புள்ளிக் கவிதைகள்

1

அண்ணாகண்ணன்

vedanthangal

நானும் ஒரு பறவை.
என் சிறகுகளை
மற்றவர்கள் அசைக்கிறார்கள்.

*********************************************

எந்தச் சொல்லைச் சொல்வது
என்ற மோதலி்ல்
பிறகு அவர்கள்
பேசிக்கொள்ளவே இல்லை.

*********************************************

தானும் பயந்து
என்னையும் பயமுறுத்துகிறது
இந்த நாய்.

*********************************************

எப்போதும்
காரமாகவே இருக்கிறது
கடிகாரம்.

*********************************************

மயிர்க்கால் வெளியே தெரிந்தாலும்
முறைக்கிற மெளடீகக் கணவன் போல்
விரல் நுனி வெளியே தெரிந்தாலும்
விரட்டிக் கடிக்கிறது கொசு.

*********************************************

உன்னைக் கொல்லும்
எண்ணமே எனக்கில்லை.
என்னை ஏன் நி்ர்பந்திக்கிறாய்,
கொசுவே?

******************************************************************************************

நன்றி : இருவாட்சி இலக்கியத் துறைமுகம், பொங்கல் சிறப்பு வெளியீடு 2, திசம்பர் 2010
படத்திற்கு நன்றி: விழியன்

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “புள்ளிக் கவிதைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The reCAPTCHA verification period has expired. Please reload the page.