வேலைக்குப் போவதால் கையில்
வேண்டிய பணம் விளையாடுகிறது.  
ஆண்டாண்டு காலமாய் அப்பாவும்,
அம்மாவும் சிரமப்பட்டதை நான்
குறைத்துவிட்டேன் என்கிற
நினைப்பில், அம்மாவிடம் வாய் ஓயாமல்
அரற்றிக் கொண்டிருந்தேன்
“ஏதேனும் கடன் இருந்தால், சொல்
தீர்த்துவிடுகிறேன் விரைவில்”
அம்மா சிரித்துக் கொண்டே சொன்னாள்,
“பிறந்ததிலிருந்து உனக்கு நினைவு தெரியும் வரை,  
அளித்த முத்தங்களின் கணக்கைத் தீர்க்க முடியுமா? “
என் கண்களில் வழிந்த கண்ணீரால், அவள் பாதத்தை
அலம்பியபின், பதித்தேன் முத்தமொன்று மென்மையாய்.
என் வாழ்நாளுக்குள் வட்டியாவது தீருமோ  என்கிற நினைவோடு!

படத்திற்கு நன்றி

http://www.dinodia.com/ImageBigView.asp?ImageID=295685

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “கடனாளி!

  1. முத்தக் கணக்கும் வேண்டாம்,
    முகத்தில் கண்ணீரும் வேண்டாம்,
    என்னின் பிரதியாய் ஒளிரும் நீ
    , உன்னின் பிரதியாய் ஒன்றைத்தா.
    நான் உனக்குத் தந்ததெல்லாம்
    அவன் தருவான் வட்டியோடு
    அன்று தீரும் கணக்கெல்லாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *