புதுவைத் தேர்தல் களத்தில் 187 பேர்
2011 ஏப்ரல் 13ஆம் தேதி நடைபெறவுள்ள புதுச்சேரி சட்டப் பேரவைத் தேர்தலில் மொத்த உள்ள 30 தொகுதிகளில் 187 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களுள் 6 பேர் பெண் வேட்பாளர்களாவர்.
மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் ஆண் வாக்காளர்கள் 3,90,740 பேரும், பெண் வாக்காளர்கள் 4,19,890 பேரும் என மொத்த வாக்காளர்கள் 8,10,635 பேர் ஆவர்.
அதிகமான வேட்பாளரைக் கொண்ட தொகுதி, ஏனம் ஆகும். இங்கு அதிகபட்சமாக 10 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். குறைந்தபட்சமாக இரண்டு வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதி, இந்திரா நகர் ஆகும்.
பிஎஸ்பி 10 இடங்களிலும், பிஜேபி 20, சிபிஐ 01, சிபிஐ (எம்) 02, காங்கிரஸ் 17, அஇஅதிமுக 10, திமுக 10, சிபிஐ (எம்எல்), பாமக 2, சுயேச்சைகள் 112 இடங்களில் போட்டியிடுகின்றனர்.
மொத்தம் 867 வாக்குச் சாவடியில் நடைபெறும் இத்தேர்தலில் 867 மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
===============================================
தகவல்: பத்திரிகைத் தகவல் அலுவலகம், சென்னை