கோப்பை நமது, கொண்டாடும் தருணமிது!
அண்ணாகண்ணன்
கோப்பை நமது, கொண்டாடும் தருணமிது
வாய்ப்பு பெரிது, வரலாறு திரும்பியது!
புயல்களைக் கூட்டாகச் செயல்களில் காட்டி,
உயர்வை நமக்களித்த வியர்வை இனிக்கிறது!
பந்தை விரட்டிச் சிந்தை கவர்ந்து,
விந்தை விளைத்த வீரர்கள் வாழ்க!
கொடிகள் உயர்த்தி, வெடிகள் வெடித்து,
படையெனத் துள்ளிய ரசிகர்கள் வாழ்க!
கிரிக்கெட்டால் இந்தியா சிரிக்கட்டுமே – உலகக்
கிண்ணத்தால் உள்ளங்கள் சிலிர்க்கட்டுமே!
பிரிக்கட்டும் எல்லைகள் தேசங்களை – நாம்
பேணுவோம் எந்நாளும் நேசங்களை!
விரிக்கட்டும் இளைஞர்கள் இறக்கைகளை – விரி
விண்ணெங்கும் பதிக்கட்டும் வெற்றிகளை!
இருக்கட்டும் தொடர்வெற்றி நம்பக்கமே – புது
எழுச்சிக்கு இவ்வெற்றி ஆரம்பமே!
============================
படத்திற்கு நன்றி: http://www.sify.com
‘பிரிக்கட்டும் எல்லைகள் தேசங்களை – நாம்
பேணுவோம் எந்நாளும் நேசங்களை!’
-ததாஸ்து.
இந்தியாவின் வெற்றி, டோனியின் ஜய பேரிகை, எனக்குப் பழைய நினைவுகளைக் கொணர்ந்தது. 1946/47? விரலில் ஃப்ராக்ச்சர். அதை பொருட்படுத்தாமல் முஷ்டாக் அலி, ஒரு சிக்ஸர் அடித்து ஜய பேரிகை கொட்டினார். அக்காலம் வானொலி தான். அதுவும் சில வீடுகளில் தான். நாங்கள் தெருவில் ஓடி, கண்ணில் பட்டவர்களுக்கு மிட்டாய் கொடுத்துக் கொண்டாடினோம். அம்மா சர்க்கரைப் பொங்கல் வைத்தார்.
திக்கெட்டும் தித்திக்கும் திகட்டும் கவிதை.
வாழ்க.
//பிரிக்கட்டும் எல்லைகள் தேசங்களை – நாம்
பேணுவோம் எந்நாளும் நேசங்களை!//
ஆம், இந்த விளையாட்டுதான் இன்று மக்களை ஒன்றிணைத்துக் கொண்டிருக்கிறது. நல்ல கவிதை.