பார்த்திபனின் நன்றி அறிவிப்பு – செய்திகள்

0

சமீபத்தில் வெளியாகி வெள்ளித்திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ‘வித்தகன்’.  நையாண்டி வசனங்கள், குண்டக்க மண்டக்க எதிர் வசனங்கள் என தனது வழக்கமான சரக்குடன் அதிரடியையும் சேர்த்துக் கொடுத்திருக்கிறார் நடிகர் பார்த்திபன்.  நேர்மை தவறாத கறார் போலீஸாக படத்தில் கலக்கியிருக்கிறார்.  இந்த திரைப்படம் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

ரசிகர்களின் ஆதரவுக்கும் பத்திரிக்கை துறை மற்றும் ஊடகத்துறை நண்பர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், இயக்குநர், நடிகர் பார்த்திபன் விடுத்துள்ள செய்தி : “அபாரமாக ஓடி கோப்பையை கைப்பற்றியபோது, கை தட்டிப் பாராட்டுபவர்களாக இல்லாமல், நடை பழகியபோதே என்னை கை தட்டி உற்சாகப்படுத்தி, இன்று ஓடிக்கொண்டிருக்கும் வித்தகனாக – நிரந்தர வெற்றியாளனாக ஆக்கிய பெருமை, ரசிகர்கள், பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களான உங்களையே சாரும்.  என் நீண்ட இடைவெளிகளில் கூட, ரசிகர்களுக்கும், வாசகர்களுக்கும் என் மீதான கவனம் நீர்த்துப்போகாமல், ஈர்ப்பு இருப்புக் கொள்ளும்படியாக பார்த்து கொண்டவர்கள் எனது பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்கள்.  நன்றி சொல்லும் சந்தடிசாக்கில் தொடர்ந்து உங்களுடைய ஆத்மார்த்த ஆதரவை நாடுகிறேன்.  மீண்டும் நன்றி”

 

 

 

 

படத்திற்கு நன்றி

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *