செய்திகள்

திரைப்பட இயக்குநர் சீமான் ஆவணப்படம் வெளியீடு

 

ஆண்ட்டோ பீட்டர்

சாஃப்ட்வியூ மீடியா காலேஜ் மாணவர்கள் சுனில் இயக்கிய ‘அழியாத ஈமங்கள்’ மற்றும் ருத்ரவேல் இயக்கிய ‘டாக்குமென்ட்ரி பண்ண போறோம்’ ஆகிய ஆவணப்படங்கள் சென்னையிலுள்ள ஆழ்வார்திருநகரில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டன. திரைப்பட இயக்குநர் சீமான் வெளியிட, தமிழன் தொலைக்காட்சி நிறுவனர் கலைக்கோட்டு உதயம் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் சாஃப்ட்வியூ இயக்குநர் மா.ஆண்டோ பீட்டர் மற்றும் பெருவாரியான சாஃப்ட்வேர் மீடியா காலேஜ் மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.

 

அழியாத ஈமங்கள்

சாஃப்ட்வேர் மீடியா காலேஜில் பயிலும் மாணவர் சுனில்குமார் தனது சக மாணவர்களுடன் இணைந்து, இறுதி திட்டத் தயாரிப்பாக டாக்குமென்ட்ரி திரைப்படம் படைத்துள்ளனர். அழியாத ஈமங்கள் என்ற தலைப்பில் வெளிவந்துள்ள இந்த டாக்குமென்ட்ரி ஒரு புது களத்தை தன் கதை கருவாகக் கொண்டுள்ளது.

கி.மு. 3200 வாழ்ந்த தமிழ் மக்களின் புராதான ஈமங்கள் பற்றியும், அதன் நம்பிக்கைகள் பற்றியும் மிக அழகாகவும், தெளிவாகவும் படம்பிடித்துள்ளனர். இதுவரை யாரும் முயற்சிக்காத ஒரு கதையை எடுத்து, மக்களுக்கு ஒரு பொக்கிஷத்தை தெரிய படுத்தியுள்ளனர். இந்த டாக்குமென்ட்ரி கிருஷ்ணகிரி மாவட்த்தில் உள்ள கருமலையில் பல ஆயிரம் ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட ஈம கற்கள் உள்ளன. அதன் தற்போது நிலை என்ன, அந்த காலத்தில் இக்கற்களின் முக்கியத்துவம் மற்றும் மக்கள் எவ்வாறு வழிபட்டனர் என்று மிகவும் உணர்ச்சிபூர்வமாகவும், புதுசிந்தனையுடன் அனைவருக்கும் ஒரு புதிய செய்தியை கொண்டு சேர்த்துள்ளது இந்த டாக்குமென்ட்ரி.

வீடியோ பார்க்க : http://www.youtube.com/watch?v=s-1JjI6IH_I

 

ஆவணப்படம் கும்பகோணத்தில் உள்ள திருபனந்தாள் சிவன் கோவில் தலபுராணம்

டாக்குமென்ட்ரி பண்ண போறோம்..

தலைப்பிலே ஒரு வித்தியாசத்தை காட்டியுள்ளனர் சாஃப்ட்வியூ மீடியா காலேஜ்-ல் பயிலும் ருத்ரவேல் மற்றும் பிற மாணவர்கள். இவர்கள் படைத்துள்ள ஆவணப்படம் கும்பகோணத்தில் உள்ள திருபனந்தாள் சிவன் கோவில் பற்றிய தல வரலாற்றை தெளிவாகவும் ஒரு புதுயுத்தியுடனும் காட்டியுள்ளனர்.

இந்த ஆவணப்படத்தில் இக்கோவிலை பற்றியும், தல விருட்சம் பற்றியும் அதை சுற்றியுள்ள மக்கள் மற்றும் கோவிலின் சிறப்பு தன்மை பற்றியும் புது கோணங்களில் படைத்துள்ளனர். இக்கோவிலின் சில காட்சிகளை அனிமேஷன் மூலமாக மிக தத்ரூபமாக காட்டியுள்ளனர். “டாக்குமென்ட்ரி பண்ண போறோம்” என்ற இந்த ஆவணப்படம் மனமகிழ்ச்சியை காண்போருக்கு ஏற்படுத்தும் என்பதில் ஐயமே இல்லை. இவ்வகையான ஆவணப்படங்கள் நம்முடைய சரித்திரங்களையும், உண்மைகளையும் பாதுகாக்க உதவும்.

வீடியோ பார்க்க: http://www.youtube.com/watch?v=7i7ssHu9VdQ

 

Print Friendly, PDF & Email
Share

Comments (1)

  1. Avatar

    செய்தியை த வல்லமைக்கு நன்றி

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க