காயத்ரி பாலசுப்ரமணியன்

மேஷம்: இந்த வாரம் மாணவர்களுக்குப் பழைய நட்புகளை மீண்டும் சந்தித்து மகிழும் வாய்ப்பு உருவாகும். பெண்கள் உறவுகளால், சில அசௌகரியங்களைச் சகித்துக் கொள்ளும் நிலைக்கு உள்ளாகலாம். கலைஞர்கள் அக்கறை கொண்டவர்களின் ஆதரவோடு புதிய முயற்சிகளில் இறங்கலாம். வியாபாரிகள் அரசு வகையில் முயற்சிக்கும் காரியங்கள் அனுகூலமாகும் வரை பொறுமையாய் இருப்பது நல்லது. சில நேரம் பங்குதாரர்கள் ஏறுமாறாக நடந்து கொள்ள முயற்சி செய்வார்கள். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கலில் அவசரப் போக்கிற்கு இடம் தராமல் இருந்தால், புதிய சிக்கல்கள் உருவாகாது. பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு உதவிகள் கிடைத்தாலும் பயன் படுத்திக் கொள்ள முடியாத நிலை நிலவும். அலுவலகத்தில் நிலவும் போட்டியைச் சமாளிக்க அதிக உழைப்பும், நேரமும் தேவைப்படும். பெருந்தொகையைக் கையாளுபவர்கள் கவனமாக நடந்து கொண்டால், உங்களின் நற்பெயருக்குக் களங்கம் ஏதும் நேராது.

ரிஷபம்: சுய தொழில் புரிபவர்களின் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கக் கூடிய வாரம் இது. வியாபாரிகள் சலுகைகளையும், வாய்ப்புகளையும் எளிதில் தக்க வைத்துக் கொள்ள, பொறுமையைக் கடைப்பிடியுங்கள். வழக்கு விவகாரங்களில், நேரடிக் கவனம் செலுத்தினால், அவை சாதகமாய் மாறும் வாய்ப்புக்கள் கூடுதலாகும். பணியில் இருப்பவர்கள் தெளிவான முடிவு எடுத்து உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெற்று மகிழ்வீர்கள். பெண்களுக்குக் கடினமான முயற்சிக்குப்பின் சில காரியங்கள் பலிதமாகும். எனவே வாக்குறுதிகளைக் கொடுக்கும் முன் யோசனை செய்யுங்கள். கலைஞர்கள் மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணம் அவர்களின் தகுதிக்கான பரிசாய் இருக்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள் வீண் புரளிகளை நம்பிச் செயல்பட வேண்டாம். மாணவர்களுக்கு எதிர்ப்புகள் வலுக்கும் வாய்ப்பு உள்ளதால், எதிலும் எச்சரிக்கையாய் இருப்பது நல்லது.

மிதுனம்: சிறந்த பணியாளர்கள் உங்கள் வசம் இருக்க, வியாபாரிகள் அவர்களுக்கு வேண்டிய சலுகைகளை வழங்குதல் அவசியம். பணியில் இருப்பவர்கள் திறமையோடு பொறுமையையும் சேர்த்துக் கொண்டால் வேலைகள் எளிதில் முடியும். எதிர்பாராமல் கிடைக்கும் நல்ல அறிமுகங்கள் கலைஞர்களின் மன சந்தோஷத்தை அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டியாளர்களின் கை ஓங்கும் நிலை இருப்பதால், வியாபாரிகள் எதிலும் கவனமாக இருப்பது அவசியமாகும். மாணவர்கள் பல் மற்றும் கண் சம்பந்தமான நோய்களை உடனுக்குடன் கவனித்து வந்தால், ஆரோக்கியம் சீராக இருக்கும். கலைஞர்கள் தீய நட்பைப் புறக்கணித்தால், வாழ்க்கை செம்மையாகத் திகழும். உயர்பதவியில் இருப்போர்கள் அதிக மரியாதை காண்பிப்பவர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. சுய தொழிலில் மனதுக்குப் பிடித்த மாற்றங்களைச் செய்ய சிறிது காலம் காத்திருக்கும் நிலை நிலவும்.

கடகம்: அவ்வப்போது சிறிது ஆரோக்கிய நலிவு ஏற்பட்டாலும், பெண்கள் நினைத்த காரியத்தை முடித்து மகிழ்வார்கள். பொது வாழ்வில் இருப்பவர்கள் எதிலும் அளவாக இருந்தால், வெளி வட்டாரத் தொடர்பு லாபகரமாக இருக்கும். கலைஞர்கள் மேற்கொள்ளும் பிரயாணங்களில் சற்றுக் கவனமாய் இருத்தல் நலம். வீண் செலவைக் குறைத்தால், வியாபாரிகள் வேண்டிய காரியங்களுக்குப் பணம் ஒதுக்கலாம். ஆர்வத்துடன் பாடம் பயிலும் மனோ பாவம் மாணவர்களுக்கு அதிக மதிப்பெண் பெற உதவியாய்த் திகழும். பெற்றோர்கள் பிள்ளைகளின் குறைகளை இதமாகச் சுட்டிக் காட்டினால், தவறுகளை அவர்களே திருத்திக் கொள்வார்கள். சுய தொழிலில் உள்ளவர்கள் வாகனங்களுக்குரிய காப்பீடு முதலியவைகளை உரிய கெடுவுக்குள் செலுத்தி விட்டால், தண்டம் கட்ட வேண்டியதிலிருந்து தப்பிவிடலாம். அதிகாரிகளால் ஏற்பட்ட கெடுபிடிகள் தளர்ந்து விட்டாலும், பணியில் இருப்பவர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பில் கவனமாக இருந்தால், வேண்டிய சலுகைகள் பெறலாம்.

சிம்மம்: பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு அதிகப் பணம் தருவதைக் குறைத்துக் கொண்டால், அவர்கள் வழி தவறாமல் இருப்பார்கள். மாணவர்கள் உங்கள் சக்தியை அதிகரிக்க சத்தான உணவு வகைகளை உண்டு வாருங்கள். சோர்வின்றி கல்வி பயில முடியும். பணியில் இருக்கும் பெண்கள் உங்கள் பிரச்னைகளை நம்பிக்கையானவர்களுடன் ஆலோசனை செய்து தீர்வு காண்பது நல்லது. கலைஞர்கள் பூர்வீகச் சொத்தையும், குடியிருக்கும் வீட்டையும் மாற்றியமைப்பதற்காக அதிகத் தொகை செலவு செய்ய வேண்டியிருக்கும். வியாபாரிகள் குடும்பத்தினரின் ஆலோசனைக்குப் பின் புதிய முயற்சிகளில் இறங்குவது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்கள் தங்கள் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டை போட முயல்பவர்களின் சகவாசத்தைத் தவிர்த்தால், நல்ல நிலையை அடையலாம். பொறுப்பில் இருப்பவர்கள் எந்த இடத்திலும் பணிவாகப் பேசுவது நல்லது. பொது வாழ்வில் இருப்பவர்கள் மறைமுக எதிரிகளின் போக்கை அறிந்து கொள்வது அவசியம்.

கன்னி: இந்த வாரம் உறவுகள் சந்தோஷத்தோடு, சிறு செலவுகளையும் சேர்த்தழைத்து வருவார்கள். முதியவர்கள் உணவு வேளைகளைத் தவற விடாமலிருப்பது அவசியம். பொறுப்பில் இருப்பவர்கள் தேவையில்லாமல் உணர்ச்சி வசப்படுவதைக் குறைத்துக் கொள்ளுங்கள். வேலைகள் சீராக நடந்து கொண்டிருக்கும். பாராட்டைப் பெறக்கூடிய அளவிற்குக் கலை நிகழ்ச்சிகள் கச்சிதமாய் நடந்தேறுவதால், கலைஞர்கள் உற்சாகத்துடன் திகழ்வார்கள். யோசித்து நிதானமாகச் செயல்படுத்தக் கூடிய எல்லா விஷயங்களும் விரும்பிய பலனைத் தரும் என்பதைப் பெண்கள் நினைவில் கொண்டால், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கலை நயத்துடன் செய்யும் காரியங்களால், அலுவலக விழா ஆகியவற்றில் ஆர்வத்துடன் பங்கெடுத்துக் கொள்வீர்கள். பொது வாழ்வில் உள்ளவர்கள் பிரச்னைக்குரிய விஷயங்களில் இருக்கும் சட்டச் சிக்கல்களை உணர்ந்து முடிவெடுப்பது நல்லது. பொறுப்பில் இருப்பவர்கள் வரவு, செலவு இரண்டிலும் கவனமாக இருந்தால், பொருளாதாரம் சறுக்காமல் இருக்கும்.

துலாம்: வியாபாரிகளுக்குச் சக நண்பர்கள் தொழில் ரீதியான முன்னேற்றத்திற்கு உதவி புரிவார்கள். இந்த வாரம் மாணவர்கள் மனதில் இனம் புரியாத கவலை, பயம் ஆகியவை வந்து போகும். பொது வாழ்வில் இருப்பவர்கள் பிறருக்கு உதவி செய்யும் முன் அவர்களின் தரதரத்தை அறிந்து கொண்டு செயல்படவும். பணியில் உள்ளவர்கள் அறிமுகமில்லாதவர்களின் பேச்சை நம்பி அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். பெண்களுக்குக் குடும்பத்தோடு சென்று குல தெய்வ வழிபாட்டை மேற் கொள்ளும் வாய்ப்பு கிட்டும். புதிய ஒப்பந்தங்களால். கலைஞர்கள் நிதி நிலைமையில் முன்னேற்றம் காண்பர். இந்த ராசிக் காரர்களுக்குச் சகோதர வழி உறவால் ஆதாயம் உண்டு. பொறுப்பில் உள்ளவர்கள் தாமதப்பட்ட காரியங்களை முடிப்பதற்குத் தகுந்த திட்டமிடுதல் நல்லது. முதியவர்கள் உணவு, உறக்கம், உழைப்பு – மூன்றிலும் அளவாக இருந்தால், உடல் ஆரோக்கியமாக திகழலாம்.

விருச்சிகம்: பெண்கள் அண்டை அயலாரிடம் உங்கள் சொந்த விஷயங்களைப் பரிமாறிக் கொள்வதைக் குறைத்துக் கொள்ளவும். இந்த வாரம், பணியில் உள்ளவர்கள் அதிகாரிகளின் கெடுபிடிகளுக்குப் பணிந்து நடக்க வேண்டியிருக்கும். பணி மாற்றத்திற்கு மனு செய்தவர்கள் பொறுமையாய் இருப்பது நல்லது. மாணவர்கள் வாக்கு வாதங்களைத் தூண்டும் சந்தர்ப்பங்களைப் பக்குவமாகக் கையாண்டால் நண்பர்கள் இடையே கருத்து வேறுபாடு அதிகரிக்காது. போக்குவரத்து, வாகனப் பராமரிப்பு ஆகியவற்றால் உங்கள் செலவினங்கள் கூடும். வியாபாரிகள் பணியாளர்களின் சிறப்பான ஆதரவைப் பெற, அவர்களிடம் இன்முகத்தோடு நடந்து கொள்வது அவசியம். பொது வாழ்வில் உள்ளவர்கள் பிறர் குற்றம் சொல்லாத அளவில் தங்கள் பொறுப்புகளை முடிப்பது நல்லது. கலைஞர்களை முக்கியமான பொறுப்புகள் அங்கும் இங்கும் அலைக்கழிக்கலாம்.

தனுசு: மாணவர்கள் கோபதாபங்களால் உங்களை நாடி வரும் நல்ல நட்பைப் புறக்கணிக்காதீர்கள். வீடு, மனை வாங்க விரும்புபவர்கள் வில்லங்கம் இல்லாதவற்றைத் தேர்வு செய்வது நல்லது. சுய தொழில் புரிபவர்கள் வாக்குறுதிகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டுக் கடுமையான உழைப்பில் இறங்க வேண்டியிருக்கும். இந்த ராசிக்காரர்கள் கடன்பட்டாவது குடும்ப உறுப்பினர்களைத் திருப்திப் படுத்தும் நிலைக்குத் தள்ளப்படுவீர்கள். கலைஞர்களுக்கு ஏமாற்றமாய் இருந்த விஷயங்கள் சாதகமாய் மாறும் சூழல் உருவாகும். வியாபாரிகள் பண விவகாரங்களில், பங்குதாரர்களுடன் கலந்து பேசி செயல்படுதல் நல்லது. பெண்கள் அலுவலக அளவில் நட்புகளை ஓர் எல்லையோடு நிறுத்திக் கொண்டால், மன சஞ்சலம் குறைவதோடு அதிக இழப்புகளும் இராது. சுய தொழில் புரிபவர்கள் ஆரம்ப முயற்சிகளில் சுணக்கம் காட்டாமல் இருந்தால், வெற்றி வரும் வழி, லாபம் இரண்டும் உறுதியாகும்.

மகரம்: பெற்றோர்கள் பிள்ளைகளின் கருத்துக்கு மதிப்புக் கொடுத்து நடந்து கொண்டால், அவர்கள் உங்கள் சொற்படி நடக்க முன் வருவார்கள். பெண்கள் சமையலறையில் பாதுகாப்பாக வேலை செய்வது அவசியம். பத்திரிக்கைத் துறையில் வேலை செய்பவர்கள், சீராக வேலை செய்தால், தேவையான செய்திகளைச் சேகரித்து வைப்பதன் மூலம் தேவையற்ற உளைச்சலைத் தவிர்த்து விடலாம். கலைஞர்கள், பணச் செலவில் கட்டுப்பாடாய் இருந்தால், வரவுக்குள் வாழ்க்கையை ஓட்ட முடியும். மேலும் மாணவர்கள் மனத் தடுமாற்றத்தைத் தூண்டும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்து விடவும். சுய தொழில் புரிபவர்கள் உங்களுக்கு உதவக் காத்திருக்கும் நண்பர்களையும், வாய்ப்புக்களையும் நழுவ விடாமல் தக்க சமயத்தில் பயன்படுத்திக் கொண்டால், எதிர்காலம் வளமாய் அமையும். கடினமான பணிகளில், மூத்த அதிகாரிகளின் ஆலோசனையைப் பின்பற்றுதல் நலம்.

கும்பம்: இந்த வாரம், பணியில் உள்ளவர்கள் அதிகாரிகளின் கெடுபிடிகளுக்குப் பணிந்து நடக்க வேண்டியிருக்கும். போக்கு வரத்து, வாகனப் பராமரிப்பு ஆகியவற்றால் உங்கள் செலவினங்கள் கூடும். கலைஞர்கள் உங்கள் புகழைக் கண்டு பொறாமைப் படுபவர்களிடம் பக்குவமாக நடந்து கொள்வது அவசியம். பொறுப்பில் உள்ள சிலருக்குத் தேவையில்லாத இடமாற்றம் உண்டாகும். பொது வாழ்வில் இருப்பவர்கள் சமயோசிதமாகச் செயல்பட்டால், எதிரிகளின் கரம் மேலோங்காதிருக்கும். கலைஞர்கள் செய்யும் வேலையில் கண்ணும் கருத்தாக இருந்தால், நல்ல பெயரைப் பெற இயலும். பணிச்சுமை கூடுவதால், பெண்களுக்கு எரிச்சலும், அசதியும் அவ்வப்போது வந்து போகலாம். பொது வாழ்வில் இருப்பவர்கள், தெரிந்தவர்களுக்கு மட்டும் சில சலுகைகளை அளிப்பது, விதிமுறைகளைத் தளர்த்துவது போன்றவற்றைத் தவிர்த்து விடுங்கள். உங்கள் கௌரவம் குலையாமலிருக்கும்.

மீனம்: மாணவர்கள் மன தைரியம் குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். எதையும் சமாளிக்கும் ஆற்றல் கிட்டும். பணியில் இருப்பவர்கள் உடன் பணி புரிபவர்களுடன் சர்ச்சைக்குரிய விஷயங்களைப் பற்றிய அலசலைத் தவிர்ப்பது சிறந்தது. பொது வாழ்வில் இருப்பவர்கள் பொறாமைக்காரர்களின் திட்டத்தை முறியடிக்கும் வகையில் உங்கள் ஆதரவைப் பலப்படுத்தினால் வெற்றி உறுதி. கலைஞர்களுக்குத் தட்டிச் சென்ற வாய்ப்புகள் திறமையின் அடிப்படையில் மீண்டும் உங்கள் வசமாகும். இந்த வாரம் பெண்களின் நிதி நிலையில் சிறிது அதிருப்தி இருந்தாலும், குடும்பச்செலவுகள் தடையின்றி நடக்கும். இந்த வாரம் சில சமயம் சரக்குகள் வரும் வரை வியாபாரிகள் சிறிது பதற்றத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும். பெற்றோர்கள் பிள்ளைகளின் நிறை குறைகளை அறிந்து கொண்டால் அவர்களை நல்வழிப்படுத்துவது எளிதாகும். கலைஞர்கள், பண விஷயங்களில் எதையும் ஒரு முறைக்குப் பல முறை யோசித்துச் செய்வதே நல்லது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.