வருகைக்குப் பின் விசா வழங்கும் திட்டம்
சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில், வருகைக்குப் பின் விசா வழங்கும் திட்டத்தை மேலும் சில நாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மத்திய அரசு விரிவுபடுத்தியுள்ளது.
வருகைக்குப் பின் விசா வழங்கும் திட்டம், இந்தியாவில் ஜனவரி 2010 முதல் நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தின்படி நுழைவு அனுமதி, பின்லாந்து, ஜப்பான், லக்சம்பர்க், நியூசிலாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்தது. தற்போது கம்போடியா, இந்தோனேசியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், லாவோஸ் ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஜனவரி 2011 முதல் மார்ச் வரை 2905 சுற்றுலாப் பயணிகளுக்கு இத்திட்டத்தின் கீழ் விசா வழங்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சகத்தின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
=============================================
தகவல்: பத்திரிகைத் தகவல் அலுவலகம், சென்னை
படத்திற்கு நன்றி: http://way2online.com