செல்வம் செழிக்க ஒரு சிலை

1

விசாலம்

feng shuiஅநேகமாக சிங்கப்பூர், மலேசியா, சீனா போன்ற நாடுகளில் எல்லாக் கடைகளிலும் கொழுத்த தொப்பையுடன் ஒரு சிலை இருக்கும். இப்போது இந்தச் சிலை இந்தியாவிலும் அதிகமாக உபயோகிக்கப்படுகிறது. போன வாரம் ஒரு பெரிய புடவைக் கடைக்குப் போயிருந்தேன். நுழைந்தவுடனேயே இந்தச் சிலையைக் கண்டேன். சீனர்களின் சீதனம் இது.

இந்தச் சிலையைப் பார்த்தபடி நின்றேன். குண்டுச் செட்டியார் பொம்மைப் போன்று அழகாக ஒரு திண்டில் சாய்ந்தவண்ணம் இருக்கிறது, இந்தச் சிலை. செல்வங்கள் கொண்ட பையைத் தாங்கிய வண்ணம், மிக அழகான புன்னகையுடன் காட்சியளிக்கிறது. இந்தச் சிலையை செழுமைச் சிலை என்று அழைக்கிறார்கள்.

இந்தச் சிலையைப் பார்க்க, செல்வத்திற்குப் பஞ்சமில்லை, உணவுக்குப் பஞ்சமில்லை, மகிழ்ச்சிக்குப் பஞ்சமில்லை என்று  தோன்றுகிறது. நல்ல கொழுத்த சாப்பாடு மூன்று வேளையும் சாப்பிட்ட வயிறாக, பெரிய தொப்பையுடன் காண வேடிக்கையாகவும் இருக்கிறது.

“பெங் சுயி”(Feng Shui)யைச் சீனர்கள் மிகவும் நம்புகிறார்கள். இந்தச் செழுமைச் சிலை, பெங் சுயியைச் சேர்ந்தது. சீனர்கள் சிம்பல் என்ற அடையாளச் சின்னங்களுக்கும் உருவங்களுக்கும் மிகவும் முக்கியத்துவம் தருகிறார்கள்.

எல்லாப் பொருட்களுக்கும் ஒரு சக்தி உண்டு என்று புதுச்சேரி அன்னை கூறுவார். அதே போல் சீனர்களும் ஒவ்வொரு பொருளுக்கும் சக்தி உண்டு எனவும் அந்தச் சக்திக்கு தகுந்தாற்போல் அதிர்வுகள் வெளிப்படுகின்றன என்றும் நம்புகிறார்கள். இதை ஒட்டியே “பெங் சுயி” எனும் சீனப் பரம்பரை வாஸ்து செயல்படுகிறது.

உத்திராக்ஷம், முத்து  போன்ற பொருட்கள் நல்ல அதிர்வைத் தருகின்றன. வன்மைக்கு உபயோகப்படும் கத்தி, கோடாரி, துப்பாக்கி போன்றவை பாதகமான அதிர்வுகளை வெளிப்படுத்துகின்றன.

சரி, இந்தச் சிலையை வாங்கிய பின் எப்படி வைக்க வேண்டும்? அதற்கும் ஒரு நியமம் இருக்கிறது. காரியாலயத்திலோ, கடைகளிலோ பார்க்க வருபவரின் கண்ணில் படும்படி அமைக்க வேண்டும். நீங்கள் அமர்ந்திருக்கும் இடத்தின் பின் பக்கம் உயர்ந்த இடத்தில் இதை வைக்க வேண்டும். பொருள்கள் வாங்க வருபவராக இருந்தாலும் சரி, வேறு தொழில் ரீதியாகப் பேச வந்தாலும் சரி, இந்தச் சிலை  உங்களுக்குச் சாதகமாகவே முடிவைத் தரும். சாதகமான அதிர்வலைகளைப் பரப்பி, வியாபாரத்தை வளப்படுத்தும்.

சரி, வீட்டில் நாம் வைக்க வேண்டுமானால் எப்படி வைப்பது? தலைவாசல் கடந்து உள்வந்தவுடன் கண்ணில் படும்படி, இந்தச் செழிப்புச் சிலையை அமைக்க வேண்டும். வீட்டில் ஷோகேஸ் இருந்தால் அதற்குள்ளும் எல்லோருக்கும் தெரியும்படி அமைக்கலாம்.

ஒரு செழிப்புச் சிலையை வாங்கி, உங்கள் வீட்டில் செல்வம் கொட்டுகிறதா எனப் பாருங்கள். நான் இன்னும் வாங்கவில்லை…… உங்கள் ரிஸல்டைப் பார்த்த பின் வாங்கலாம் என நினைக்கிறேன்.

======================================

படத்திற்கு நன்றி: http://www.brass-handicrafts.com

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “செல்வம் செழிக்க ஒரு சிலை

  1. நானும் இவரை வாயில் அறையின்அலங்காரப் பொருட்களுக்கான
    அலமாரியில் வைத்திருக்கிறேன்.
    கணினி பக்கத்தில் வைக்க வேண்டுமோ:)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *