ரோபோக்களின் பாக்சிங் அட்டகாசம் – “ரியல் ஸ்டீல்”
எந்திர மனிதர்களிடையே நிகழும் குத்துச்சண்டை விளையாட்டை மையமாக்கிய கதை தான் ரியல் ஸ்டீல். இந்த எந்திர ’பாக்சிங்’ பரபரப்பும் விறுவிறுப்பும் நிறைந்தவை. நிஜ பாக்சர்களின் கனவுகளை துவம்சம் செய்பவை. முழு நிள ஆக்ஷ்ன் படமான இதில் அப்பா, மகனின் நேசம் , தேடல், பிரிவு, பாசப் போராட்டம் என்ற செண்டிமெண்ட் பக்கமும் இதயம் தொடும்படி இருக்கும். 2005ல் வாங்கப்பட்ட கதை 2010ல் படமாகி உள்ளது. அந்த அளவுக்கு கதையை சிந்தித்து திட்டமிட்டுள்ளனர்.
சண்டை காட்சிகளில் 35 சதவிதம் ரோபோ சம்பந்தப்படவை தான். இப்படம் 127 நிமிட ஆக்ஷ்ன் விருந்து. வரும் வெள்ளி முதல் திரை அரங்கில் ரியல் ஸ்டீல் என்கிற பெயரில் தமிழில் மக்களிடையே அதிரடி விருந்து படைக்க வருகிறது ’ரியல் ஸ்டீல்’.