காயத்ரி பாலசுப்ரமணியன்

மேஷம்: மாணவர்கள் கேளிக்கை பக்கம் திரும்பாமல், பாடத்தில் கவனம் செலுத்தி வந்தால், பதற்றமின்றித் தேர்வு எழுதுவது எளிதாகும். இந்த வாரம் வியாபாரிகள் கடனைத் தீர்க்கக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முழு முயற்சியில் இறங்க வேண்டியிருக்கும். தொழில் வகையில் ஏற்படும் மாற்றங்கள் கலைஞர்களுக்குச் சில ஏமாற்றத்தைக் கொடுக்கலாம். வலிய வரும் சண்டையால், தலைவலி கூடும். எனவே பெண்கள் தங்கள் பணியில் மட்டும் கவனமாக இருப்பது நல்லது. முக்கியப் பொறுப்பு வகிப்பவர்கள் தங்கள் தரத்தை உயர்த்திக் கொள்ள வரும் வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்திப் பலனடைவார்கள்.

ரிஷபம்: மாணவர்களுக்கு நல்ல நட்பு காட்டும் பாசம் புதிய உற்சாகத்தைத் தரும். பெண்கள் குடும்பத்தில், சிறிய விஷயங்களுக்காகப் பெரிய அளவில் வாக்குவாதத்தில் ஈடுபடும் சூழல் உருவாகலாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் உண்மையாக உதவி செய்பவர்களிடம் இணக்கமாக நடந்து கொண்டால், நல்ல பெயரோடு மன அமைதியும் தங்கும். பணியில் இருப்பவர்கள் நிர்வாக விவகாரங்களில், தகுந்த ஆலோசனையின் பேரில் செயல்படவும். கலைஞர்கள் கடன் பற்றிய நிலவரத்தை முழுமையாகத் தெரிந்து கொண்டால், பொருளாதாரச் சரிவுகளைச் சரி செய்வது எளிதாக இருப்பதோடு, வீண் செலவுகளையும் குறைக்க உதவியாய் இருக்கும்

மிதுனம்: இந்த வாரம் மேற்கொள்ளும் பயணம் ஆதாயத்தை ஏற்படுத்தும் விதமாக அமைவதால் வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் செயலாற்றுவார்கள். பெண்கள் பணியின் தன்மை அறிந்து செயல்பட்டால், பணிகள் தடங்கலின்றி நடைபெறும். கலைஞர்கள் மற்றவர் கூறும் குறைகளையும், விமர்சனங்களையும் பொருட்படுத்தாது, பணியில் இறங்கி தங்கள் இடத்தைத் தக்க வைத்துக் கொள்வர். பொது வாழ்வில் உள்ளவர்கள் செயல்படுத்தும் திட்டங்களில், அடுத்து வரும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தினால், தவறுகளைக் களைந்து, முன்னேற முடியும். மாணவர்கள் விரும்பிய பொருள் கிடைப்பதில் இழுபறி இருக்கும் .

கடகம்: பிள்ளைகள் படிப்பில் முதலிடம் பிடித்து உங்களை மகிழ்விப்பார்கள். பெண்கள் கோபத்திற்கு இடம் தாராமல் உரையாடுங்கள். கேட்ட உதவி உடன் கிடைக்கும். சுய தொழில் புரிபவர்கள் எடுத்த பணியை முடிக்கும் வரை, அதிலேயே முனைப்பாய் இருந்தால், நஷ்டங்களைத் தவிர்த்து விடலாம். ஏட்டிக்குப் போட்டி என்ற சூழல் இருந்தாலும், வியாபாரிகள் பொருட்களின் தரம் குறைய இடமளிக்காதிர்கள். வியாபாரச் சலுகைகளைத் தவறாகப் பயன்படுத்தும் பங்குதாரர்களிடமிருந்து விலகி இருப்பது புத்திசாலித்தனம். மாணவர்கள், சுற்றுலா போன்றவற்றில், வீண் ஆரவாரத்தோடு செயல்படுவதைத் தவிர்த்தல் அவசியம்.

சிம்மம்: மாணவர்கள் இரவலாகப் பெறும் பொருட்களை உடன் திரும்பத் தந்து விட்டால், உபத்திரவம் ஏதுமிராது. பெண்கள் அதிக விலை கொடுத்து வாங்கிய பொருட்களைப் பத்திரமாக வைப்பது அவசியம். கலைஞர்கள், பண விவகாரங்களை முடிவு செய்த பின் ஒப்பந்தங்களை ஒப்புக்கொண்டால், அதிகச் சாதகம் பெறலாம். கருத்துப் பரிமாற்றத்தில், கண்ணியத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. வயதானவர்கள் உழைப்பிற்கு நேரம் ஒதுக்குவதைப்போல ஓய்வுக்கும் நேரம் ஒதுக்கினால், உடல்நலம் சீராக இருக்கும். வியாபாரிகளுக்கு அலைச்சல் அதிகரித்தாலும், வேண்டிய தகவலும், புதிய முயற்சிக்கான ஆதரவு தக்க சமயத்தில் கிடைக்கும்.

கன்னி: உடல் உபாதைகள் உங்கள் உற்சாகத்தையும், வேகத்தையும் குறைப்பதற்கு இடமளிக்காதீர்கள். சில முக்கிய விஷயங்களில் உடனடியாக முடிவெடுக்க முடியாமல் திணறும் பிள்ளைகளுக்குப் பெற்றோர்கள் நல்ல விதமாய் ஆலோசனை சொல்வது விரும்பிய பலனை அளிக்கும். இந்த வாரம் விலகிச்செல்லும் உறவுகளைச் சேர்த்து வைக்கப் பெண்கள் பாடுபட வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும். வியாபாரிகள் பத்திரங்களுக்கு ஈடாகப் பணம் பெறுவதற்கு முன் அதில் உள்ள விதிமுறைகளைத் தெரிந்து கொண்டு செயல்படுவது அவசியம். கலைஞர்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களிடம் மட்டும் முக்கிய ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வது நல்லது.

துலாம்: பெண்கள் செலவுகளில் சிக்கனமாய் இருந்தால் பொருளாதாரச் சறுக்கல்கள் குறையும். இந்த வாரம் உதவுவதாக வாக்குறுதி அளித்தவர்கள் கடைசி நேரத்தில் பின் வாங்குவதால், சில தடுமாற்றங்கள் தோன்றி மறையும். பணியில் இருப்பவர்கள் கவனக் குறைவிற்கு இடமின்றிச் செயலாற்றினால், பதவிக்குரிய கௌரவத்தைத் தக்க வைத்துக் கொள்ளலாம். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டு அதிக நேரம் உழைப்பீர்கள். மாணவர்கள் மனதில் பட்டதை மறைக்காமல் பேசுவதால், சில எதிர்ப்புகளுக்கு ஆளாக நேரிடும். தந்தை வழி உறவுகளால், எதிர்பாராத விரயங்களோடு மன உளைச்சலும் வந்து சேரலாம்.

விருச்சிகம்: இந்த வாரம் மாணவர்கள் நட்பு வட்டம் தரும் தொந்தரவுகளைச் சகித்துக் கொள்ள வேண்டியிருக்கும். பெண்கள் உடல்நிலையில் தகுந்த கவனம் செலுத்தி வந்தால், மருத்துவச் செலவுக்கு அவசியமிராது. வேலை செய்யும் இடத்தில் சிறு பூசல்களை வளர விடாமல் எச்சரிக்கையாக இருங்கள். அமைதியாக வேலைகளைச் செய்யலாம். உயர் பதவியில் இருப்பவர்கள் பணியாளர்களின் ஒத்துழைப்பை முழுமையாகப் பெற பாடுபட வேண்டியிருக்கும். பெற்றோர்கள் பிள்ளைகளின் போக்கை எண்ணிக் கவலைப்பட நேரிடலாம். உங்கள் வேலையில் சலிப்பு எழாதவாறு சிறு மாற்றங்களை அவ்வப்போது செய்து கொள்ளுங்கள்

தனுசு: முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள், ஆவணங்களைக் கவனமாக வைத்துக் கொண்டால் பதற்றமின்றி வேலைகளைத் தொடரலாம். பெண்கள் உங்கள் நகைகளை இரவலாகத் தருவதை இதமாக மறுத்து விட்டால், மனக் கசப்பு இராது. மாணவர்கள் அளவாகப் பேசி, காரியங்களை முடிக்கும் திறனை வளர்த்துக் கொண்டால், எதிலும் வெற்றி கிட்டும். பணி புரிவோர்கள் முக்கியமான விஷயங்களை நிதானமாகக் கையாளவும். இல்லையெனில் நீங்கள் காட்டும் அவசரத்தினால், சில சிரமங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள் எந்தச் செயலையும் தொடங்கும் முன்பு யோசித்துச் செயல்பட்டால், நினைத்த பலன் கிடைக்கும்.

மகரம்: பெண்கள் பிறரிடம் உரையாடும் போது, உங்களின் சொந்த விஷயங்கள் இடம் பெறாதவாறு, கவனமாய் இருங்கள். வீண் வம்பைத் தவிர்த்து விடலாம். மாணவர்கள் எவரும் குறை சொல்லாதவாறு தங்கள் பணியைச் செய்து முடித்துப் பாராட்டைப் பெறுவார்கள். வீண் புகழ்ச்சியில் மயங்கி விடாமல் உறுதியாக இருக்கும் கலைஞர்களின் எதிர்காலம் வளமாக அமையும். பணி புரியும் இடங்களில், உயர் அதிகாரிகளுடன் தர்க்கம் செய்வதை விடுத்து, இணக்கமாக நடந்தால், அவர்களின் ஆதரவு குறையாமல் இருக்கும். வியாபாரிகள் தங்களின் கணக்கு வழக்குகளைக் கவனமாகப் பராமரித்து வந்தால் சிறப்புச் சலுகைகளைப் பெறலாம்.

கும்பம்: பெண்கள் குடும்பத்தில் தோன்றும் பிரச்னைகளை, வளர விடாமல் மனம் விட்டுப் பேசித் தீர்த்துக் கொண்டால், சந்தோஷத்திற்கு குறைவிராது. வியாபாரிகளை உற்சாகத்துடன் செயல் பட வைக்க நண்பர்கள் புதிய ஆலோசனையை வழங்குவார்கள். பொது வாழ்வில் உள்ளவர்கள் கிடைக்கும் தருணங்களில், குடும்ப உறுப்பினரின் தேவைகளைப் பூர்த்தி செய்தால், அவர்களும் உதவ முன் வருவார்கள். இந்த வாரம் உடன் பணி புரிபவர்கள் தேவையான உதவிகளை இன்முகத்துடன் செய்வார்கள். உயர் பதவியில் உள்ளவர்கள் காட்டும் ஆர்வம் மற்றவரையும் சுறுசுறுப்புடன் இயங்கச் செய்யும். வயதானவர்கள் கண் பராமரிப்பில் விசேஷக் கவனம் செலுத்தி வரவும் .

மீனம்: இந்த வாரம் மாணவர்கள் சிறு பிரச்னைகளுக்காகத் தங்கள் மனதை அதிகம் வருத்திக் கொள்வார்கள். பெற்றோர்கள் பிள்ளைகளின் போக்கில் தென்படும் மாறுதலை இதமாகச் சுட்டிக் காட்டுவதே புத்திசாலித்தனமாகும். சொத்துகள் சம்பந்தமான பிரச்னையில் அவசரமான முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது. பெண்கள் அறிமுகமில்லாதவர்களிடம் உங்கள் பொருட்களை இரவலாகத் தர வேண்டாம். கலைஞர்கள் தேவைக்கேற்ற பணத்தை மட்டும் கையில் வைத்துக் கொண்டால், வீண் செலவைக் குறைப்பது எளிதாகும். பொறுப்பான பதவி வகிப்பவர்கள் குறுக்கு வழிகளில் பிறருக்குச் சலுகைகளை அளிப்பதில்லை என்பதில் உறுதியாய் இருந்தால் உங்கள் நற்பெயருக்கு எந்தப் பங்கமும் வராது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.