சீர்காழி கோவிந்தராஜன்

0

பாஸ்கர்

மந்தவெளி தெரு தாண்டி மரங்கள் அடர்ந்த தியான ஆச்ரமம் பக்கத்தில் உள்ள தெருவில் அவர் வீடு. பெயர் இசைமணி இல்லம்.

இரைச்சல் இல்லாத எழுபதுகளில் அந்த பக்கம் போனால் சங்கீதத்தின் சாயல் தெரியும். மரங்களின் குளிர் தென்றல், பக்கத்தில் உள்ள கடற்கரையின் அற்புத காற்று, நிசப்தம் பயமுறுத்தாத இருட்டு. இவர் சாதகம் செய்யும் குரல்….என்ன பெரிய மரியாதையான மனிதர் அவர் –.சீர்காழி என்றாலே அது கோவிந்தராஜன் தான்.

வெண்கல குரல். இவரை போல நாபியில் இருந்து பாட யாரும் இல்லை. ஒரு பாடல் என்றால் அதில் தனது ஆன்மாவை வைத்து அவர் செய்த நெசவு யாரும் தொட முடியாத ஒரு உசரம்.

கலாட்டா பாடலா பூவா தலையா போட்டால் தெரியும் நினவு வரும். எழுச்சி பாடலா வெற்றி வேண்டுமா போட்டு பாரடா நின்று பேசும் .தேச பக்தி பாடலா வெள்ளி பனிமலை நம்மை உருக்கும் .சோகமா தேவன் கோயில் மணியோசை நம்மை தாலாட்டும். அவரின் மேகங்கள் இருண்டு வந்தால் பாடலை கேட்டு பாருங்கள்.. என்ன உச்சஸ்தாயி. என்ன கம்பீரம். என்ன பாவம்…. அது தவிர அவர் நிறைய தமிழ் இசை கச்சேரிகள் செய்து இருக்கிறார். சமரசம் செய்து கொள்ளாத மனிதர்.

காத்திருந்த கண்கள் படத்தில் ஒரு பாடல். மெல்லிசை மன்னர்கள் இசை. பாடல் பதிவுக்கு வந்த சீர்காழிக்கு கொஞ்சம் அதிர்ச்சி. ஏனெனில் அங்கு வாத்ய குழு ஏதும் இல்லை. எல்லோரும் புறப்பட்டு போய் விட்டர்கள். தான் தான் தாமதமாக வந்து விட்டோமோ என்றெண்ணி விஸ்வநாதனிடம் என்ன அண்ணே ஆச்சு என் வினவினார்.

வாத்ய கோஷ்டி ஏன் போய் விட்டார்கள் என கேட்க அவர் இந்த பாடலுக்கு மூன்று வாத்யம் போதும். இரண்டு கீழே இருக்கிறது. அப்ப மூணாவது என கேட்க சீர்காழியின் தொண்டையை தொட்டு இதை விட பெரிய வாத்தியம் வேறுண்டா என பதில் சொன்னார்.

அந்த பாடல் — ஓடம் நதியினிலே — கேட்டு பாருங்கள். சிம்ப்லி அவுட் ஆப் தி வேர்ல்ட்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *