76 கலைஞர்களுக்குக் கலைமாமணி விருது

0

கலைத் துறையில் சிறப்பாகப் பணியாற்றி வரும் கலைஞர்களைப் பாராட்டி தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் ஆண்டு தோறும் கலைமாமணி எனும் மாநில அளவிலான விருதினை வழங்கிச் சிறப்பித்து வருகின்றது.

விருதுபெறும் ஒவ்வொரு கலைஞருக்கும் பொற்பதக்கம் வழங்கப்படுகிறது. 2008, 2009, 2010ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளுக்கான கலைஞர்களைத் தேர்ந்தெடுத்து, தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம், அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.

அப்பரிந்துரைகளை ஏற்று முதல்வர் கருணாநிதி, 2011 ஜனவரி 28 அன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:

2008 க்கான விருதுப் பட்டியல்

விருது பெறுபவர் துறை
1 சசிரேகா பாலசுப்ரமணியன் நாட்டியம்
2 காயத்ரி சங்கரன் கர்நாடக இசை
3 வே. நாராயணப் பெருமாள் கர்நாடக இசை
4 எம்.வி. சண்முகம் இசைக் கலைஞர்
5 இளசை சுந்தரம் இயற்றமிழ் கலைஞர்
6 பி. லெட்சுமி நரசிம்மன் தவில் கலைஞர்
7 காளிதாஸ், திருமாந்திரை நாதஸ்வரக் கலைஞர்
8 பிரேமா ஜெகதீசன் நாட்டியம்
9 ரோபோ சங்கர் சின்னத்திரை கலைஞர்
10 நாமக்கல் வேணுகோபால் கிளாரிநெட்
11 திருக்குவளை சகோதரிகள்சுந்தரி, சாவித்ரி நாதஸ்வரக் கலைஞர்கள்
12 கவிக்கொண்டல் செங்குட்டுவன் இயற்றமிழ் கலைஞர்
13 ச. சுஜாதா க/பெயர் பீர் முகமது நாட்டியம்
14 ராணி மைந்தன் இயற்றமிழ் கலைஞர்
15 ஜி.கே. இராமஜெயம் ஓவியக் கலைஞர்
16 கவிஞர் பட்டுக்கோட்டைசுப்பிரமணியன் இயற்றமிழ் கலைஞர்
17 தஞ்சை சுபாஷினி மற்றும்திருமதி ரமா பரதநாட்டியக் கலைஞர்கள்
18 சி.வி. ரமேஸ்வர சர்மா சமையல் கலைஞர்
19 திருமுருகன் சின்னத்திரை இயக்குநர்
20 பரத்வாஜ் இசையமைப்பாளர்
21 ராஜீவ் மேனன் ஒளிப்பதிவாளர்
22 சிற்பி குட்டப்பன் நாயர் சிற்பக் கலைஞர்
23 தோஹா பேங்க் சீதாராமன் பண்பாட்டுக் கலை பரப்புனர்
24 என். எத்திராசன் கலைப் பரப்புனர்
25 கருணாஸ் நகைச்சுவை நடிகர்

2009 க்கான விருதுப் பட்டியல்

1 காயத்ரி கிரீஷ் கர்நாடக இசை
2 சேக்கிழார் சின்னத்திரை வசனகர்த்தா
3 சாக்ஷி சிவா சின்னத்திரை நடிகர்
4 மாளவிகா சின்னத்திரை நடிகை
5 பூவிலங்கு மோகன் சின்னத்திரை நடிகர்
6 எஸ். முத்துராமலிங்கம் கூத்துக் கலைஞர்
7 பி. முருகேஸ்வரி கரகாட்டக் கலைஞர்
8 ரேவதி சங்கரன் சின்னத்திரை நடிகை
9 தஞ்சை சின்னப்பொன்னு குமார் கிராமியப் பாடகர்
10 எல். ஜான்பாவா சிலம்பாட்டக் கலைஞர்
11 ரேவதி வில்லுப்பாட்டுக் கலைஞர்
12 கே. கருப்பண்ணன் ஒயிலாட்டக் கலைஞர்
13 கே.ஏ. பாண்டியன் நையாண்டி மேளக் கலைஞர்
14 எம். திருச்செல்வம் நையாண்டி மேளக் கலைஞர்
15 சிவகங்கை வி. நாகு நையாண்டி மேளக் கலைஞர்
16 டி. சேகர் கிராமியக் கருவி இசைக் கலைஞர்
17 மு. இளங்கோவன் கிராமியக் கலை பயிற்றுனர்
18 சா. கந்தசாமி இயற்றமிழ்
19 ராஜேஷ் குமார் இயற்றமிழ்
20 நாஞ்சில் நாடன் இயற்றமிழ்
21 ரோகிணி குணச் சித்திர நடிகை
22 சரண்யா குணச் சித்திர நடிகை
23 சின்னி ஜெயந்த் நகைச்சுவை நடிகர்

2010க்கான விருதுப் பட்டியல்

1 பொன். செல்வ கணபதி இயற்றமிழ்
2 பேராசிரியர் தே. ஞான சேகரன் இயற்றமிழ்
3 டாக்டர் சு. நரேந்திரன் இயற்றமிழ்
4 டாக்டர் தமிழண்ணல் இயற்றமிழ்
5 திண்டுக்கல் ஐ. லியோனி இலக்கியச் சொற்பொழிவாளர்
6 சொ. சத்தியசீலன் சமயச் சொற்பொழிவாளர்
7 தேச. மங்கையர்க்கரசி சமயச் சொற்பொழிவாளர்
8 டி.வி. கோபாலகிருஷ்ணன் இசை ஆசிரியர்
9 கே. என். சசிகிரண் குரலிசைக் கலைஞர்
10 குடந்தை ஜெ. தேவிபிரசாத் வயலின் கலைஞர்
11 ஐ. சிவக்குமார் மிருதங்க ஆசிரியர்
12 என்.எஸ். ராஜம் மிருதங்க கலைஞர்
13 ஸ்ரீனிவாசன் வீணை கலைஞர்
14 ராஜேஷ் வைத்யா வீணைக் கலைஞர்
15 திருவாரூர் எஸ். சாமிநாதன் புல்லாங்குழல்
16 கே.வி. இராமானுஜம் புல்லாங்குழல்
17 டாக்டர் தி. சுரேஷ் சிவன் தேவார இசைக் கலைஞர்
18 கல்யாணி மேனன் மெல்லிசைப் பாடகி
19 திருக்கடையூர் முரளிதரன் நாதஸ்வரக் கலைஞர்
20 ரெட்டியூர் செல்வம் தவில் கலைஞர்
21 ஏ.ஹேம்நாத் பரத நாட்டியம்
22 பிரசன்னா ராமசாமி நாடகக் கலைஞர்
23 எப். சூசை மாணிக்கம் நாடக நடிகர்
24 ஆர்யா திரைப்பட நடிகர்
25 அனுஷ்கா திரைப்பட நடிகை
26 தமன்னா திரைப்பட நடிகை

இந்த விருதுகள் வழங்கும் விழா சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 2011 பிப்ரவரி மாதம் 13ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமை மாலையில் நடைபெறும். மேலும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சின்னத்திரை விருதுகளும் – பாரதி விருது, எம்.எஸ். சுப்புலட்சுமி விருது, பாலசரஸ்வதி விருது ஆகியவைகளும் வழங்கப்படும்.

முதலமைச்சர் மு.கருணாநிதி இந்த விருதுகளை வழங்கி, கலைஞர்களைக் கெளரவிக்கிறார்.

விருது பெறும் கலைஞர்கள் அனைவரையும் வல்லமை வாழ்த்துகிறது. இவர்களால் இயல், இசை, நாடகம், நாட்டியம் உள்ளிட்ட அனைத்துக் கலைகளும் மேலும் வளம் பெறட்டும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.