வையவன்

மைசூரில் மானச கங்கோத்ரியில்
மரமே உதிர்ந்து விட்டது போல்
சாலையெல்லாம் கொட்டிக் கிடந்த
கொன்றை மலர் விரித்திருந்த
மஞ்சள் பாவாடை மீது
கால் செருப்புக்குக் கூட
நோகாதவாறு உன்
சிவந்த பாதம் நடந்து
வந்த மிருது மென்மை என் நெஞ்சிலே
மெத்து மெத்தென்று ஒத்தடம் தந்து
கந்தர்வனாக்கியது கணப்பொழுது
      
படத்திற்கு நன்றி:http://fash55.com/jewelery/gold-anklet-bracelet-for-women.php
       

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “என் நெஞ்சிலே ஒத்தடம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *