முனைவர் ஆ. கந்தையா காலமானார்

2

மறவன்புலவு

காலஞ்சென்ற ஆறுமுகம் சிவகாமி தம்பதிகளின் 1927இல் பிறந்த ஒரே மகனும், மறவன்புலவு க. சச்சிதானந்தன் ஆகிய எனக்கு ஒன்றுவிட்ட அண்ணரும், ஜெயலட்சுமியின் அன்புக் கணவரும் சுதர்சன், தர்சினி இருவரின் அனபுத் தந்தையும் மருமக்கள் இருவரின் அன்பு மாமனாரும், இரு பெயரர்களைக் கண்டவரும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை, பச்சையப்பன் கல்லூரி (பேரா. மு. வ.வின் மாணவர்), இலண்டன் பல்கலைக் கழகம் ஆகியவற்றில் முனைவர் பட்டம் பெறும் வரை கல்வி பயின்றவரும், கொழும்பு இந்துக் கல்லூரியில் ஆசிரியரும், பேராதனை, கொழும்பு, வித்தியாலங்காரா பல்கலைக்கழகங்களின் தமிழப் பேராசிரியரும், திறந்தவெளிப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியரும், இலங்கை அரசின் கல்விச்சேவை ஆணைக்குழு உறுப்பினரும், இலண்டன் மற்றும் சிட்னிப் பல்கலைக்கழகங்களில் தமிழ் கற்பித்த ஆசிரியரும், இலங்கைக் குடியரசுத் தலைவரின் கலாகீர்த்தி விருதாளரும், 35 ஆண்டுகாலக் கற்பித்தல் காலத்திலும் பின்னரும் 25க்கும் கூடுதலான நூல்களை எழுதியவரும்ஆகிய பேராசிரியர் முனைவர் ஆ. கந்தையா அவர்கள், ஆத்திரேலியா, சிட்னியில் கொன்கோர்டு மருத்துவ மனையில் 03.10.2011 இந்திய நேரம் 1200 மணியளவில் காலமானார்கள்.

முனைவர் ஆ. கந்தையா

தன் வீட்டில் படியேறுகையில் சறுக்கி விழுந்து விலா எலும்புகள் உடைந்த நிலையில் மருத்துவ மனையில் ஒருவார காலம் இருந்து, தேறிவரும் நிலையில் மீண்டும் அங்கேயே தடுக்கி விழுந்துமயக்க நிலையில் ஒரு வார காலம் இருந்தபின் இன்று காலமானார்கள்.

மனைவி திருமதி ஜெயலட்சுமி, மக்கள் திரு. சுதர்சன், திருமதி தர்சினி ஆகியோர் அவருடன் கூட இருந்தே அவரின் இறுதி வாரங்களில் அவரைக் கவனித்து வந்தார்கள்.

திருமதி ஜெயலட்சுமியின் தொலைப்பேசி : 00612 9742 1565

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “முனைவர் ஆ. கந்தையா காலமானார்

  1. முனைவர் ஆ. கந்தையா அவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல எம்பெருமானை பிரார்த்திக்கிறோம். அன்னாருடைய குடும்பத்தாருக்கு எம் ஆழ்ந்த இரங்கல்களை வல்லமை ஆசிரியர் குழுவின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *