கிரேசி மொழிகள்

”ஹேப்பி வரலஷ்மி விரதம்’’….!

  உத்தம பத்தினியின் உச்சந் தலைவகிட்டில், பத்தும் செய்யா பணமுடிப்பில், -சுத்தமாய் சாணத் தெளிப்பில்,ஸ்ரீ சூர்ண நுதற்பிறையில் காணலாம் பொன்மகளின் கால்….! ”நல்லவெள்ளி இன்று, நலம்புகழ் செல்வத்தை இல்லத்தில் அம்பாள் இறைத்திடுவாள், -(கற்பக)வல்லியவள் ஆடி பராசக்தி, அண்ணனோ ஆயர்தம் பாடிமுராரி வெள்ளியைப் பொன்(தங்கம்)’’….கிரேசி மோகன்….

Read More »

வெண்பாகவதம்(தொடர்ச்சி….!)

  கூர்மாவதாரம்….! ——————– துர்வாசர் இட்ட தொடையை எறிந்திட கர்வாதி கத்தில் களிறின்மேல் -சர்வாதி காரத்தால் பெற்ற கடுத்தமுனி சாபத்தின் பாரத்தால் வானத்தோன் பாழ்….! சாப விமோசனத்தை, சாகரப் பாற்கடலை மாபெரும் மந்தார மத்தினால், -நீபெருவாய் வாசுகி தாம்பால் வளைத்துக் கடைந்திட; வாசுதேவன் விண்ணுக்கு வாக்கு….! வாசுகி உச்சியை வானோர் பிடித்திழுக்க ஆசு அசுரர் அதன்வாலில் -கோஷமிட மந்தார வெற்பன்று மூழ்குதலைத் தாங்கிட வந்தாராம் ஆமையாய் விஷ்ணு….! அப்போது பீறிட்ட ஆலகால நெஞ்சினை துப்பாது உண்ணாது தொண்டையில் -எப்போதும் கொண்டனன் சம்பு; கிளர்ந்த இலக்குமியைக் ...

Read More »

வெண்பா கவதம் -தொடர்ச்சி

  கோன்சத் தியவிரதன் கையபி ஷேகநீரில் மீன்சுத் திவந்து மிகப்பெரிதாய் -வான்பொத்தல் ஆகத் திமிங்கலமாய் ஆக அரசனும் தாகமென்ன கேட்டான் திகைத்து….()….13-09-2011 ஞானியர்கள், ஜீவர்கள், தானியங்கள் ஜோடியாய் தோணியிட்டு வாசுகித் தாம்பினால் -ஆணியிடு உச்சியுள்ள கொம்பென்(று) உரைத்தது பாகவத மச்சா வதாரத்து மீன்….()….13-09-2011 மனவா சுகியால் மனித கலத்தை வினையூழி நாளில் வலிக்க -உனைமீன் உருவில் இழுத்து உயர்நலம் சேர்க்கும் குருவின் மகிமை கருத்து….()….13-09-2011 வருவித்த வெள்ளம் வடியும் வரையில் பிறவித் தலைவர் பிரமன் -தருவித்த தூக்கமவர் கண்மூட சாக்கென்று தானவன் தூக்கிச்சென் றான்வேதத் ...

Read More »

வேதாந்த அந்தாதி….!

  ஆக்கப் பொறுத்தாலும் ஆறப் பொறுத்தாலும் காக்கும் கடவுள் கவலைப்படான் -நோக்கு விதித்ததை ஏற்றி வினையால் அணைத்து புதைப்ப(து) அவன்பொழுது போக்கு….(1)….20-1-2010 போக்கத்(து) உலகில் பொழுதைக் கழித்திரு காக்கும் கடவுளுடன் கைகோர்த்து -தாக்கும் செடியாய வல்வினைகள் செங்கரும்பாம், ஊன்றத் தடியாகும் பட்டினத் தார்….(2)….20-1-2010 தாரில் மலரவன் நாராம் மணக்கும்நாம் சோறில் சுவையவன், சக்கைநாம் -நேரில் வரத்தயங்கும் கீதமவன் வந்துவிட்ட நாமக் கரத்தியங்கும் புல்லாங் குழல்….(3)….20-1-2010 குழலுற்ற கீதத்தைக் காதுற்றுக் கேளீர் விழலுக்(கு) இறைக்காதீர் வீணாய் -தழலுக்குள் வேகாது, தண்ணீரில் வீழ்ந்தும் நனையாது சாகாத அவ்வுணர்வே ...

Read More »

கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

இம்முறை வெண்பா அல்ல…கட்டுரை….! மன்னிக்க…..சென்றமுறை கேசவ் அனுப்பிய சூறைக் காற்று அசுரனை, சகடாசுரன் என்று தப்பாக எண்ணி வெண்பா எழுதிவிட்டேன்…பிள்ளைப் (கண்ணன்)பிராயச் சித்தமாய் கட்டுரை…. மீண்டும் கேசவ் கண்ணா மன்னிக்க…. இது பற்றிய ஆய்வில் ‘’டோங்க்ரே மஹராஜின்’’ பாகவத தஸம ஸ்கந்தம் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது…. நன்றி கேசவ்…. கண்ணனின் கோபம் சக்கிர அசுரன்(சகடாசுரன்) மீதல்ல…. கண்ணனே சங்கூதும் சக்கிரத்தான்(சுதர்ஸனம்) அல்லவா…. ’’எனக்காக இவ்வளவு கோலாகலமாக உத்ஸவம் (கிருஷ்ண ஜனனம்) நடக்கும்போது…. என் தாயார் எங்கே!’’ வண்டிக்கு அடியில் பாலகிருஷ்ணன் நினைக்கிறான்…. தினசரி செயல்களை ...

Read More »

கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

பயமாசை கோபம் பசிதாகம் தூக்கம் மயமான மூட மனமே -அயலாம் இவைதவிர்த்து ஆழ இதயத்தில் இருக்கும் சுவைசுகித்து வாழ சுகம்….! பயமில்லா வாழ்வே பெருவாழ்வு மற்று ஜயமென்ப(து) எல்லாம்வீண் ஜம்பம் -முயலாமை காதை உரைத்தது கீதை உரைத்தது ஏதும் உறைக்கலை யே….! ஜடமென்(று) அறிந்தும் மடையா உயிரே உடம்பை சுமந்தேன் உனக்காய் -அடங்கும் மூச்சை மணந்து துரோகம் புரிந்தாய் சீச்சீ பழம்நீ புளிப்பு….! அத்தனையும் ஆண்டிடும் ஆசை அதிகாரப் பித்தனாய் வாழ்ந்து பேதலித்தேன் -அத்தனே இத்தரை உண்டியால் ஏக அஜீரணம் சத்துணவு போடுசர்வே சா….! ...

Read More »

படமும், பாடலும்….!

தங்க சரிகைசேலை அங்கம் அணிந்தபத்மா, பொங்கும் கடல்கடைந்தோன் பத்தினி, -சிங்கன் மடியமர்ந்து சீற்றம் முடித்தவளே, வாழி! படியளந்தோம் தாங்களே பட்டு(தங்கம் -செல்வம்)….கிரேசி மோகன்….!

Read More »

குமார சம்பவம்….!

  சர்கம் ஆறு ————– என்னை எனக்களித்த என்தந்தை சம்மதித்தால் என்னை அவர்க்களிப்பேன் என்றுரை -பின்னை இறையோன்தான் ஆனால் முறைமீறல் தோழி சரியாகேள் பாம்புச் செவிக்கு….(331)….9-12-2010 தாவிடும் மாங்கொடி மேவும் வசந்தத்தை கூவும் குயில்மூலம் கொஞ்சுதலாய் -சேவகியை பாலமாக பேசவிட்டு பார்வதி மோனத்தை ஆலமர்ந் தோர்க்கே அளிப்பு….(332)….10-12-2010 முந்தித்தன் முக்கண்ணால் மன்மதனை மாய்த்தவன் சிந்தித்தான் சப்தரிஷி சங்கமத்தை -இந்தப்பெண் ஆசை மிகுந்தவள் அப்பனிடம் பெண்கேட்க ஈசனே ஆயினும் ஈர்ப்பு….(333)….10-12-2010 தேசொளி வானில் திகழஆ காசமது கூசிடும் வண்ணம் கிளர்ந்திட -மாசிலா அந்தணர்கள் ஏழ்வர் அருந்ததி ...

Read More »

குமார சம்பவம்(அல்லது பேரருள் நெற்றிக்கண் பிறப்பு)….!

  சர்கம்- மூன்று —————— ஆரால் பயனோ அவரன்றி வேறாளைப் பாரான் எஜமான் பழகிடினும் -நூறாறு நானூறு கண்களால் நோக்கினான் மன்மதனை வானூறும் நட்பை விடுத்து….(124)….18-10-2010 ”அமரிங்கே” என்றன்பாய் ஆசனமும் தந்து சமமரி யாதையை செய்ய -அமரர்கோன், புல்லரித்த புஷ்பபாணன் போற்றியெஜ மானரிடம் சொல்லலுற்றான் சொந்தச் சரக்கு….(125)….18-10-2010 மூவுலகில் தாங்கள் முடிக்க நினைத்ததை ஏவுகணை என்மூலம் எய்திடுவீர் -காவலனே ஏனைய பேரிருக்க என்னை அழைத்தனையும் ஆணை எனக்கு அருள்….(126)….18-10-2010 வானப் பதவி விரும்பித் தவமியற்றும் ஈனப் பிறவியார் இன்றுரைப்பீர் -பாணம் தொடுத்தயென் வில்லால் தடுத்தவனைக் ...

Read More »

குமார சம்பவம்(அல்லது பேரருள் நெற்றிக்கண் பிறப்பு)….!

  சர்கம் -2 ————- அந்த சமயம், அசுரனாம் தாரகனால் நொந்த சுரர்கள் நடுநடுங்க -வந்தனர் முன்னிருத்தி இந்திரனை முப்பது முக்கோடியும் கண்ணிருநான் கோன்முன் குவிந்து….(60)….8-10-2010 சீதளத் தாமரை சூழ்தடாகக் கண்ணுக்கு போததி காலை புலப்படும் -ஆதவன்போல் வாடிய வானவர்முன் கூடிய வாசலில் பாடிடும் நூலோன் பிறப்பு….(61)….8-10-2010 நாற்புறமும் பார்க்கவல்ல பார்ப்பனனை, பல்லுயிரை தோற்றுவிக்கும் நற்கல்வித் தூயவனை -ஆர்பரித்து தேவர்கள் தோத்திரமாய் தேவன் திருமுகத்தில் தூவினர் சொற்பூ தொழுது….(62)….8-10-2010 (OR) வான்முதல் பார்வரை வேய்ந்துயிர் வைத்தவனை நான்முகனை நற்கல்வி நாயகனை -தேனமிழ்த தேவர்கள் சூழ்ந்து ...

Read More »

குமார சம்பவம்(அல்லது பேரருள் நெற்றிக்கண் பிறப்பு)…. 2 !

  சர்கம் -2 ————- அந்த சமயம், அசுரனாம் தாரகனால் நொந்த சுரர்கள் நடுநடுங்க -வந்தனர் முன்னிருத்தி இந்திரனை முப்பது முக்கோடியும் கண்ணிருநான் கோன்முன் குவிந்து….(60)….8-10-2010 சீதளத் தாமரை சூழ்தடாகக் கண்ணுக்கு போததி காலை புலப்படும் -ஆதவன்போல் வாடிய வானவர்முன் கூடிய வாசலில் பாடிடும் நூலோன் பிறப்பு….(61)….8-10-2010 நாற்புறமும் பார்க்கவல்ல பார்ப்பனனை, பல்லுயிரை தோற்றுவிக்கும் நற்கல்வித் தூயவனை -ஆர்பரித்து தேவர்கள் தோத்திரமாய் தேவன் திருமுகத்தில் தூவினர் சொற்பூ தொழுது….(62)….8-10-2010 (OR) வான்முதல் பார்வரை வேய்ந்துயிர் வைத்தவனை நான்முகனை நற்கல்வி நாயகனை -தேனமிழ்த தேவர்கள் சூழ்ந்து ...

Read More »

குமார சம்பவம்(அல்லது பேரருள் நெற்றிக்கண் பிறப்பு)….!

  மீண்டும் எழுத முயல்கின்றேன்(லிஃப்கோ பதிப்பித்த வடமொழி தமிழ் வாயிலாய்)….இது வரையில் எழுதியதைப் பகிர்கின்றேன் தங்களது மேலான பார்வைக்கு….! குமார சம்பவம்(அல்லது பேரருள் நெற்றிக்கண் பிறப்பு)….! —————————— காப்பு ———————- சிவபார்வதி —————- சொல்லும் பொருளுமாய், அல்லும் பகலுமாய் கல்லும் கடவுளாய் கோர்ந்திருந்து -புல்லும் உமாமஹேச தம்பதியின் ஊக்கம் விழைகிறேன் குமாரசம்ப வம்செய் குறித்து….(1)….2-10-2010 முருகன் ———- உன்பிறப் புக்குமுன்னால் உண்டான சம்பவத்தை தன்படைப்பில் காளிதாசன் தந்ததைமுக் -கண்பிறப்பே முந்தைத் தமிழில் மொழிபெயர்த்திட மூலமே வந்தெனக்கு கைகொடுத்து வாழ்த்து….(2)….2-10-2010 பிள்ளையார் ————— உன்னை மறந்தால் ...

Read More »

கிரகணம்

பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷி சொன்னது….! ——————————————————————————— சூரி நாகம்மாள் ஸ்ரீ ரமணாஸ்ரம லேகலு…..! —————————————————————————————– பந்தியில் ராகுவைப் பார்த்துவிட ஜாடையாய் சந்திர சூரியர்கள் சாமியை , -மந்தஹாஸ மூவா(மூப்பு இல்லா மால் -அபிராமி அந்தாதி பிரயோகம் -மோகினி அவதாரம்….!) முகுந்தரை, மூட்டிவிட, ஆப்பாப்பாய்(ஆப்பு -பறிமாறிய அகப்பை சுதர்ஸன சக்கிரமா மாறி ராகுவுக்கு ஆப்படித்து விட்டது) moveவாக ராகுகாலம் மூச்….கிரேசி மோகன்….!

Read More »

உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….!

  காப்பு ——– சைவதிற்(கு) ஆண்டாள், சிவனின் மனம்புரிந்த மொய்விரித்தக் கூந்தலால் மேனிமூடும் -தெய்வத்தாய் அக்கமகா தேவியே அம்மல்லி கார்ஜுனரை சொக்கவைத்தத் தோழி சரண்….(0)….23-9-2010 —————————————————————— மனத்தலையைக் கொய்து மயானத்தில் நித்தம் தனித்தலையும் தேவாதி தேவன் -பனிதலையன் சென்னமல்லி கார்ஜுனன் சேவடி சேர்ப்பிக்க உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(1)….23-9-2010 கோலுக்குக் குரங்காக நூலுக்கு பொம்மையாய் தோலுக்குள் ஆடுகிறான் தாண்டவம் -மேலுக்கு சென்னமல்லி கார்ஜுனன் சொன்னபடி ஆடினால் உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(2)….23-9-2010 கரங்களில் ஓடு கிராமத்தில் பிச்சை கிறங்கிட பாழடைந்த கோயில் -குரங்கென சென்னமல்லி கார்ஜுனனை சிக்கென்(று) ...

Read More »