எஸ்.நாராயணன்

சமீபத்தில் காலமான மூத்த எழுத்தாளர், "எழுத்து தபஸ்வி" திரு ஏ.எஸ். ராகவனின் புதல்வர். “மனிதன்” என்ற விகடன் வெள்ளி விழாப் போட்டி நாவல் மூலமாக தனது முத்திரையைப் பதித்தவர். தந்தையைப் போலவே எழுத்தில் நல்ல பெயரை எடுக்க வேண்டுமென்ற வேகம். முதல் கதை பல வருடங்களுக்கு முன் குங்குமத்தில் பிரசுரமானது. இவரது தந்தை அடிக்கடி கூறும் அறிவுரை, எழுத்தில் கண்ணியமும், மனித நேயமும் நிறைந்திருக்க வேண்டும் என்பதுதான். இப்போது மீண்டும் கற்பனை உலகில் அடி வைத்திருக்கிறார், தந்தையின் ஆசீர்வாதத்துடன். தற்போது சென்னையில் தனியார் நிர்வாகத்தில் நிதி & கணக்குப் பொது மேலாளராக பணியாற்றுகிறார்.