காதலர் தினம் – ஒரு பரபரப்பு

1

விசாலம்

valentines-day-gifts

காதலர் தினம் !
ஒருமித்த இரு மனம்.
மாதம்  முன்பே பரபரப்பு !
கடைகளில் பரிசுகள் குவிப்பு .

இதயச் சின்னத்தில் ஓர் அம்பு !
காமன் விடும் காதல் அம்பு .
கைக்கோத்து ஆடும் காதலர்கள்.
முத்தம் கொடுக்கும் காதல் பறவைகள்.

பரிசுகள் தேடும் இளவட்டங்கள்
பல வண்ணங்களில் காதல் பட்டாளங்கள்
எதை எடுப்பது, எதை விடுவது ?
குழம்பிப்  போகும் மனது.

வியாபாரிக்கு இது பொற்காலம்.
பணம் கொட்டும் இந்தக் காலம்.
‘கிளப்பு’களிலோ விளக்குகள் பல
ரகசிய அறைகளில் நடனங்கள் பல.

தெரிந்த பல நிகழ்வுகள்
தெரியாத பல ரகசியங்கள்
தன்னை மறந்து ஆடுகின்றனர்
டமாரச் சத்தத்தில் நெளிகின்றனர்.

காதலியின்  கண்களில் காதலன் தெரிகிறான்
காதலன் தோளில் காதலி சாய்கிறாள்
கனிரசக் கோப்பை  சிலர் கைகளில்
காதல் காமமானது சிலர் கைகளில்.

தந்தை நாள் வருகிறது
மடலும் பறந்து வருகிறது .
“ஹாப்பி பாதர்ஸ்  டே.. அப்பா”
ஐ  மிஸ் யூ  அப்பா”

தாய் நாள் வருகிறது
மகனின் குரலும் வருகிறது
“ஹாப்பி மதர்ஸ் டே அம்மா
டேக் கேர் அம்மா”

முடிந்து போகிறது அவன் கடமை.
மேலும் எதிர்பார்ப்பதும் மடமை.
வேறு நாள்கள் எடுபடுவதில்லை.
சொன்னாலும் விளங்கப் போவதில்லை.

ஆனால் இந்தக் காதலர் தினம்
மாதமுன்பே களை கட்டுகிறது.

எங்கும் வீசட்டும் அன்பின் வாசம்.
உலகை உய்விக்கும் ஒப்பிலா நேசம்.

=======================================

படத்திற்கு நன்றி – http://www.searchperfectgifts.com

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “காதலர் தினம் – ஒரு பரபரப்பு

  1. தந்தையும் தாயும் காதலித்தால் கனிந்தவர்
    கைவிடுவதால் வரும் தவிப்புப் பொருட்டல்ல.
    எப்படித் தவித்தாலும் வீசட்டும் அன்பின் வாசம்,
    காதல் வாழ்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.