விஜயபாஸ்கரன் புகழஞ்சலிக் கூட்டம்

0

துரைசாமி

சரஸ்வதி பத்திரிகையை 1955இல் தொடங்கியவரும், சோவியத் நாடு பத்திரிகை ஆசிரியர் குழுவின் ஆசிரியர்களில் ஒருவருமான தோழர் விஜயபாஸ்கரன் அவர்களின் மறைவுக்குத் தமிழ் இலக்கிய அன்பர்கள் புகழஞ்சலி செலுத்தினர். சென்னையில் கே.கே. நகர் டிஸ்கவரி புத்தகக் கடையில் 2011 பிப்ரவரி 25 அன்று மாலை 6 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெற்றது.

Vijayabhaskaran_meet
நிகழ்வுக்கு யுகமாயினி இலக்கிய இதழாசிரியர் சித்தன் தலைமை வகித்தார். எழுத்தாளரும் விஜயபாஸ்கரனின் சகோதரருமான  வ.மோகனகிருஷ்ணன் அறிமுக உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட எழுத்தாளர்கள் திருப்பூர் கிருஷ்ணன், சிகரம் செந்தில்நாதன், எம். ஜி. சுரேஷ், பாரதி கிருஷ்ணகுமார், சௌரிராஜன், விஜய மகேந்திரன், அம்பத்தூர் ஆர்.துரைசாமி, கே. பன்னீர்செல்வம், தென்சென்னை மாவட்டச் செயலாளர் எஸ். ஏழுமலை, இசக்கிமுத்து, ஏ. ஏ. எச். கே. கோரி, பிச்சினிக்காடு இளங்கோ, அண்ணாகண்ணன், தாழை மதியவன், குலசேகர் மற்றும் விஜயபாஸ்கரனின் சகோதரி குடும்பத்தினர், இலக்கிய ஆர்வலர்கள் பங்கேற்று அவரது வாழ்வின் நிகழ்வுகளை நினைவுகூர்ந்தனர்.

சரஸ்வதி காலம் என்னும் மணிக்கொடி காலத்திற்குப் பின்பு, முற்போக்கு இடதுசாரிச் சிந்தனை, அழகியல் குறித்து விவாதித்து அவரது இலக்கியச் சாதனைகளைப் போற்றி, புகழஞ்சலி செலுத்தினார்கள்.

மூத்த இலக்கியவாதி தி.க.சி., விஜயபாஸ்கரன் குறித்தான நினைவுகளை கட்டுரையாக எழுதி அனுப்பியிருந்ததையும், திருச்சி உயிரெழுத்து இதழாசிரியர் சுதீர்செந்தில், தஞ்சை சௌந்திர சுகன் இதழாசிரியர் சுகன் அனுப்பியிருந்த அஞ்சலிக் கடிதங்களையும் சித்தன் வாசித்தார். தி.க.சி.யின் கட்டுரை, அமர்வில் விஜயபாஸ்கரன் மீதான ஒரு முழுமையான தோற்றத்தை அளித்தது.

இலக்கிய உலகில் வருங்காலத் தலைமுறை விஜயபாஸ்கரனின் வரலாற்றைத் தெரிந்துகொள்ளும் வகையில் தகுந்த சில திட்டங்களைச் செயல்படுத்திட வேண்டும் எனச் ச.செந்தில்நாதன் அமர்வில் முன்வைத்தார்.

===============================

படம் : வேடியப்பன், டிஸ்கவரி புக் பேலஸ்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *