ஜெ.ராஜ்குமார்

இரண்டு தீபங்கள் ஏற்றச் செய்தேன்
இதயச் சுமையை இறக்கி வைத்தேன்
இன்னொரு மகளைப்
பெற்றெடுத்தாலும்-அவளையும்
ஒரு தீபம் ஏற்றச் செய்வேன் !

பெண்ணே உன் புகழ் பாட வேண்டும்
பூமிக்கு உன் அருமை உணர்த்த வேண்டும்

பெண் குழந்தையெனப் பிறப்பாய்
கொஞ்சும் மொழியில் எல்லோரையும் ஈர்ப்பாய்
கொஞ்சம் வளர்ந்து – சிறுமியெனப்
பேர் எடுப்பாய்
சில்மிஷங்களைப் புரிந்து பயமுறுத்துவாய்
துடுக்காய் இருந்து ஆச்சர்யப்படுத்துவாய்

பெண்ணென உண்மையில் – உலா வருவாய்
பலப் பல சாதனைகள் புரிந்து –
‘ஆணுக்கு நிகர் பெண்’ணென உரைப்பாய்
கண் போன்ற பெண்ணே நீ – அந்த
பாரதி கண்ட புதுமைப் பெண்ணென்று நடப்பாய்!

கங்கையாய் இருந்த நீ – மங்கையாய் மாறிடுவாய்
மறு வீட்டின் விளக்கை உறவைக்கொண்டு ஏற்றிடுவாய்
புதுச் சொந்தங்கள் பல சேர்த்திடுவாய்
பந்தம் விடாமல் பாதுகாத்திடுவாய் பெற்றோரையும்…!

தாய்மை என்னும் – தூய்மையான
பதவியை ஏற்றுக்கொள்வாய்…!
தவம் போல் பிள்ளையைப் பெற்றெடுப்பாய்
தரணியில் அவனுக்கு நாளும் கற்றுக்கொடுப்பாய்!
தன் பிள்ளையைப் பிறர் புகழ்பாடக்
கேட்டு மகிழ்வாய்…!
அவனுக்கொரு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுத்து
நிம்மதிப் பெருமூச்சு விடுவாய்…!

தான் பெற்ற பிள்ளை – அவனுக்கொரு பிள்ளை பெற்று
தன் மடியில் போடும்போது
பிறர் பெற்ற இன்பத்தைவிட – நீ பெற்று மகிழ வேண்டும்
எனத் தாலாட்டி – நல்ல மூதாட்டியாய்
வாழ்ந்து முடிப்பாய்…!

 

படத்திற்கு நன்றி:http://shymolecules.blogspot.in/2010/07/her-first-day_20.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.