வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 7

9

தேமொழி

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

அடிவானத் தேயங்குப் பரிதிக் கோளம்
அளப்பரிய விரைவினொடு சுழலக் காண்பாய்
இடிவானத் தொளிமின்னல் பத்துக் கோடி
எடுத்தவற்றை ஒன்றுபட உருக்கி வார்த்து
முடிவான வட்டத்தைக் காளி யாங்கே
மொய்குழலாய், சுழற்றுவதன் மொய்ம்பு காணாய்.
வடிவான தொன்றாகத் தகடி ரண்டு
வட்டமுறச் சுழலுவதை வளைந்து காண்பாய். (150)

– பாஞ்சாலி சபதம், பாரதியார்

 

பாடல் சொல்வது:
சூரியனாகிய கோளம், அடிவானத்தில் மிக விரைவாகச் சுழல்வதைப் பார்.  வானத்தில் இடிகளோடு கூடிய பத்துக் கோடி மின்னல்களை எடுத்து, அவற்றை உருக்கி, வார்த்து, ஒரு தகட்டை உருவாக்கிக் காளி அம்மை என்ன விரைவாகச் சுற்றுகிறாள் என்பதைக் காண்பாய்.  என்ன வலிமை, என்ன மாட்சி இங்கே வெளிப்படுகிறது, பார்!  ஒரு தகடு என்றா சொன்னேன்!  இரண்டு தகடுகள் அல்லவா இருக்கின்றன!  இரண்டு தகடுகள் ஒன்றன் மேலொன்றாகப் பொருந்தி, இங்கே வட்டமாகச் சுழல்கின்றன.

பதவுரை – ஹரிகி (ஹரி கிருஷ்ணன்)
அவர்களின் பாஞ்சாலி சபதம் – என்னுரை தொகுப்பிலிருந்து

 

 

 

<< வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8                                                          வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 6>>

பதிவாசிரியரைப் பற்றி

9 thoughts on “வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 7

 1. மகாகவியின் எழுத்தோவியத்திற்கேற்ற
  கருத்தோவியம்…!
  -செண்பக ஜெகதீசன்…

 2. பாரதியின் பரிதி வெளித் தங்கக் காட்சிக் கவிதைக்கேற்ப படம் பிரம்மாண்டத் தோற்றத்தைக் காட்டுகிறது.

  பாராட்டுகள் ஓவியச் செல்வி தேமொழிக்கு. அன்புடன், சி. ஜெயபாரதன்

 3. அருமையான ஓவியம், தேமொழி. 

  ‘குறிப்பாக நீங்கள் வரைந்துள்ள சூரியன்!’. சுட்டியை உருட்டிக் கொண்டே வந்தபோது திடீரெனச் சூரியன் கண்ணில் பட்டதும் நிஜமாகவே கண்கள் சுருங்கியது.  

  வாழ்த்துகள்!

 4. சாய்ந்த சூரியனைவிட
  பாய்ந்து வளர்ந்த பனையே இங்கு அழகு!
  காய்ந்த வெளியைவிட
  கை தீட்டிய கலையே இங்கு பேரழகு!

  மொழிக்கு இல்லை எல்லை!
  இந்த ஓவியம் தந்த
  தேமொழிக்கும் இல்லை
  கற்பனை எல்லை!!

 5. ஓவியத்தை ரசித்து கருத்துக்கள் உரைத்த செண்பக ஜெகதீசன் ஐயா, சி. ஜெயபாரதன் ஐயா , தோழர்கள் மாதவன் இளங்கோ, மற்றும் தனுசுவிற்கு நன்றி.
  நீண்ட நாட்களுக்குப் பிறகு வரும் தனுசுவுடன் கவிதையும் சேர்ந்தே வருவது இரட்டிப்பு மகிழ்ச்சி.
  வரிகள் தந்த பாரதியாருக்கும், பதவுரையை உபயோகப்படுத்த அனுமதியளித்த ஹரிகி அவர்களுக்கும் நன்றி.

  ….. தேமொழி

 6. காலை சூரியன் கால்பணிந்தான்
  பகலில் அவன்எம் சிரமளந்தான்
  மாலைக் கதிரோ அடிபணிந்தான்
  நாளும் நடந்திடும் நகைச்சுவையே
  வெம்மைத் தணிக்க விசிறிதரும்
  வேட்கைத் தணிக்க  பதனீர்தரும்
  செம்மை கலக்க ஓலைதரும் பனைப்
  பணியை போற்றும் கதிரின்மனம்

 7. நான் தனுசு கூறியதை வழிமொழிகிறேன். மற்றொரு சமாச்சாரம். காளியின் கைவண்ணத்தை எங்கும் காண்கிறோம். மற்றொன்ரு: இந்த சுழலும் தங்கத்தகடு தான் ஆதிமனிதனை முதலில் வியப்பில் ஆழ்த்தி, அச்சத்தில் அமிழ்த்தி, அதை தெய்வாம்சமாக முன்னிருத்தியது.

 8. சத்திய மணி அவர்களின் கவிதைக்கு பாடுபொருட்களாக அமைந்திட்ட என் ஓவியத்தின் கதிரவனும் பனைமரங்களும் என்னைப் பெருமை கொள்ளச் செய்கிறது, நன்றி. நன்றி .

  இன்னம்பூரான் ஐயாவின் கருத்துரைக்கு நன்றிகள் பல.

  ….. தேமொழி

 9. காணும் கலைகளை பாராட்டுதல்  கலைஞர்க்கு பெருமை
  கண்டும் காணாதிருப்பது ! பெற்ற   கலைகளுக்கு சிறுமை
  படத்திற்கு எழுதவில்லை  பாரதியின் படைப்பு – 
  அதை நிறைவேற்றினேன் அதிலொரு களிப்பு
  நயம்பட பாராட்டினாலே கலைகள் வளரும்
  சுயம்வர பரிசளிப்பால் அல்ல 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *