சிவம் அசோசியேட்ஸ்* வழங்கும் வீரய்யா

0

செல்வரகு

சிவம் அசோசியேட்ஸ் தயாரிப்பில் ‘வீரய்யா’ எனும் படைப்பு திரைக்கு வரத் தயார் நிலையில் உள்ளது. இது தெலுங்கில் வெற்றியடைந்த வீரா படத்தின் தமிழாக்கம்.

கதைச் சுருக்கம்

கடமை தவறாத போலீஸ் அதிகாரியான ஷாம் மகளிர் விடுதியில் ஒரு பெண்ணைக் கற்பழித்த ரௌடியை என்கவுண்டரில் போட்டுத் தள்ளுகிறார். அந்த ரௌடி மிகப்பெரிய தாதாவின் தம்பி என்பதால் போலீஸ் அதிகாரி ஷாமை பழிவாங்கத் துடிக்கிறான். அதன் விளைவாக ஷாமின் மகனை கொன்று எரித்து விடுகிறான். உன் மகளையும் கொல்லாமல் விட மாட்டேன் என்று மிரட்டுகிறான். அதன் பின் பல சோதனைகளைச் சந்திக்கும் ஷாமின் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக பல கலைகளில் தேர்ச்சியடைந்த ரவிதேஜா அனுப்பப்படுகிறார். ரவிதேஜாவை ஷாம் மனைவி (ஸ்ரீ தேவி விஜயகுமார்) பல வகைகளில் அவமானப்படுத்துகிறாள். இந்நிலையில் ரவிதேஜா உண்மையான செக்யூரிட்டி இல்லை என்று தெரியவர, அதன் பின் வில்லன்களை அழிப்பது தான் கதை. ரவிதேஜா யார்? அவன் ஏன் ஷாமுக்கு செக்யூரிட்டியாக வந்தான்? விரைவில் வெள்ளித் திரையில் காண்க. இப்படத்தில் ஷாம், ரவிதேஜா, காஜல் அகர்வால், டாப்சி, ரோஜா, ஸ்ரீ தேவி விஜயகுமார், நாசர், சரண்ராஜ், பிரதீப் ராவத் (கஜினி வில்லன்), சுப்புராஜ், காட்ராஜ் என பல முன்னனி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு நாகர்கோயில், பெங்களுரு, அம்பா சமுத்திரம், ராஜமுந்திரி மற்றும் ஆந்திர பிரதேசத்தில் படமாக்கப்பட்டுள்ளது.

இதில் மொத்தம் 7 பாடல்கள் இடம் பெறுகிறது. இதன் பாடல் காட்சிகள் வெனீஸ், சுவிட்சர்லாந்து, லண்டன், புக்கட் மற்றும் ஆஸ்திரேலியாவில் படமாக்கி வடிவமைக்கப்பட்டுள்ளது.

டாப்ஸி ஆடும் அறிமுக ஒரு பாடலுக்கு ( எங்க எங்க இருக்கானோ) மட்டும் 75 லட்சம் செலவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இப்படத்தின் சிறப்பு அம்சமாக சண்டைக் காட்சியில் 1000 கார்கள் வரிசையாக அணிவகுக்கப்பட்டு கார் சேசிங் காட்சிகளும், ஒரு பெரிய புல்டோசர் அடித்து நொறுக்கிய காட்சிகளும் இப்படத்திற்கு வலு சேர்க்கிறது. அனைத்து கட்ட வேலைகளும் முடிவடைந்த நிலையில் உள்ள இத்திரைப்படம் ஏப்ரல் மாதம் திரையிடப்படுகிறது.

தொழில் நுட்பக் கலைஞர்கள்:

தயாரிப்பு – சுந்தரலட்சுமி
இயக்கம் – ரமேஷ் வர்மா
ஒளிப்பதிவு – சோட்டா மு. நாயுடு
எடிட்டர் – ராமா ராவ்
இசை – ளு.ளு.தமன்
வசனம் – ஹசுமு. ராஜராஜா
பாடல்கள் – கல்யாணஜி, தமிழமுதன்,
சுதந்திரதாஸ், மணியன் பிரதீப்
ஆக்ஷன் – ராம் லட்சுமணன்
தயாரிப்பு நிர்வாகம் – ஆ.சம்சுதின்
மக்கள் தொடர்பு – எஸ். செல்வரகு

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *