இராமாயணத்தின் உட்பொருள்

2

விசாலம்

rama, sita, lakshmana

ஸ்ரீ ராமநவமியின் போது ஸ்ரீ சத்ய சாயி பாபா, பிரசாந்தி நிலையத்தில் இராமாயணத்திலிருந்து சிலவற்றை எடுத்துரைப்பார். அவர், இராமாயணத்தில் பொதிந்திருக்கும் தத்துவங்களை மிக அழகாகக் கூறியிருக்கிறார். அவற்றுள் நினைவுக்கு வந்ததைச் சமர்ப்பிக்கிறேன்.

ராமர்தான் நமது ஆத்மா. அதுவே நிலையானது, அழிவற்றது. அந்த ஆத்மாவைப் புரிந்துக்கொண்டால் நமக்குக் கிடைப்பது பேரானந்தம்.

இராமாயண கதாபாத்திரங்களை எடுத்துக்கொண்டால் முதலில் வருபவர் தசரத சக்கரவர்த்தி…. பத்து இந்திரியங்கள் கூடிய உடல், அதில் இராணிகள் மூவர். அந்த இராணிகள் மூன்று குணங்களைக் குறிப்பவர். அதாவது சத்துவம், ரஜஸ், தமஸ் என்பவை.

புதல்வர்கள் நால்வரும் நான்கு புருஷார்த்தங்களைக் குறிக்கின்றனர்.

இலக்குமணன் புத்தியைக் குறிக்கிறான்.
சுக்கிரீவன் விவேகத்தைக் குறிக்கிறான்.
அனுமான் தைரியத்தைக் குறிக்கிறான்.

இராட்சதர்களை எடுத்துக்கொண்டால் இராவணன், ராஜஸ குணம் கொண்டவன்.

கும்பகர்ணன் தாமச குணம் கொண்டவன்.
விபீஷணன் சதவ குணம் கொண்டவன்.

சீதை பிரும்ம ஞானம் கொண்டவள். அதாவது எப்போதும் பரபிரும்மத்தை இடைவிடாது தியானிக்கும் நிலை. இதை விழிப்புநிலை எனலாம்.

இராமாயணத்தில் இரண்டு முக்கிய பாடங்கள்.

பற்றற்ற நிலையில் மேன்மை பெறுதல், ஒவ்வொரு ஜீவனிலும் தெய்வீகத்துவம் உறைந்திருத்தல்.

பிறவிப் பிணியினின்று விடுதலை பெற, இந்திரிய விஷயங்களால் ஏற்படும் போகங்களை விட வேண்டும். அப்போது இராமரை அடையலாம். அதாவது ஆன்மாவை உணரலாம்.

சீதை அரச போக வாழ்க்கையிலும் சரி, தேசப்பிரஷ்ட காலத்திலும் சரி, ஒரே மாதிரியான மனநிலையில்தான் இருந்தாள். காட்டிலும் சுகமாகவே வாழ்ந்தாள். ஆனால் எப்போது பொன் மான் மேல் ஆசைகொண்டு அதைக்கொண்டு வர வேண்டினாளோ, அப்போது இராமரையும் பிரிய நேரிட்டது. பற்று வைத்தலால் ஏற்படும் துன்பத்தை இராமாயணம் நன்கு விளக்கியிருக்கிறது.

இராமா என்னும் நாமம், வேதங்களின் சாரம். இந்த “ராமா” என்ற நாமத்தை எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் எந்த நிலையிலும் சொல்லலாம். இதைச் சொல்வதும் மிக எளிது. ஆனால் அதனால் கிடைக்கும் பலனோ அளவிட முடியாதது.

ஸ்ரீராமநவமி வாழ்த்துகள். ஸ்ரீராமரின் அனுக்கிரஹத்தினால் பாபா அவர்கள் நன்கு  குணமடைந்து, பிரசாந்தியில் தரிசனம் கொடுக்க வேண்டும் என்று உலக முழுவதும் இருக்கும் பக்தர்கள் பிரார்த்திக்கின்றனர்.

============================

படத்திற்கு நன்றி – விக்கிப்பீடியா

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “இராமாயணத்தின் உட்பொருள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *