செய்திகள்

கல்வியின் மூலமாக பெறுகிற வெற்றியே நிரந்தரமானது

 

மு.முருகேஷ்

ரோட்டரி சங்க துணை ஆளுநர் பேச்சு

வந்தவாசி.ஜூன்.20. ஒரு மனிதன் கல்வியின் மூலமாக பெறுகிற வெற்றியே என்றைக்கும் நிரந்தரமான ஒன்றாகும் என வந்தவாசி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவில் அரசுப் பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவிக்கு யுரேகா கல்வி இயக்கம் நடத்திய பாராட்டு விழாவில் பேசும்போது வந்தவாசி ரோட்டரி சங்க துணை ஆளுநர் எம்.எஸ்.முத்துராஜ் குறிப்பிட்டார்.

இவ்விழாவிற்கு பள்ளித் தலைமையாசிரியர் மு.அன்புக்கரசி தலைமையேற்றார்.யுரேகா கல்வி இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கவிஞர் மு.முருகேஷ் அனைவரையும் வரவேற்றார்.பள்ளி உதவித் தலைமையாசிரியர்கள மூ.சங்கர், ஜான்சிராணி, சரஸ்வதி, பட்டதாரி ஆசிரியர் அ.வெண்ணிலாஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

விழாவில், பனிரெண்டாம் வகுப்பில் அரசுப் பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த ஆர்.மீனா மற்றும் பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவிகளுக்கும், பத்தாம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவிகளுக்கும் யுரேகா கல்வி உத்வித் தொகைத் திட்டத் துணைத் தலைவர் இரா.சிவக்குமார், வந்தவாசி ரோட்டரி சங்கத் துணை ஆளுநர் எம்.எஸ்.முத்துராஜ் ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டிப் பேசினர்.

ரோட்டரி சங்கத் துணை ஆளுநர் எம்.எஸ்.முத்துராஜ் பேசும்போது, மாணவப் பருவத்தில் நாம் அக்கரையோடு படித்தால், நமது எதிர்காலம் மிகவும் வளமானதாக அமையும். படிப்பில் கவனமும், அன்றாட பாடங்களை அன்றே படித்து விடுவதும் நல்லது. எதையும் அப்புறமாய் படிக்கலாம் என தள்ளி வைக்காதீர்கள். தேர்வு நேரங்களில் மொத்த பாடங்களையும் ஒன்றாய் பிடிப்பது பயனளிக்காது.

வாழ்வில் நாம் படுகிற அனைத்து துன்பங்களையும் சரி செய்கிற சக்தி நாம் படிக்கிற கல்விக்கு மட்டுமே உண்டு. ஏழை மாணவர்களுக்கான கலங்கரை விளக்கு போன்றது கல்வியாகும். நம் வாழ்வில் கல்வியின் மூலமாக நாம் பெறுகிற வெற்றியே என்றைக்கும் நிலையானதாக நிலைத்துnநிற்கும் என்றார்.

நிறைவாக, ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் சு.உமாசங்கர் நன்றி கூறினார்.

Print Friendly, PDF & Email
Download PDF
Share

Comments (1)

  1. Avatar

    ஒரு மனிதன் கல்வியின் மூலமாக பெறுகிற வெற்றியே என்றைக்கும் நிரந்தரமான ஒன்றாகும் – arumaiyaana unmai.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க