புத்தம் புது மலரே!

அன்பு நண்பர்களே,

நம் வல்லமை மின்னிதழ் தள மேலாளர் திரு காமேஷ் மற்றும் திருமதி யாங் தம்பதியினருக்கு 2011 நவம்பர் மாதம் 30 ஆம் நாள் ஹாங்காங் நேரப்படி புதன் கிழமை விடியற்காலை 2.50 மணிக்கு (இந்திய நேரப்படி 0.20 மணி) சைனா நாட்டில் மிக அழகான குட்டி தேவதை பிறந்திருக்கிறாள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். திருமதி யாங் அவர்களின் விருப்பத்திற்கிணங்க குழந்தைக்கு செல்வி என்றுஅழகிய நாமகரணமும் சூட்டியுள்ளார்கள.குழந்தை செல்வி எல்லா நலங்களும், வளங்களும் பெற்று பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக , நம் தமிழ்நாட்டின் செல்லக் கண்ணாக வளர நம் வல்லமை குழுவினர் சார்பாக மனமார வாழ்த்துகிறோம்.

 

                                    காமேஷ் மற்றும் யாங் தம்பதியினர்

இந்த நல்லதொரு நாளில் பிறந்த நாள் வாழ்த்து மடல் என்ற புதிய பகுதியையும் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம். குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துகளை நம் வல்லமை மின்னிதழின் மூலம் தெரிவிக்க விரும்புவோர், குழந்தையின் பிறந்த தினத் தேதி, பெற்றோரின் பெயர் மற்றும் குழந்தையின் தனித்தன்மை அல்லது தனித்திறன் ஏதும் இருப்பின் அதனையும் குறிப்பிட்டு, குழந்தையின் புகைப்படத்துடன், விரும்பினால் பெற்றோரின் புகைப்படமும் இணைத்து [email protected] என்ற முகவரிக்கு, பிறந்த நாள் வாழ்த்து என்று தலைப்பிட்டு அனுப்புங்கள்.

மருத்துவமனையின் அழகான வாழ்த்து மடலில் குழந்தை செல்வி! நம் மருத்துவமனைகளும் இது போன்று வாழ்த்து மடல் கொடுத்தால் அந்த நேரத்தின் பெற்றோரின் மகிழ்ச்சி இரட்டிப்பாகலாமே. யோசிப்பார்களா நம் குழந்தைப்பேறு மருத்துவமனை உரிமையாளர்கள்?

1 thought on “புத்தம் புது மலரே!

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க