உருமியின் உலக உரிமை
ஜான் (பி.ஆர்.ஓ)
உருமியின் உலக உரிமையை வாங்கினார் கலைப்புலி S தாணு
திரைப்பட வரலாற்றில் மற்றுமொரு மைல்கல் தயாரிப்பாக ரூபாய் 30 கோடி பொருட்செலவில் பிரமாண்டமாகத் தயாராகியிருக்கும் படம் உருமி .
தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கும் இந்த பிரம்மாண்டமான படத்துடன் இன்னொரு பிரம்மாண்டமும் சேர்ந்திருக்கிறது. ஆம், தமிழ்த் திரைப்படத்துறையின் பிரம்மாண்டத் தயாரிப்பாளர் விநியோகஸ்தர் கலைப்புலி எஸ் தாணு உருமி படத்தின் உலக விநியோக உரிமையை வாங்கியிருக்கிறார்.
தயாரிப்புக்கென்று 30 கோடி ரூபாய் செலவு செய்து எடுக்கப்பட்ட உருமி திரைப்படத்தை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்குக் கொண்டு செல்லும் பொருட்டு மேலும் பல கோடிகளைச் செலவு செய்திருக்கிறார் கலைப்புலி S தாணு.
தமிழகத்தை ஆண்ட அன்றைய மூவேந்தர்களில் ஒருவரான சேர மன்னனின் வீர தீர பெருமைகளையும் அவனது கடல் ஆதிக்கத்தையும் கூறும் படமாக உருமி இருக்கும். உருமி படத்தினை அவர் ஒரு பொழுதுபோக்குப் படமாக மட்டும் இல்லாமல், நமது பெருமைகளைச் சொல்லும் படமாக சமூக நோக்கோடு சொல்லியிருப்பதோடு, இரண்டு காலகட்டத்தில் உள்ள நிகழ்வை தனது வரலாற்று நுணுக்கத்துடன் கையாண்டு பிரமிக்க வைத்துள்ளார் இயக்குனர் சந்தோஷ் சிவன்.
15 ஆம் நூற்றாண்டையும் இருபத்தியோராம் நூற்றாண்டையும் கண்முன்னே நிறுத்தும் இந்தப் படம்
‘வேட்டை’ படத்துக்குப் பிறகு ஆர்யாவின் இன்னொரு பரிமாணத்தை உருமியில் காணலாம். வரலாற்று படத்தில் சண்டைக்காட்சிகளிலும், நடிப்பிலும் பின்னி எடுத்திருக்கிறார்.
பிருதிவிராஜ், பிரபுதேவா, ஆர்யா, மதராஸப்பட்டினம் அலெக்ஸ் ஆகியோருடன் ஜெனிலியா, வித்யாபாலன், தபு, நித்யா மேனன் என ஒரு நட்சத்திரப் பட்டாளமே போட்டிபோட்டு நடித்திருக்கும் இப்படத்தின் எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் எகிறிக்கிடக்க, தனது v creations மூலம் விரைவில் திரைக்கு கொண்டுவருகிறார் கலைப்புலி S தாணு. விஜயின் துப்பாக்கி படத்திற்கு முன் தான் வெளியிடும் மிகப் பிரம்மாண்டமான அதேசமயம் மக்களை மகிழ்விக்கும் சிறந்தபடம் உருமி.. அதை உலகம் முழுவதும் கொண்டுசெல்லும் கடமை எனக்கு இருக்கிறது என்றார் கலைப்புலி S தாணு.
வசனங்களை சசிகுமரன் எழுத, கவிப்பேரரசு வைரமுத்து பட்டை தீட்டியிருக்கும் அற்புதமான பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார் தீபக் தேவ். மற்றும் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப பின்னணி இசையிலும் மிரட்டியிருக்கிறார். தேசிய விருது பெற்ற ஸ்ரீகர்பிரசாத் உருமியை எடிட் செய்திருக்கிறார். கலை இயக்குனராக சுனில் பாபுவும் சண்டைப்பயிற்சியினை அனல் அரசுவும் செய்திருக்கிறார்கள். சவாலான 15 ஆம் நூற்றாண்டு காட்சிகளைத் தம் கண்முன் கொண்டு வந்திருக்கிறார் சுனில் பாபு. அதே நேரம் சுருள்வாள்சண்டை, களரிச் சண்டை என்று தன் பங்குக்கு மிரட்டியிருக்கிறார் அனல் அரசு.
விரைவில் திரைக்கு வரவிருக்கிறது உருமி.
– A. ஜான் PRO 9841818194