வே.முத்துக்குமார்

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி சொந்தப் புலம். தொழிலாளர் நலத்தில் முதுகலைப் பட்டம் பெற்று தனியார் நிறுவனமொன்றில் மனிதவளத்துறையில் பணி. பெருத்த இரை தேடலின் நீட்சியாக நீண்டிருக்கிற வாழ்வில், எந்தவித நிபந்தனையுமின்றி கவிதைகளும், கதைகளும் , கட்டுரைகளும் எழுதிக் கொண்டிருக்கிறேன். 2010 இல் 'இசைக்குறிப்புகளை மொழிபெயர்த்தல்' கவிதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. ' ஒருக்களிக்கப்பட்ட கதவு ' எனும் சிறுகதைத் தொகுப்பும், ' ஒரு வயலினும் சில நினைவுக் குறிப்புகளும்' எனும் கட்டுரை தொகுப்பும் விரைவில் வெளிவர உள்ளது.