சோதிவடிவே தயைகூர்ந்து வழிநடத்து!

 

ஜான் எச்.நியூ-மேன் – 1833

 

இளம் துறவியாக, இத்தாலி நாட்டில் பயணம் மேற்கொள்ளும் வேளையில், ஜான் நியூமேன் நோய்வாய்ப்பட்டு, மூன்று வாரங்கள் ஜியோவானியில் ஒரு குடிலில் தங்க வேண்டியதாகிறது. உடல் நலம் பெற்று பேலர்மோவிற்குத் தம் பயணத்தை தொடர்ந்தார்.

”என் தங்குமிடத்திலிருந்து புறப்படும் முன் என் படுக்கையின் மீது அமர்ந்து கொண்டு வேதனையுடன் தேம்பியழ ஆரம்பித்தேன். என் செவிலியராக பணியாற்றிய உதவியாளர் அதற்கான காரணத்தைக் கேட்டார். உடல் நலனில் ஏதேனும் கோளாறு உளதோ என்று”

“இங்கிலாந்தில் யாம் செய்ய வேண்டிய பணி ஒன்றுள்ளது. எமக்கு எம் இல்லத்தின் நினைவு வந்து எமை அலைக்கழிக்கிறது. ஆயினும், ஓர் பெரிய படகு வேண்டி பேலர்மோவில் மூன்று நாட்கள் தங்க வைக்கப்பட்டிருந்தேன். கிறித்தவ வழிபாட்டுத்தலங்கள் பலவற்றையும் தரிசித்து, அங்கு எந்த சேவைகளும் செய்யாவிட்டாலும்கூட, எம் பொறுமையின்மையை சற்றே தாங்கிக் கொள்ள முடிந்தது. இறுதியாக மெர்சிலிஸின் எல்லைக்குட்பட்ட ஓர் இளஞ்செவ்வண்ண படகில் ஏறினேன். அந்த ஒரு வாரமும் போனிபேசியோவின் நீர்க்காலில், நாங்கள் மிக அமைதியாக இருந்த அந்த வேளையில்தான் இந்த வரிகளை எழுதினேன் .சோதிவடிவே தயைகூர்ந்து வழிநடத்து, – அன்றிலிருந்து அனைவராலும் அறியப்பட்ட ஒன்றானது. இஃது……”

 

சோதிவடிவே தயைகூர்ந்து வழிநடத்து!

சூழ்ந்துள்ள அரையிருளினூடே தயைகூர்ந்து சோதியை எம் மீது செலுத்தி எமை வழிநடத்து!
யாம் இல்லம் விட்டு வெகு தொலைவிலும், இரவின் இருளிலும் உள்ளேனே.
நீர் எம்மை வழிநடத்தும்!
எம் பாதங்களை உம் காப்பில் கொள். தொலைவின் காட்சியை காணச் சொல்லவில்லையே யான், ஓர் அடி போதுமே எமக்கு.

நீர் எம்மை வழிநடத்த வேண்டுமென்ற எந்த வேண்டுதலும் எம்மிடம் இல்லை.
எம் பாதையைத் தெரிவு செய்து காணவே யாம் விரும்பினோம், ஆயினும் தற்போது நீர் எம்மை வழிநடத்துமே!
யான் பகட்டின் மீதும், வன்மத்தின் அச்சம் மீதும் நாட்டம் கொண்டேன், எம் விருப்பங்களை அகந்தை ஆட்சி செய்தது. கடந்த காலங்களை நினைவில் கொள்ள வேண்டாமே!

இதுகாறும் எமக்கு நல்வாக்கருளிய அந்த சக்தி, இனியும் கட்டாயம் எம்மை வழிநடத்தும்.
முட்புதர்களின் மீதும், சதுப்பு நிலங்களின் மீதும், செங்குத்தானப் பாறை மற்றும் விசை நீரோட்டம் மீதும், இரவு விடைபெறும் வரை,
அந்தக் காலையுடன் வெகுகாலமாக யான் காதலித்துக் கொண்டிருந்த அத்தேவதைகளின் புன்னகையையும், சில மணித்துளிகள் இழந்தேன்!

இடைக்காலத்தில், தங்கள் காலடிபட்ட குறுகிய கரடு முரடான பாதையினூடே,
வழிநடத்தும் காப்பாளரே, குழவியைப் போன்றதொரு நம்பிக்கையுள்ள எம்மை எம் இல்லத்திற்கு வழிநடத்தும்,
எம் கடவுளுக்கான இல்லம்.

நிலவுலகிற்கேயுரித்தான சண்டை சச்சரவுகளுக்குப் பிறகு
அமைதியான சோதியின் நித்திய வாழ்க்கையின் நிரந்தர ஓய்வு.

 

LEAD, KINDLY LIGHT – மூலம்

 

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “LEAD, KINDLY LIGHT – மொழிபெயர்ப்பு

 1. நல்வரவு ஆகுக. மெச்சத்தக்க மொழியாக்கம். என்றோ ஒரு நாள் கார்டினல் அவர்களை பற்றி, நான் எழுதியிருக்கலாம். அவர் கத்தோலிக்க மதத்திற்கு மாறியது ஒரு ஆன்மீக யாத்திரை. அண்ணல் காந்திக்கு பிரியமான பிரார்த்தனைப்பாடல், இது. ஜான் கென்னடி இரங்கல் போது, டில்லியில், இதை இசைத்தது நினைவுக்கு வருகிறது. அனைவர் கண்களும் கலங்கின.

 2. என்றோ படித்தது,
  இன்று தங்கள்
  இதமான மொழியெர்ப்பில்..
  நன்றாய்.. தொடர்க…!
         -செண்பக ஜெகதீசன்… 

 3. இன்னம்பூர் ஐயாவிற்கும், திரு செண்பக ஜெகதீசன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

  அன்புடன்

  பவள சங்கரி.

 4. உங்கள் மொழிபெயர்ப்பு பொருளைத் தெளிவாகத் தருகிறது. இதற்கு வேறு இரு மொழிபெயர்ப்புகள் பாடல் வடிவில் கேட்டிருக்கிறேன். ஒன்று

  அருட்சோதியே வழி காட்டிடு என்னை அழைத்துமே ஐயா சென்றிடு
  இருள் சூழுதே ஐயா எங்கு நான் செல்வேன் இல்லம் தூரத்தில் ஆச்சுதே

  என்று துவங்கும். அடுத்தது,

  சூழ்ந்திடும் இருளில் சுழலுகின்றேனுக்கு சுடரொளியே வழிகாட்டு

  என்று துவங்கும். 

  மற்ற வரிகள் மறந்துவிட்டன. அவை கிடைத்தாலும் பெற்றுப் பிரசுரிக்கலாம். 

 5. அன்பின் ஐயா,

  தங்களுடைய ஊக்கமான வார்த்தைகளுக்கு நனி நன்றி.

  அன்புடன்

  பவள சங்கரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *