வெளிநாட்டுப் பயணிகளால் ரூ.5507 கோடி வருவாய்
வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வருகை மூலம், 2011 மார்ச் மாதத்தில் மட்டும் இந்தியாவுக்கு ரூ.5507 கோடி அன்னிய செலாவணி வருவாய் கிடைத்துள்ளது.
2011 மார்ச் மாதம் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வருகை 5.07 லட்சத்தை எட்டியது. 2010ஆம் ஆண்டு மார்ச் மாதம் சுற்றுலாப் பயணிகளின் வருகை 4.72 லட்சமாகவும், 2009 மார்ச் மாதம் 4.42 லட்சமாகவும் இருந்தது. 2011 மார்ச் மாதம் சுற்றுலாப் பயணிகளன் வரத்து 7.4 சதம் உயர்ந்துள்ளது.
2011 ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாதங்களில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வருகை 17.37 லட்சமாகும். இது 2010ஆம் ஆண்டு வருகையைவிட 11.1 சதம் கூடுதலாகும்.
அதே போல அந்நிய செலாவணி வரத்தும் 2011 மார்ச் மாதம் ரூ.5522 கோடியை எட்டியுள்ளது. இது 2010ஆம் ஆண்டைவிட ரூ.15 கோடியும், 2009 ஆண்டைவிட ரூ.85 கோடியும் அதிகமாகும்.
=============================================
தகவல்: பத்திரிகைத் தகவல் அலுவலகம், சென்னை
படத்திற்கு நன்றி: http://www.tamilnadutourism.org