யாரும் சிரித்துவிடாதீர்கள்……. பிளீஸ்!

4

கேப்டன் கணேஷ்

Captain_Ganesh2011 மே 13. கலைஞர் தொ(ல்)லைக்காட்சி, தனது நாளை ஒரு நேரடி ஒளிபரப்புடன், ஆரம்பித்தது!

ஒரு தொலைக்காட்சி ஊழியர், திரு நக்கீரன் கோபால், மற்றும் ஒருவர்! ரிப்ளியின் நம்பினால் நம்புங்கள்! இவர்கள் தான் அந்த மூன்று பேர்!  ஒன்பதரை மணி வரை இந்த மூன்று பேரும் ஏதேதோ பேசிக்கொண்டனர்! திரு. நக்கீரன் கோபால் சொன்னார் “நூறு பேர் சொன்னாய்ங்க சார்!  அவிய்ங்க நடுவிலே எப்படி மாத்தி சொல்லுறது! அதான் அப்படி ஒரு கருத்துக் கணிப்பு போட்டேன்!” என்றார்!

சிறிது நேரத்தில் வந்தது “விளம்பர இடைவேளை”.

திரு. கோபால் சொன்னார் “பெண்கள் அனைவரும் வீட்டில் இருந்தபடியே ஒரு அமைதிப் புரட்சியைச் செய்துள்ளனர்!” என்று வீர வசனம் பேசுகின்றார்!

மீண்டும் ஒரு “விளம்பர இடைவேளை”!

காட்சி மாறுகிறது! வேறு ஒருவர் வந்து அமர்கின்றார்! நக்கீரன் கோபால் is missing! ‘எங்கே சார் போனீங்க!  தருமியைப் பார்தீகளோ…………….?’

“சொன்ன வாய்க்குச் சர்க்கரை!” என்று தி.மு.க.வினர் சொல்லியிருக்கக் கூடும்! ஆனால் உண்மை வேறு!

திரு. நக்கீரன் கோபால் அவர்களே,  தயவுசெய்து நினைவில் வைத்துக்கொள்ளவும் “நெற்றிக் கண் திறப்பினும்! குற்றம் குற்றமே!”

அடுத்த அரைமணி நேரத்தில் அனைத்தும் தலைகீழாய் மாறுகிறது! திடீரென ஒரு “விளம்பர இடைவேளை”க்குப் பின் கலைஞர் தொலைக்காட்சியின் ஊழியர் சொல்கிறார் “இத்துடன் இந்த நேரடி ஒளிபரப்பு முடிவடைகிறது!”

“நூற்று இருபதிலிருந்து நூற்று நாற்பதைத் தாண்டுவோம்!” என்று ஸ்டாலின் உட்பட, மூத்த தலைவர்கள் அனைவரும் அறிக்கையிட்டனர். நூறு குறைந்து, இருபத்து இரண்டில் வந்து நின்று இருக்கின்றனர் பழைய ஆளும் கட்சியினர்!

Nakkeeran Gopalnakkeeran exit poll survey

இலவசத் தொலைக்காட்சி,  இலவச வீடு, ஒரு ரூபாய் அரிசி எனத் தமிழக மக்களின் தன்மானத்தையும் சுய மரியாதையையும் ஏலம் விட்டனர்.  திருவள்ளுவருக்குச் சிலை நிறுவி, செம்மொழி மாநாடு நடத்தி, இலக்கியவாதியாய்ச் செய்து இருக்க வேண்டிய சாதனையை, ஆட்சி மற்றும் அதிகாரத்தைப் பயன்படுத்திச் செய்தார் கலைஞர்! அதனைத் தன் சொந்த வெற்றிச் சாதனையாய் காட்டிக்கொள்ள முயன்று தோல்வியுற்றுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்!

ஈழப் போர்ப் படுகொலைகள், மீனவர் படுகொலைகள், காவிரி நீர் பங்கீடு, பெரியாறு அணைப் பிரச்சினை, என இவை அனைத்தைப் பற்றியும்  கடிதம் எழுதியது தவிர வேறு என்ன செய்தார் கலைஞர்?

மணற் கொள்ளை, கட்டப் பஞ்சாயத்து, கள்ளச் சாராயம், கந்து வட்டி இவற்றைத் தடுப்பதில் பழைய அரசு என்ன செய்தது?

மின் வெட்டு, இவர்களின் ஆட்சிக்கு மின் வேட்டாய் அமைந்துவிட்டது! மின் துறை அமைச்சரைக் கூட மாற்ற முடியாத நிலை! அது போகட்டும், புதிய தலைமைச் செயலகம் கட்டிய ஆர்வத்தில் பாதியாவது காட்டியிருந்தால் மின் வெட்டு முடிவுக்கு வந்து இருக்காதா என்ன? ஒரு மெகாவாட் உபரி மின்சாரம் கூட உற்பத்தி செய்யப்படவில்லையே! மின்சாரத் துறையில் புத்திசாலிகளுக்கு அவ்வளவு பஞ்சமா? இல்லை…….. உபரி மின் உற்பத்தியில் ஆர்வம் இல்லையா?

விலைவாசி உயர்வைப் பற்றிக் கேட்டால் “இது மத்திய அரசின் கையில் இருக்கிறது!” என்றார் கலைஞர். மக்கள் அவர் தம் கைகளில் என்ன இருக்கின்றது என்று காட்டி விட்டனர்!

அரசியலில் ஐம்பது வருடம் கடந்த கலைஞர், கவர்னருக்குத் தன் ராஜினாமா கடிதத்தைத் தன் உதவியாளர் மூலம் அனுப்புகின்றார்! கவர்னர் என்பவர் தபால் அலுவலகமா என்ன? யார் மூலம் வேண்டுமானாலும் கடிதம் அனுப்ப! “இது மக்கள் எனக்கு அளித்த ஓய்வு” எனப் பெருமை பொங்க அறிக்கையிடுகிறார் கலைஞர்! மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சாரியாவிற்குத் தெரிந்த அரசியல் நாகரிகம், வயதிலே மூத்த, அனுபவத்தில் முதிர்ந்த கலைஞர், மறந்தது ஆச்சரியம் அளிக்கிறது!  (அப்படியா……………………!  என்று பிதாமகன் சூர்யா பாணியில் அழுது கொள்ளவும்!!!!!!!!!!!!).

karunanidhi2G பூச்சாண்டியை காட்டி, அறுபதுக்கும் மேற்பட்ட தொகுதிகளை பிடிவாதமாய் அடித்துப் பிடுங்கிய, காங்கிரஸ் அறுபதில், பத்தில் ஒரு பங்கு கூட வெற்றி பெற இயலாமல் ஐந்து தொகுதிகளோடு நிறுத்திக்கொண்டது! “சுப்பர் அப்பு…..!!!!!!!!!”

ராகுல், சோனியா மற்றும் மன்மோகன் போன்ற பெரும் தலைவர்களின் பிரச்சாரம் காற்றோடு போய்விட்டது!

2G ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல், “ஆதர்ஷ்” ஊழல் எனத் தொட்டதில் எல்லாம், மூலை முடுக்கெல்லாம் ஊழல்!

அப்படியிருந்தும், தமிழகத்தில் தைரியமாய் கலைஞருக்காய்க் குரல் கொடுத்தனர் இவர்கள்! தேசிய அளவில் காங்கிரசுக்கு இது பெரும் பின்னடைவு!  “விட்றா! விட்றா! சுனா பானா! யாரும் பாக்கலே! அப்படியே மெயின்டென் பண்ணு!”, என மீசையே முறுக்கலாம்!

“தொகுதிப் பங்கீடு, திருப்திகரம்!” என்று அறிக்கையிட்ட இராமதாஸ்! எங்கே இருக்கீங்க டாக்டர்?!?!?!?!?!?!?!?!?!!!!!!!!!!

தேசிய செய்தித் தொலைக்காட்சிகள் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளையும் அதன் தலைவர்களையும் கடுமையாய் விமர்சிக்கின்றன! கருணாநிதி, ஸ்டாலின், அழகிரி மற்றும் கனிமொழி ஆகியோர் எங்கே இருக்கின்றனர் எனக் கேள்விகள் எழுப்புகின்றன! “தாங்கள் தொடர்பு கொள்ள நினைக்கும் வாடிக்கையாளர்……. தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளார்!!!!”

கடந்த ஐந்து வருடங்களில் ஜெயலலிதா செய்ததும் ஒன்றும் பெரிதாக இல்லை. கொடநாட்டில் ஓய்வு, பல அறிக்கைகள், விலைவாசி உயர்வு மற்றும் மின்வெட்டைக் கண்டித்துச் சில பல ஆர்ப்பாட்டங்கள், இவை தவிர சொல்வதற்குப் பெரிதாக ஏதும் இல்லை!

vijayakanthஒருவரை ஒருவர் வசை பாடிக்கொண்டிருந்த ஜெயலலிதாவும் விஜயகாந்தும் கை கோர்த்தது, இன்று வெற்றிக் கொண்டாட்டத்தில் முடிந்து இருக்கிறது!  இருவரும் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும்! இது இவர்களின் வெற்றி அல்ல! மக்கள் மாற்றம் விரும்பினர். ஆனால் வலுவான மாற்றுத் தலைமை இல்லையே தமிழகத்தில்! வேறு வழி இல்லை மக்களுக்கு. இல்லாத தலைமைக்கு இருவரும் நன்றியுரைக்க வேண்டும்!

தி.மு.க.வின் திறமையான ஆட்சி!!!!!!!!!!!!! (நெசமாத்தாங்கோய்ய்ய்ய்ய்…………………..!!!!!!!!!!!) அ.தி.மு.க.வை அரியணையேற்றி அழகு பார்க்கின்றது.   சென்ற தேர்தலில் ஒரே ஒரு தொகுதியில் மட்டும் வென்ற தே.மு.தி.க. இன்று முக்கிய எதிர்க் கட்சி! (மெய்யாலுமா………..!!!!!!?!?!?!?!?!?!?) (யாரும் சிரித்துவிடாதீர்கள்………….. பிளீஸ்!) தயவுசெய்து இருவரும், பழையவர்களுக்கு நன்றி சொல்லுங்கள். “அவிய்ங்க……. ரொம்போ……..  நல்லவிய்ங்க…….!” என்று!

இவர்கள், அவர்களை வைவதும், அவர்கள் இவர்களை வைவதும் என்று, பிரச்சாரங்கள் அனைத்தும் கேலிக் கூத்து ஆகிப் போன இந்த 2011 தேர்தலில், உண்மையான, வலுவான தலைமையாய் நிமிர்ந்து நின்றது, இந்திய தேர்தல் ஆணையம் மட்டுமே! தேர்தல் ஆணையத்தில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பணிபுரிந்த அனைத்து மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கும் நன்றி!

இவர்களுக்குக் கவிதை வாசித்து, பாராட்டுகள் தெரிவித்து, பொன்னாடை போர்த்தி, கையில் பூங்கொத்து கொடுத்து, விருதே கொடுக்கலாம்! “இந்த வருஷ ……………………… ஸ்ரீங்ங்கோய்ய்ய்ய்!!!!!!!!!!”. சும்மவா பின்னே………………… பணநாயகத்தை,  ஜனநாயகம் ஆக்கியவர்கள் இவர்களே!

ஆனாலும் கலைஞர் வாரிசுகள் வெகு புத்திசாலிகள்!  “அழகர்சாமியின் குதிரை”, தேர்தல் முடிவுகளுக்கு ஒரு நாள் முன்னதாய் வெளிவந்தது!       (வெளியிட்டது வெள்ளி அல்ல வியாழன்! “நாங்களும் பகுத்தறிவுவாதிகதேன்…………….!” என்று அனைத்து உடன்பிறப்புகளும் குறித்துக்கொள்ளவும்!)  (இல்லேன்னா தியேட்டர் கிடைக்காது சாமியோவ்வ்வ்வ்வ்வ்வ்!!!!!!!!!!!!!!!!!!)

இப்போ let me tell you all intellectuals, something very very very very serious, pls read carefully!!!!!!!!!!!!

Vadivelu“தலைவரே! தலைவரே!”

ஒரு சத்தமும் இல்லை!

எங்கே சென்றார் இந்த ‘வருத்தப் படாத வாலிபர் சங்கத் தலைவர் Mr. தி கைப்புள்ளே!”?????????????????’

மதுரையின் சந்துகளில் தேடிப் பார்த்து, அவரைக் கண்டால் தயவுசெய்து என்னை தொடர்பு கொள்க! Pls!

“அட……………..! நெறைய பேசோணும் சார்ர்ர்ர்ர்……………………!!!!!!!!!!!!! சத்தியமா வேற ஒன்னும் இல்லே!!!!!!!!!!!!!!!!!!!!!”

===========================================

படங்களுக்கு நன்றி: http://www.adilmohdblog.com, http://www.aaraamthinai.com, http://www.arasiyaltalk.com, http://www.tamilkey.com

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “யாரும் சிரித்துவிடாதீர்கள்……. பிளீஸ்!

  1. இந்த கட்டுரை முழுதும் இருமுறை படித்தேன். நக்கீரன் சர்வே சொல்லும் பாடங்கள் வெளிவரவில்லை. மேலும்,குறிப்பிட்ட நேரடி ‘மருள்’ பரப்பைக் காணாததால், அதிகப்படியாக, கருத்துக் கூறவில்லை.

  2. this article by Capt. Ganesh is very impressive. and the author pointed out everyone from media person to the leader. Now it time to change media person Mr.Gopal should stop his yellow magazine Nakkeeran or should change his activity. Similarly Dmk and congress leaders should feel they are servant of the people not the king!! once again i like remind them that Democracy means By the people, of the people and for the people. At the same time i congrats the TAmilnadu CM and their alliance leader and request them to do the good things to the people if not just five year only.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *