நண்பன் – திரை விமர்சனம்

1

ப்ரியா கணேஷ்

திரைப்படம் பார்ப்பது பொழுது போக்கிற்காகத்தான் என்றாலும், ஒரு திரைப்படம் பார்த்துவிட்டு திரும்பி வரும் போது நம் மனதில் ஒரு சிறு சலனமாவதோ அன்றி ஒரு சிறு மாற்றத்திற்கான அறிகுறியோ தோன்றினால் அது அந்த படத்தின் வெற்றி எனலாம்.. அந்த வகையில் இயக்குநர் சங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் நடிப்பில், இந்தியில் வெளியான 3 இடியட்ஸ் திரைப்படத்தின் மறு ஒளிபரப்பான, நண்பன் திரைப்படம் ஒரு வெற்றிப்படம் எனலாம்.

இப்படத்தில் மூன்று சிறப்பம்சங்கள் குறிப்பிட்டு சொல்லும்படி இருக்கிறது.

1) வெறும் புத்தகப் புழுவாக மட்டும் இருப்பது நல்ல அறிவாளிக்கு அழகல்ல.

2) இது பெற்றோருக்கு – தங்கள் குழந்தைகளின் மீது தங்களுடைய விருப்பைத் திணித்து,டாக்டராகவோ, கலெக்டராகவோ ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது.

3) இது மிக முக்கியமானதொரு அம்சம். மாணவர்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என்பது மட்டுமல்ல, ஒரு பிரச்சனையான பிரசவம் கூட பார்க்க முடியும் என்பது கேட்பதற்கு சற்று அதிகமாகத் தோன்றினாலும், பல கருத்துக்களை அங்கு பதிவிட முடிந்தது பாராட்டிற்குரியது… மிக உன்னதம்.

விஜய்க்கு ஜோடியாக இலியானா இனிமையாக நடித்திருக்கிறார். கொடியிடை நாயகி என்றால் மிகையில்லை!

பாசிட்டிவா எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ள ’ஆல் இஸ் வெல் ‘ என்ற ஒரு அருமையான மனோத்தத்துவ முறையிலான அறிவுரை…..

பாத்திரப்படைப்புகள் குறை சொல்ல முடியாத அளவிற்கு கச்சிதம். குறிப்பாக நகைச்சுவை நடிகர் சத்யன் மற்றும் சத்யராஜ் படைப்புகள். எஸ்.ஜே சூர்யாவும் வந்து போகிறார்…… சத்யராஜின் மாறுபட்ட நடிப்பு. மனிதர் நல்ல வித்தியாசம் காட்டியிருக்கிறார் நடிப்பில்!

என் பிரண்டைப் போல யாரு மச்சான்….. பாடல் மனதில் நிற்கிறது.

அறிவுரை கொஞ்சம் அதிகமாகப் போனதால் பல நேரங்களில் செய்திப்படம் போன்ற தோற்றம் ஏற்படுவதும் நிதர்சனம். அதைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

ஆக, ஒரு திரைப்படம் வெற்றிப்படமாக அமைவதற்கு அடித்தளமாக அமைவது அதன் திரைக்கதைதான் என்பதை நிரூபித்திருக்கிறது நண்பன் திரைப்படம். நல்ல திரைக்கதை எந்த மொழியில், எத்தனை முறை எடுத்தாலும் நன்கு ஓடும் என்பதற்கும் ஆதாரம் நண்பன். அந்த வகையில் இத்திரைப்படம் உருவாக காரணமாக இருந்த “ five point someone” நாவலை எழுதிய சேத்தன் பகத் முழுமையான பாராடிற்குரியவர்!

 

அவருடைய நாவலின் ஆரம்ப வரிகள் நினைவு கூரத்தக்கவை!
 This is not a book to teach you how to get into IIT or even how to live in college. In fact, it describes how screwed up things can get if you dont think straight.

 

 படங்களுக்கு நன்றி :

http://popcorn.oneindia.in/movie-view-photos/9563/245887/nanban.html

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “நண்பன் – திரை விமர்சனம்

 1. நண்பன் திரைப்பட விமரிசனம் கண்டேன். இயக்குனர் ஷங்கரின்
  முழுமையைப் பார்க்கமுடியவில்லை. நன்றி சொல்லுவதற்கு
  பேன்டைக் கழட்டுவது எங்கு கண்ட நாகரீகமோ! தனக்காக வேறு நபர்
  பரீட்சை எழுதியது எவ்வளவு குற்றம் என்பதை புதுச்சேரி மந்திரி
  உணர்ந்திருப்பார். ஆனால் படம் எடுத்தவர்கள் ஆள்மாறாட்டம்
  செய்தது சரி என்கிறார்கள். அறிவில் திறமையான கதாநாயகன்
  ” ALL IS WELL ” என்ற இலக்கணத்தை எங்கு கற்றாரோ தெரியவில்லை.
  நுனிப்புல் மேய ஷங்கர் தேவை இல்லையே!
  இரா. தீத்தாரப்பன், ராஜபாளையம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.