இந்தியாவில் 653 தொலைக்காட்சிகள், 806 பண்பலை வானொலிகள்

0

tv towerஇந்தியாவில் ஒளிபரப்புப் பிரிவில் இன்று வரை 653 செயற்கைக்கோள் ஒளிபரப்பு சேனல்களுக்கும் 806 பண்பலை வானொலி நிலையங்களுக்கும் அனுமதி வழங்கப்பெற்றுள்ளது. ஊடகங்களின் பல பிரிவுகளும் நீடித்த வளர்ச்சி பெறவும், அவை சக்தி வாய்ந்த தொழிலாக மாறவும் அரசு உறுதி பூண்டிருப்பதாக மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சர் திருமதி அம்பிகா சோனி தெரிவித்தார்.

பேச்சு சுதந்திரம், மனித உரிமைகள் குறித்த இரண்டு நாள் மாநாட்டைத் தொடக்கி வைத்துச் சிறப்புரையாற்றிய போது அமைச்சர் இதைத் தெரிவித்தார்.

உலகப் பொருளாதார தேக்க நிலையின் போது உலக ஊடகங்களே மந்தமான நிலையில் இருந்த போது, இந்திய ஊடகங்கள் 6.2 சதம் வளர்ச்சி கண்டது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். அப்போது சிறு குறு பிராந்திய மொழி பத்திரிகைகளுக்கு அரசு விளம்பரங்களை வழங்கி ஆதரவு அளித்தது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இது பத்திரிகைகளுக்கு, சிறப்பாக பிராந்திய மொழி பத்திரிகைகளுக்கு ஒரு இணக்கமான சூழலை உருவாக்கியது என்று அவர் குறிப்பிட்டார்.

ஒளிபரப்புப் பிரிவில் இன்று வரை 653 செயற்கைக்கோள் ஒளிபரப்பு சேனல்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. நாட்டில் செயல்படும் 806 பண்பலை வானொலி நிலையங்கள் 283 நகரங்களில் வசிக்கும் மக்களுக்கு நிகழ்ச்சிகளை வழங்கி பெருமை சேர்த்துள்ளதாக அவர் கூறினார்.

==================================================
தகவல் – பத்திரிகைத் தகவல் அலுவலகம், சென்னை

படத்திற்கு நன்றி: http://www.theaustralian.com.au

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.