140ஆவது காந்தி ஜெயந்தியை முன்னிட்டு
இந்திய அரசின் திரைப்படப் பிரிவின் சிறப்புத் திரையிடல்
140ஆவது காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இந்திய அரசின் திரைப்படப் பிரிவு, சென்னை அண்ணா நகர் டவர் பூங்காவில் உள்ள திறந்தவெளி அரங்கில் மகாத்மா காந்தி தொடர்பான படங்களைத் திரையிட உள்ளது. 02.10.2010, 03.10.2010 ஆகிய நாட்களில் தேசப்பிதா காந்தியடிகளின் சுதந்திரப் போராட்டம், அவரது தலைமைப் பண்பு தொடர்பான 15 ஆவணப் படங்கள், மாலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை திரையிடப்படுகின்றன.
இந்தத் தகவலைத் திரைப்படப் பிரிவின் மேலாளர் ஏ.சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
================================================
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அஞ்சல் தலை கண்காட்சி
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சென்னை தலைமை அஞ்சலகத்தில் அஞ்சல் தலை கண்காட்சி, ஒரு வாரம் நடக்கிறது.
மகாத்மா காந்தி பிறந்த நாள், அக்டோபர் 2ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்தில் சிறப்பு அஞ்சல் தலை கண்காட்சி, 2010 அக்.1ஆம் தேதி தொடங்கி ஒரு வாரம் நடக்கிறது. காந்தியிடம் செயலாளராக பணியாற்றிய வி. கல்யாணம் இக்கண்காட்சியைத் தொடக்கி வைத்துள்ளார்.
அஞ்சல் அலுவலகத்தில் உள்ள அஞ்சல் தலை அரங்கத்தில் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தினமும் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை கண்காட்சியைப் பொது மக்கள் பார்வையிடலாம்.
=========================
படத்திற்கு நன்றி – விக்கிப்பீடியா