கை காட்டி!
பாகம்பிரியாள்
நாலு பேருக்குத் தெரிய வேண்டும் என்கிற ஆசையில்
நம் காதலை நடுவில் நட்டு விட்டதோடு
நான் செல்லும் வழியைத் தொடர்ந்து வா என்றாய்..
வெட்கக் கண்ணாடி மேல் வழுக்காமலும், விழாமலும்,
விரல் பதித்து நடக்கும் வித்தையை நானல்லவா
நூறு தடவை தினம் பயில வேண்டி உள்ளது?
படத்திற்கு நன்றி: http://www.masterfile.com/stock-photography/image/600-02200211/Woman-Covering-Face