‘உனக்கென இருப்பேன்’ படத்தின் கதை

0

மக்கள் தொடர்பாளர் செல்வரகு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தயாரிப்பாளர் சுரேஷ்குமாரின் ஸ்ரீ சுவாதி கிரியேஷன்ஸ் எனும் புதிய நிறுவனம், உனக்கென இருப்பேன் என்ற திரைப்படத்தை பிரமாண்டமான முறையில் தயாரித்துள்ளது.

“தோழா” படத்தை இயக்கிய சுந்தரேஸ்வரன், இப்படத்திற்குக் கதை – திரைகதை – வசனம் எழுதி இயக்குவதோடு,  இரண்டு பாடல்களையும் இயற்றியுள்ளார்.

கதாநாயகன் பிரபா, வர்ஷினி, புதுமுகம் ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், கஞ்சாகருப்பு, சிங்கம்புலி, மனோபாலா, “பருத்திவீரன்” வெங்கடேஷ் இவர்களுடன் இயக்குநர் சுந்தரேஸ்வரன் முக்கிய வில்லன் வேடத்தில் நடிக்கிறார்.

மதுரையை மையமாக வைத்து எடுத்த வெற்றிப் படங்களின் வரிசையில் இதுவும் வெற்றியடையும். காதலின் வேறு ஒரு பரிமாணத்தைச் சொல்லும் இது ஒரு புது கதைக் களம். மதுரை, திண்டுக்கல் ஆகிய ஊர்களைச் சுற்றியுள்ள அழகான இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளதுது. கஞ்சா கருப்பும், சிங்கம்புலியும் நகைச்சுவை சேர்த்துள்ளனர்.

கதைச் சுருக்கம்:

ஒரு கிராமத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட கதாநாயகன் மீது கதாநாயகி காதல் கொள்கிறாள். அவன் மனத்தில் இவள் இடம்பிடித்தாளா? அவன் எவ்வாறு மனநலம் பாதிக்கப்பட்டான் என்பது திரைக்கதை!

இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கும் பிரபா மனநலம் பாதிக்கப்பட்டது போல் மூன்று மாதமாகத் தாடி வளர்த்துக்கொண்டு தன்னை அந்தப் பாத்திரமாகவே மாற்றிக்கொண்டு நடித்துள்ளார்.

•    சின்னலாப்பட்டியில் திருவிழாப் படப்பிடிப்பு  நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது,  கிழிந்த அலங்கோல நிலையில் நடித்துக் கொண்டிருந்த கதாநாயகன் இளைப்பாற கோயில் வாசலில் உட்கார்ந்திருக்கும் வேலையில் அவரைப் பிச்சைக்காரன் என நினைத்து பொது மக்கள் பிச்சை போட்டு இருக்கிறார்கள். அதை அப்படியே கொண்டு வந்து தயாரிப்பாளரிடமும் இயக்குநரிடமும் காட்டி வருத்தப்பட, இது இந்தப் பாத்திரத்திற்குக் கிடைத்த வெற்றி என அனைவரும் பெருமிதப்பட்டனர்.

•    ஜெயப்பிரகாஷ் மதுரையையே ஆட்டிப் படைக்கிற தாதா, அவருக்கு எதிரியாக நடிக்கும் இயக்குநர் சுந்தரேஸ்வரன் வில்லன் கெட்டப்பில் மதுரையில் காரில் தீவிரமாக நடித்துக் கொண்டிருக்கும் போது தீவிரவாதிகள் சுற்றிக் கொண்டுக்கிறார்கள் என யாரோ தகவல் தர, உடனே போலீஸ் வேன், ஜீப் மற்றும் புல்லட்டில் இன்ஸ்பெக்டர் – சப் இன்ஸ்பெக்டர் என ஒரு பட்டாளமே அவர்களைச் சூழ்ந்து, டைரக்டர் தீவிரவாதியென அவரோடு நடித்துக்கொண்டிருந்த மற்றவர்களையும் சந்தேகத்தின் பேரில் விளக்குத்தூண் காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்று விட்டனர். செல்லும் வழியில் தீவிரவாதிகளைப் பிடித்து விட்டோம் என வயர்லெஸ்ஸில் சொல்ல, வேனில் இருந்த அனைவருக்கும், தூக்கிவாரிப் போட, அங்குள்ள நண்பர்களுக்கு தகவல் தந்து அவர்கள் வழக்குரைஞரோடு வந்து நிலைமையை உதவி ஆணையருக்குப் புரிய வைத்த பிறகு தான் இயக்குநர், நடன இயக்குநர் ராக்சங்கர், உதவி ஒளிப்பதிவாளர் என அனைவரும் விடுதலை செய்யப்பட்டு, படப்பிடிப்பு தொடர்ந்துள்ளது. இதற்கெல்லாம் காரணம், கார்களுக்கு மதுரை ஏரியா நெம்பர் பிளேட்  உபயோகிக்காத தவறுதல் தான் எனத் தெரியவந்தது.

தொழில்நுட்பக் கலைஞர்கள்:

கதை, திரைகதை, வசனம், இயக்கம்:     சுந்தரேஸ்வரன்
இசை         :    ஸ்ரீகாந்த் தேவா
ஒளிப்பதிவு     :    கி. கார்த்திக் ராஜா
படத் தொகுப்பு        :    சுரேஷ் அர்ஸ்
பாடல்கள்        :    சிநேகன், இளையகம்பன், இறைவன்,  சுந்தரேஸ்வரன்
மக்கள் தொடர்பு    :    செல்வரகு
பாடியவர்கள்    :    தஞ்சை சின்னப்பொண்ணு, வேல்முருகன்,  பிரசன்னா, மகதி, ரோஷிணி,
சண்டைப் பயிற்சி :     “பில்லா” ஜெகன்,
தயாரிப்பு :    சுரேஷ்குமார்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.