்சம்….அதிகார துஷ்பிரயோகம் போன்ற சமூக அவலங்களைத் தன் வார்த்தைச் சாட்டையால் விளாசிக் கொண்டிருந்தார் ‘கூர் வாள்” பத்திரிக்கையின் ஆசிரியர் துரைஜீவானந்தம். ‘சார் இந்த வருடத்தின் சிறந்த புலனாய்வுப் பத்திரிக்கையாக உங்கள் ‘கூர் வாள்” தேர்ந்தெடுக்கப் பட்டதற்கு காரணம் உங்களோட தைரியமான எழுத்துக்களா?…இல்லை உங்களோட சமூக கண்ணோட்டமா?” ஒரு பெண் நிருபர் தன் நீண்ட ...

Read More »

விழுதுக்குள் வேர்

முகில் தினகரன்   “டெய்லர் ப்ளவுஸ் தைச்சிருப்பான்…ஈவினிங் வரும் போது மறக்காம வாங்கிட்டு வந்திடுங்க!”  டிபன் காரியரை நீட்டியபடியே சொன்னாள் சுசீலா.   “ஏண்டி இதையெல்லாம் என்கிட்ட சொல்றே!…ஆபீஸ் டென்ஷன்ல மறந்தாலும் மறந்துடுவேன்..” சலித்துக் கொண்டான் ஜெயபால்.   “அதெப்படி பொண்டாட்டி சொன்னது மட்டும் மறந்து போகுமா?..அப்ப யார் சொன்னா மறக்காது?” இடக்காய் கேள்வி கேட்டாள்.   “அய்யோ காலங் காத்தால எனக்கு இது தேவையா? சரி..வாங்கிட்டு வந்துடறேன்..ஆளை விடு!”   ஜெயபால் திரும்பி நடக்க, “டேய் கொஞ்சம் இருடா!” தாயின் குரல் கேட்டது. ...

Read More »

குழந்தையும் தெய்வமும்

முகில் தினகரன் “டேய் ரகு…பாவம்டா அந்தப் பொண்ணு…குழந்தைக்கு காய்ச்சல் அதிகமாகி…தூக்கித் தூக்கிப் போடுதாம்..ஆம்பளை இல்லாத வீடு..ஆஸ்பத்திரி வரைக்கும் துணைக்குப் போயிட்டு வாடா..” “போம்மா…ஃபுட் பால் மேட்சுக்கு டிக்கெட் வாங்கியிருக்கேன்…என் நண்பர்களெல்லாம் எனக்காக காத்திட்டிருப்பாங்க…நான் போயே ஆகணும்..என்னால் முடியாது..தயவு செய்து வற்புறுத்தாதே!” “டேய்..அந்த குழந்தை உயிரை விட உனக்கு புட் பால் மேட்சுதான் முக்கியமாக்; போச்சா?” அம்மா கத்தினாள். எவ்வளவோ மறுத்தும் அம்மா பிடிவாதமாய் நின்று என்னை விரட்டிட, மேட்ச் ஆசையை ஒரங்கட்டி விட்டு, அரை மனதுடன் முணுமுணுத்துக் கொண்டே கால் டாக்ஸி பிடித்து, அந்தப் ...

Read More »

அவசரப் புத்தி

முகில் தினகரன் நரசிம்மன் சொன்ன அந்த தகவல் திவாகரனை லேசாக அதிரச் செய்தாலும், அதை வெளிக் காட்டி கொள்ளாமல் வெகு இயல்பாக பேசி விட்டுக் கிளம்பினான். பஸ்சில் வரும் போது கூட நரசிம்மன் பேசிய வார்த்தைகளே திரும்ப திரும்ப ஞாபகத்தில் வந்து போயின. “ஹல்லோ மிஸ்டர் திவாகரன்…எப்படி இருக்கீங்க?…ம்…உங்களுக்கென்ன?…மனைவி பெரிய கம்பெனில மேனேஜர் ஆயிட்டாங்க!…பதினஞ்சாயிரம் சம்பளம் வரும்!…நாங்களும் அந்தக் கம்பெனிலதான் வேலை பார்க்கறோம்…என்ன பிரயொஜனம்?…நானூறு ரூபா இன்கிரிமெண்ட் வாங்கறதுக்குள்ள நாக்குத் தள்ளிடுது…உங்க மனைவிக்கு..ஒரே ஹைக்குலே ஏழாயிரத்துக்கும் மேல இன்கிரீஸ்…ஹும் நீங்க பெரிய அதிர்ஷ்டசாலி சார்!…பின்னெ..சும்மாவா ...

Read More »

ரத்தப் பிச்சை

  முகில் தினகரன் அந்த ஆஸ்பத்திரி வராண்டாவில் திரும்பிய திசையெல்லாம் கரை வேட்டி மனிதர்கள் குவிந்திருந்தனர். கல்லூரியில் படிக்கும் தொகுதி எம்.எல்.ஏ.வின் மகன் பைக் விபத்தில் ஏகமாய் அடிபட்டு எமர்ஜென்ஸியில் உயிருக்குப் போராடியபடி கிடக்க அவனது அரிய வகை ரத்தம் தேடி கட்சித் தொண்டர்கள் நாலாத்திசையிலும் அலையோ அலையென்று அலைந்து கொண்டிருந்தார். ‘த பாருங்கப்பா…எம்.எல்.ஏ.வர்றதுக்கு எப்படியும் மதியம் ஆய்டும்…அதுக்குள்ளார எப்படியாவது ரத்தம் ஏற்பாடு பண்ணியாகணும்!” சற்று சீனியரான ஒரு கறை வேட்டி சொல்ல ‘ப்ச்…பசங்க காத்தால இருந்தே அதுக்காகத்தான் அலைஞ்சிட்டிருக்காங்க…கெடைக்கவே மாட்டேங்குது!” திடீரென்று கூட்டத்தில் ...

Read More »

விதி செய்வோம்

  முகில் தினகரன் ‘அய்யோ…என்னால முடியலையே…ப்ளீஸ்….என்னை வெளிய விடுங்க…நான் எங்காவது போயிடறேன்….இப்படி என்னைய அடைச்சு வெச்சுக் கொல்லறீங்களே…என்னால முடியலை…என்னால முடியலை…அய்யோ!” விஸ்வத்தின் ஆக்ரோஷமான அடித் தொண்டை அலறலில் அறைக்கு வெளியே ஷோபாவில் அமர்ந்திருந்த கீர்த்தனா நடுநடுங்கிப் போனாள். திடீரென்று விஸ்வம் அறைக்கதவை உடைத்து விடுவதைப் போல் பிசாசுத்தனமாய்த் தட்ட ‘கடவுளே…நான் என்ன பண்ணுவேன்?…இந்த நேரம் பார்த்து அம்மாவும் அப்பாவும் வெளிய போயிட்டாங்களே!…இவனோட ஆவேசத்தைப் பார்த்தா கதவையே உடைத்தெடுத்து விடுவான் போலல்லவா இருக்கு!” போதைப் பழக்கத்திற்கு அடிமையாகிப் போன தங்கள் மகன் விஸ்வத்தை டாக்டரின் அறிவுரைப்படி ...

Read More »

ஒரு புறம் வேடன்…மறு புறம் நாகம்!

  முகில் தினகரன் அந்த பங்களா வீட்டின் முன் வெள்ளிங்கிரி வாத்தியார்; வந்து நின்ற போது அதிகாலை ஐந்து மணி.  பக்கத்துத் தெரு கோவிலிலிருந்து சுப்ரபாதம் காற்றில் மிதந்து வந்து கொண்டிருந்தது.  இருட்டு விலகாத அந்தத் தெரு வெறுமையாயிருந்தது.  அவ்வப்போது ஒன்றிரண்டு பால்காரர்கள் மட்டும் சைக்கிள் மணியை ஒலித்தபடி கடந்து சென்றனர். “கவுன்சிலரய்யா எந்திரிச்சுட்டாரா?” கேட்டிலிருந்த வாட்ச்மேனிடம் சன்னமான குரலில் கேட்டார் வெள்ளிங்கிரி வாத்தியார். “ம்…ம்…எந்திரிச்சுட்டார்…ஆனா…ஏழு மணிக்கு மேலதான் ஜனங்களைப் பார்ப்பாரு…அப்படிப் போய் ஓரமா நில்லுங்க…அவரு ஆபீஸ் ரூமுக்கு வந்ததும் நானே கூப்புடறேன்!” அந்த ...

Read More »

நன்மையே தீமையாய்!

  முகில் தினகரன் நான் ஆசை ஆசையாய் வாங்கி வந்து நீட்டிய அந்த புடவைப் பார்சலை முகம் மலர வாங்கி, விழிகளில் ஆவலைத் தேக்கி, இதழ்களில் புன்முறுவலைக் காட்டி, விரல்களில் பரபரப்பைக் கொட்டி, வேக வேகமாய்ப் பிரித்த அமுதா அப்புடவையை வெளியே எடுத்து பிரித்துப் பார்த்ததும் முகம் மாறினாள். “அடப்பாவமே!…பிடிக்கலை போலிருக்கே! ம்…ம்…ம்…எப்படி?….இவளுக்குப் பிடித்த ஸ்கை ப்ளு கலர்ல்தானே எடுத்திருக்கேன்…அப்புறம் ஏன்…?” சுவாரசியமேயில்லாமல் அதை மடித்து மீண்டும் அதே அட்டைப் பெட்டிக்குள் திணித்தவாறே கேட்டாள். “என்ன விலை?” “ம்ம்ம்….ஆயிரத்தி இருநூறு!” அதிகமென்று திட்டுவாளோ… இல்லை…குறைவு ...

Read More »

எங்க வீட்டு சர்வெண்ட்

  முகில் தினகரன் காய்கறி மார்க்கெட். ‘அய்ய்யோ…சதீஷ் வேற வர்றானே!…இப்ப என்ன பண்றது?…இந்த மாதிரி ஒரு அம்மாவோட…இத்தனை பைகளைத் தூக்கிட்டு…நான் போறதைப் பார;த்துட்டான்னா…அவ்வளவுதான்… என்னோட ஃபிரெண்ட்ஷிப்பையே கட் பண்ணிக்குவான்!…அது மட்டுமா?…காலேஜ்ல எல்லார; முன்னாடியும் வெச்சு…இதைச் சொல்லிச் சொல்லிக் கிண்டல் பண்ணியே என்னை சாகடிச்சிடுவான்!…” குமார். அந்தப் பணக்காரத் தோழனின் கண் பார்வையில் பட்டு விடாமல் நழுவும் எண்ணத்தில் சுற்றும் முற்றும் வழி தேடினான். அதற்குள் அந்த சதீஷ் அவனைப் பார்த்து விட, ‘போச்சுடா… பார்த்துட்டான்….இனி தப்பவே முடியாது!” தனக்குத் தானே புலம்பிக் கொண்டு உடன் ...

Read More »

தீக்கொழுந்தில் ஒரு பனித்துளி (19)

  முகில் தினகரன் அத்தியாயம்  – 19 மதியம் மூன்று மணியிருக்கும், மாலையில் மகன் வந்ததும் அவனிடம் எப்படிப் பேசுவது….எதைச் சொல்லி அவனைச் சரிக்கட்டி, தேவியின் கணவனுக்கு கிட்னி தானம் செய்யச் சொல்வது, என்று தனக்குள் ஒத்திகை பார்த்தபடி அமர;ந்திருந்தாள் லட்சுமி. அப்போது கதவு ‘பட..பட”வெனத் தட்டப்பட, ஓடிப் போய்த் திறந்தாள். சுந்தர் பணி புரியும் தறிக் கூடத்து சிப்பந்தியொருவன் நின்று கொண்டிருந்தான்.  அவன் முகத்தில் கலவரம். எதையோ சொல்ல துடிக்கும் உதடுகள். கண்களில் பீதியின் வெளிப்பாடு. ‘என்னப்பா…இந்த நேரத்துல?” ‘அ…ம்…..மா…!  வந்து…வந்து…தறிக் கூடத்துல ...

Read More »

திருத்தப்பட்ட தீர்ப்புகள்

  முகில் தினகரன் பிரசவ வார்டின் முன்பகுதியில் கேட்டுக் கொண்டிருந்த அந்தக் கத்தல்களும்…களேபரங்களும் சீஃப் டாக்டர்  நந்தினி வர சட்டென்று அடங்கிப் போயின. “என்ன…என்ன இங்க சத்தம்?…இதென்ன பிரசவ வார்டா இல்ல மீன் கடையா?” குரலில் இருந்த கம்பீரம் எல்லோரையும் ஸ்தம்பித்து நிற்கச் செய்ய சற்று தைரியமான ஒரு நர்ஸ் மட்டும் முன் வந்து பதில் சொன்னாள். “டாக்டா;…ஒரு சிக்கலான பிரசவ கேஸ் அட்மிட் ஆகியிருக்கு, இவங்கெல்லாம் அந்தப் பொண்ணோட உறவுக்காரங்க..” “இருக்கட்டும்…அதுக்காக சத்தம் எதுக்குப் போடணும்?” “இல்ல டாக்டா;…அந்தப் பொண்ணு…சொன்ன பேச்சுக் கேட்காம ...

Read More »

வயிறாற நன்றி

முகில் தினகரன் தொலைக்காட்சியில் கார்ட்டுன் பார்த்துக் கொண்டிருந்த பாபு அறையின் வெளிச்சத்தைக் குறைப்பதற்காக வேண்டி எழுந்து ஜன்னலை மூடப் போனான். அங்கே….. ஜன்னலுக்கு வெளியே வேலைக்காரி முனியம்மா தன் மகன் கண்ணனுக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தாள். அவனை மடியில் அமர்த்தி வைத்து…விளையாட்டுக் காட்டிக் கொண்டே ஒவ்வொரு கவளமாக அவள் ஊட்ட..ஊட்ட அவன் சிரித்தபடியே சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அதைப் பார்க்கப் பார்க்க பாபுவின் மனம் ஏங்கியது. ‘ஹூம்..அந்தக் கண்ணனுக்கும் என் வயசுதான்!…இருந்தும் அவனோட அம்மா அவனை மடியில் வெச்சு ஊட்டி விடறாங்க..எங்கம்மாவுந்தான் இருக்காங்க..ஒரு நாள் என் ...

Read More »

தீக்கொழுந்தில் பனித்துளி (18)

  முகில் தினகரன் அத்தியாயம்  – 18 இரவு. தேவியின் வர்த்தைச் சாட்டைகள் அவன் மனதில் ரத்தத் தீற்றல்களை ஏற்படுத்தியிருக்க, உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தான். ‘நாளைக்கு நான் புருஷனைத் தொலைச்சிட்டு வந்து நின்னா…பொறந்த வீட்டுக் கோடி போடவாது வருவியா?…இல்ல அதுவுமில்லையா?” ‘நாளைக்கு நான் புருஷனைத் தொலைச்சிட்டு வந்து நின்னா…பொறந்த வீட்டுக் கோடி போடவாது வருவியா?…இல்ல அதுவுமில்லையா?” தேவியின் தேள் கொடுக்குச் சொற்கள் திரும்பத் திரும்ப காதுகளுக்குள் ரீங்காரமிட்டுக் கொண்டேயிருந்தன. ‘தேவி…நான் யாருக்காகம்மா வாழுறேன்?….உனக்காக மட்டும்தாம்மா வாழ்ந்திட்டிருக்கேன்!…உனக்காகத்தாம்மா இந்த உடம்பின் ஒரு முக்கிய ...

Read More »