கேன்ஸ் திரை விழாவில் ‘அம்மா’ தமிழ்க் குறும்படம்

0

prabhaharan_art_directorபிரபல கலை இயக்குநர் பிரபாகரன் இயக்கியுள்ள ‘அம்மா’ என்னும் குறும்படம், கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்கத் தேர்வாகியுள்ளது. இந்தக் குறும்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

கலை இயக்குநரான பிராபாகரன் முதல் முறையாக ‘அம்மா’ என்னும் குறும்படத்தை இயக்கியுள்ளார். பிரபல எழுத்தாளரான புஷ்பா தங்கதுரை எழுதிய சிறுகதையை மையமாக‌க் கொண்டு, இந்தக் குறும்படத்தை இயக்கியுள்ளார். இந்தக் குறும்படம், கொடைக்கானலில் படமாக்கப்பட்டுள்ளது.

இந்தக் குறும்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். சர்வதேச குறும்படம் ஒன்றுக்கு இளையராஜா இசையமைத்துள்ளது இதுவே முதல் முறை. பியானோ, வயலின் போன்ற இசைக் கருவிகளைப் பயன்படுத்தி, சர்வதேச தரத்தில் பின்னணி இசை அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இளையராஜாவின் இசை குறும்படத்தின் தன்மையையும் உணர்வுகளையும் பிரதிபலிக்கும் வகையில் சிற‌ப்பாக அமைந்துள்ளதாக இயக்குநர் பிரபாகரன் நன்றியோடு கூறுகிறார்.

Amma short film

மைனா படத்தின் ஒளிப்பதிவாளர் சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கொடைக்கானலில் வசித்து வரும் ஆங்கில அமெரிக்கரான மார்க் ஆந்தோரபஸ், ஃபாதர் டேனியலாக‌ முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார். மைனா படத்தில் நாயகியின் சிறுவயது தோற்றத்தில் நடித்த சிறுமி அர்ச்சனா, முல்லி என்னும் பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்தக் குறும்படம் புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா 2011இல் பங்கேற்க‌த் தேர்வாகியுள்ளது. மேலும் மாஸ்கோ திரைப்பட விழா, சிக்காகோ திரைப்பட விழா, ஆர்லான்டோ திரைப்பட விழா உள்ளிட்ட சர்வதேச விழாக்களிலும் இந்தக் குறும்படம் பங்கேற்க உள்ளது.

பிரபாகரன் கடந்த 15 ஆண்டுகளாக 60க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கலை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். டிவி நிகழ்ச்சி மற்றும் விளம்பரப் படங்களிலும் அவர் பணியாற்றியுள்ளார். தமிழ‌க அரசின் விருதை இரண்டு முறை வென்றுள்ளார். மேலும் பல விருதுகளையும் வென்றுள்ளார்.

amma_poster

அம்மா குறும்படம் – பட விவரம்

தயாரிப்பு: ஜான் பென்னிசியுக் புரடக்சன்ஸ்.

தயாரிப்பாளர்கள்: எம்.பிரபாகரன், அபிதா பிரபாகரன்.

கால அளவு: 35 நிமிடங்கள்.

இய‌க்குநர்: எம்.பிரபாகரன்

பின்னணி இசை: இசைஞானி இலையராஜா.

கதை: புஷ்பா தங்கதுரை.

ஒளிப்பதிவு: மைனா சுகுமார்.

எடிட்டிங்: முத்துலட்சுமி வரத‌ன்

கலை இயக்குநர்: அண்ணாதுரை.

ஒலிப்பதிவு: ஜி.தரணிபதி.

மக்கள் தொடர்பு: நிகில் முருகன்.

நடிகர்கள்:

மார்க் அந்தோலஸ் (ஃபாதர் டேனியல்)

அர்ச்சனா (முல்லி)

அண்ணாதுரை (த‌பால்காரர்).

=====================================

தகவல்: மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *