விசாலம் ராமன்

தமிழ் நாட்டைச் சேர்ந்த வெளிநாடுகளில் மிகவும் புகழ் பெற்று பல முக்கிய ஆங்கில பத்திரிக்கைகளில் புகழப்பட்டும் இருக்கும் பெண்மணி,  இவர் குடும்பத்தைப் பற்றி தில்லியில் இருக்கும் போது நான் அறிவேன். பின் அந்தப்பெண் மேலே படிக்க அமெரிக்கா சென்றபின் தொடர்பு விட்டு விட்டது .பின் இரண்டாண்டுகள் முன்பு ஒரு ஆங்கில பத்திரிக்கையில் அவள் புகைப்படம் இருக்க அவளது சாதனையைப் பற்றியும் புகழ்மாலை சூட்டப்பட்டிருந்த்து எனக்கு ரொம்ப பெருமையாக இருந்தது மகளிர் தினத்தன்று எழுத் மிகப் பொருத்தமான பெண்

நோபல் பரிசை நோக்கி வெற்றி நடை போடும் ஒரு பெண். அவரை நினைத்தாலே மனம் பூரிக்கிறது அதுவும் இந்தியப் பெண்மணி, ஒரு தமிழ்நாட்டுப் பெண்மணி என்னும் போது மகிழ்ச்சி பன்மடங்காகி பெருகுகிறது, பெயர் பிரயம்வதா என்னும் பிரியா, உலகத்திற்கே பிரியமாகி விட்டார் ,இவர் ஒரு வானியல் பௌதிக விஞ்ஞானி. இவருடைய புதிய கண்டுபிடிப்பு “பிரியாவின் வரம்பு” என்று சொல்லலாம். வெளி நாடுகளில் இவரைப்பற்றி புகழாத பத்திரிக்கையே இல்லை எனலாம். டிஸ்கவர், இயற்கை, வெளிநாட்டு இந்திய வார இதழ் , ஹானலூலு டைம்ஸ் , டச் பாபுலர் ஸைன்ஸ் ,ஹார்வர்டு கெசட் ஏல் டெய்லி நியூஸ் போன்ற இதழகள் இதற்கு சான்று.

இவர் யார் ? பிறப்பிலேயே அறிவாளியான இவர், உழைப்பையே மூலதனமாக்கிக் கொண்டு புதிதாக தானும் பிரபஞ்சத்தில் ஒரு புது கண்டுபிடிப்புடன் சாதனை செய்ய வேண்டும் என்ற ஆர்வத்துடன் களத்தில் எழுந்த சாதனையாளர் ,திரு வெங்கடேச நடராஜன் என்றவருக்கும் திருமதி லலிதா என்ற அம்மையாருக்கும் பிறந்த ஒரு மாணிக்கம். பிறந்தது வளர்ந்தது படித்தது எல்லாம் இந்தியாவின் தலைநகரான் தில்லியில்.

தந்தை ஒரு எஞ்சினியர் , தாய் சமூகவியல் பட்டதாரி, பிரியாவிற்கு இரண்டு சகோதரர்கள் , பிரியா பௌதிகத்தில் இளநிலை விஞ்ஞானப் பட்டதாரியாகி பின் எம்,ஐ.டிக்கு அமெரிக்கா வந்து சேர்ந்தார். படிப்பை முடித்தவுடன் இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் லும்பின் டிரினிடி கல்லூரியில் 1997 முதல் 2003 வரை பணி புரிந்தார் அத்துடன் டாக்டர் பட்டம் வாங்க புகழ்பெற்ற “ஸர் மார்டின் ரீஸ் “மேற்பார்வையில் தனக்கு மிகவும் பிடித்த பிரிவுகளான பிரபஞ்சவியல், ஈர்ப்பாற்றல், ஒளிகுழம்பு ,கருந்துளை இவைகளின் ஆராய்ச்சியில் மிக மும்மரமாக இறங்கினார் . கருமைப் பிண்டத்தின் உள்மணல் பற்றியும் ஆராய்ந்தார் .’ஐஸக் நியூட்டன் ‘ஸ்டூண்ட்ஷிப் , ஆராய்ச்சியிலும் பங்கு பெற வாய்ப்பு கிடைத்தது. வானியல் பௌதிக பெல்லோஷிப் கிடைத்த முதல் இந்தியப் பெண் இவர்தான் , இவைகளெல்லாம் முடித்த பின் ஆய்வாளராகத் தேர்ச்சியும் பெற்றார் தற்போது “ஏல் கழக வானியல் பௌதிக பேராசிரியராக பணியாற்றி வருகிறார். மேடையில் இவர் தன் ஆய்வுகளைப் பற்றி அலசுகிறார். விவாதத்திலும் பங்கு கொள்கிறார் , உறையாற்றுகிறார்.

இவர் தம் கண்டுப்பிடிப்பு பற்றி தானே கூறுவது

“விண்மீன் பிறப்புக்கும், கருந்துளை வளர்ச்சிக்கும் அண்டவெளி வாயுப் பிண்டங்கள் தேவை. கருந்துளைகள் இரண்டு விதம். ஒன்று பசியின்றி உயிருடன் இருக்கும் வயிறு நிரம்பியது ! இரண்டாவது பசியோடு முடங்கிய குறை வயிறுப் பட்டினியானது ! அவை யாவுமே எக்ஸ்-ரே கதிர்கள் வீசுபவை ! கண்ணோக்கு அலைப் பட்டையில் சுடரொளிக் குவஸாராகக் காணப்படுபவை (Optical Wave Band as a Bright Quasar) ! இதில் விந்தையான கோட்பாடு என்ன வென்றால் கருந்துளைகள் யாவும் “சுய வளர்ச்சி பெறும் அண்டங்கள்” (Self Regulating Growth Objects) என்பதே ! அதாவது உச்ச நிறை வரம்பு எய்திடும் ஒரு சில அசுரப்பெரும் கருந்துளைகள் உள்ளன என்பதே இப்போது மகத்தானதோர் கண்டுபிடிப்பு,” என்று பெருமைப் படுகிறார் பிரியா நடராஜன்

மேலும் இவர் தன் ஆராய்ச்சியும் அதன் பரிணாமமும் பற்றிக் கூறுவது ,,,,,,,,

“பிரபஞ்சத்தில் மிகப் பெரும் காலாக்ஸிக் கொத்துக்களின் {galaxy Clusters) நீள்வட்ட காலக்ஸிகளில் அசுரப் பெரு வடிவுக் கருந்துளைகள் குடியிருக்கும் நமது பால்வீதி காலக்ஸியின் நடுவே உள்ள கருந்துளை அசுரப்பெரு கருந்துளையை விட ஆயிரக் கணக்கான மடங்கு சிறியது என்று கணிக்கப்படுகிறது. அசுரப் பெரும் கருந்துளைகள் அண்டையில் இருக்கும் பிண்டங்களை விழுங்கி உச்ச நிறைக்கு மீறி வளராமல் நிறுத்தம் அடைகின்றன. சந்திரா எக்ஸ்-ரே விண்ணோக்கியைப் பயன்படுத்தி நிறுத்தமான கருந்துளைகளைக் காண முடிகிறது. உச்ச நிறை அடைந்த கருந்துளைகள் இப்போது வயிறு நிரம்பி நிற்கவில்லை! பிரபஞ்சத் தோற்றத்தின் ஆரம்ப காலத்திலே அவற்றின் நிறை உச்ச வரம்பு நிலை அடைந்து விட்டது,”

“கருந்துளைகளே மெய்யாகப் பிரபஞ்ச இசை அரங்கின் பிரதானக் கொடைக் களஞ்சியம், (Black Holes are the really Prima Donnas of this Space Opera).”

“என்னுடைய ஆய்வுக் கட்டுரைக்கு (Thesis) பிரபஞ்சத்தில் கருமைப் பிண்டம், கருந்துளைகள் தோற்றம், வளர்ச்சி ஆகிய பல்வேறு பிரச்சனை ஆராய்ச்சிகளில் ஈடுபட்டேன். ஸ்டீ·பென் ஹாக்கிங் பிரபஞ்சத்தின் புனைவு (Episode) ஒன்றில் கருமைப் பிண்டத்தின் உள் மணல் பற்றியும் (Granularity of Dark Matter) நான் ஆராய்ச்சி செய்தேன்.” என்று கூறுகிறார் டாக்டர் பிரியா நடராஜன் (Associate  Professor, Dept of Astronomy & Physics, Yale University, Connecticut, USA)

அணு வடிவில் சிறிதாயும் அசுர உருவத்தில் பெரிதாகவும் பெருத்து வளர்பவை கருந்துளைகள் ! சிறு நிறைக் கருந்துளை, பெருநிறைக் கருந்துளை என்று பிரிவு பட்டாலும் இரண்டுக்கும் இடைப்பட்ட நிறையில் உள்ள கருந்துளைகளும் விண்வெளியில் கருவிகள் மூலமாகக் காணப்படலாம்! பொதுவாகக் கருந்துளைகள் அருகில் அகப்படும் வாயுக்கள், தூசித் துகள்கள், ஒளிவீசும் விண்மீன்கள், ஒளியிழந்த செத்த விண்மீன்கள் போன்றவற்றை அசுர ஈர்ப்பாற்றலில் இழுத்து விழுங்கி வயிறு புடைத்துப் பெருக்கும் ! அப்போது கருந்துளையின் நிறை ஏறிக் கொண்டே போகிறது ! ஆனால் அந்த நிறைப் பெருக்கத்துக்கும் ஓர் எல்லை உள்ளது என்று பிரியா நடராஜன் முத்திரை அடிக்கிறார். எந்தப் பீடத்தில் இருந்தாலும் இட அமைப்பு கருந்துளை நிறையின் உச்ச அளவு வரம்பை மீற விடாது என்று அழுத்தமாகக் கூறுகிறார். பெரும் அசுர வடிவுக் கருந்துளையின் (Ultra-massive Black Hole) நிறை மதிப்பு பரிதியைப் போல் ஒரு பில்லியன் மடங்காக அறியப் படுகிறது

கருந்துளை வளர்ச்சி எப்படி நிறுத்தம் அடைகிறது ?

“அருகில் அகப்படும் அண்ட பிண்டங்களை விழுங்கும் கருந்துளை, தான் புறவெளியில் உறிஞ்சிய கதிர்ச்சக்திக்குச் சமமான அளவுக்குக் கதிர்ச்சக்தியை வெளியேற்றும் போது மேலும் வாயுப் பிண்டத்தை இழுக்க வலுவற்று, வயிறு நிரம்பித் தடைபட்டு ஓர் வரையறையைத் தொடுகிறது. இந்தக் கண்டுபிடிப்பு மகத்தானது ! ஏனெனில் காலக்ஸி மையத்தில் இருக்கும் கருந்துளை பிண்டங்களின் ஒரு சேமிப்புக் களஞ்சியமாய் வீற்றிருந்து விண்மீன் பிறப்புக்கும் காலக்ஸி அமைப்புக்கும் வழி வகுக்கிறது,” என்று சொல்கிறார் பிரியா. “கருந்துளைகளே மெய்யாகப் பிரபஞ்ச இசை அரங்கின் பிரதானக் கொடைக் களஞ்சியம், (Black Holes are the really Prima Donnas of this Space Opera). பல்வேறு துறை ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருந்த போது, நான் எதிர்பாராத விதமாய்க் கண்டுபிடித்த இந்த அரிய நிகழ்ச்சி எனக்குப் பூரிப்பளிக்கிறது” என்று சொல்கிறார் பிரியா.

பிரியா நடராஜன் கூட்டாளி டக்டர் எஸிகுயில் டிரைஸ்டர் இந்தக் கருந்துளைகளின் உச்ச வரம்பு 10 பில்லியன் பகுதிஅளவு என மதிப்பிட்டிருக்கிறார் ,”சந்திரா எக்ஸ்ரே மூலம் இதைக் காணமுடிகிறது, பிரபஞ்சத்தில் நீள்வாட்ட காலக்ஸிகளில் வயிறு புடைத்த அசுர பெரு வடிவுக் கருந்துவளைகள் குடியிருக்கும் என்று பிரியா கூறுகிறார் , நமது பால்வீதி milkyway காலக்சியில் நடுவே உள்ள கருந்துளைகள் அசுர கருந்துளைகள் விட ஆயிரக்கணக்கான மடங்கு சிறியது என்கிறார். விண்வெளியில் கருந்துளைகள் கண்ணுக்குத் தெரியாமல் போயினும் அதனது வடிவை விஞ்ஞானிகள் மறைமுகமாக மதிப்பீடு செய்யமுடிகிறது. அவைகள் அணுவைப் போல் சிறிதாகவும் இருக்கலாம்

அசுர வடிவத்திலும் இருக்கக்கூடிய இதற்கு காரணம் என்ன?

நிறைகள் கூடு பெரிதாக வரையின்றி பூத வடிவம் பெறுகின்றனவா அல்லது உச்ச வரம்புகள் நின்று விடுகின்ற்னவா ?

இந்த ஆராய்ச்சியில் அல்லும் பகலும் உழைத்து நிலைத்துவம் அடைந்து வெற்றி பெற்ற பிரியம்வதா நடராஜனை நினைக்க மிகப் பெருமையாக இருக்கிறது அவர் இந்தியாவிற்கே பெருமை சேர்த்திருக்கிறார்

இவரும் நோபல் பரிசுகளின் வரிசைகளில் வந்த டாக்டர் ஸர் சி வி ராமன் டாக்டர் சுப்பிரமண்யன் சந்திரசேகர், கணித மேதை திரு இராமனுஜன் போல் நோபல் பரிசின் வழி நோக்கி நடக்கிறார் அந்த இலக்கை அடைந்து விடுவார் என்பதிலும் ஐயமில்லை. விஞ்ஞானத்தில் “பிரியாவின் வரம்பு” என்ற பெயருடன் இது மிகப் பிரபலமாகி விடும் ,இவருடைய இந்தக் கண்டுப்பிடிப்பால் நோபல் பரிசுக்கும் தேர்ந்தெடுக்கப்படுவார் என் நம்பிக்கை உள்ளது இவரைப்பற்றி அணுசக்தியில் பணி புரிந்து பின் ஓய்வு எடுத்துக் கொண்ட விஞ்ஞானி திரு சி. ஜெயபாரதன் மிகவும் சிறப்பாக எழுதியுள்ளார் ,அவரின் உதவியால் நானும் இவரைப் பற்றி தெரிந்து கொண்டு இந்தியாவிலும் அதுவும் தமிழ்நாட்டில் நமக்குப் பெருமை சேர்த்து வரும் செல்வி பிரியா அவர்கள் மென்மேலும் சிறக்க வாழ்த்துவோம்!

படத்திற்கு நன்றி : http://www.astro.yale.edu/priya/

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *