சிநேகா அறிமுகப்படுத்திய ‘நிஷா’!

sheha launches nisha

மலேசியாவில் புகழ்பெற்ற பிராண்டான ‘நிஷா’வின் மூலிகை அழகு சாதனப் பொருள்கள் முதல் முறையாக சென்னையில் 2011 மே 15 அன்று அறிமுகப்படுத்தப்பட்டன. புன்னகை இளவரசி நடிகை சிநேகா இந்த அழகு சாதனப் பொருள்களை அறிமுகம் செய்து வைத்தார்.

மலேசியாவின் நாஸியா நிறுவனத்தின் புகழ்பெற்ற பிராண்ட், நிஷா. மலேசியாவில் பல ஆண்டுகளாகப் பிரபலமானதும் அதிகம் விற்பனையாவதும் நிஷாவின் அழகு சாதனப் பொருள்களே. எந்தவித ரசாயனக் கலப்புமின்றி, முழுக்க முழுக்க மூலிகைகளால் தயாரான அழகு சாதனப் பொருள்கள் இவை.

நிஷா அழகு சாதனப் பொருள்களைச் சென்னையில் முதல்முறையாக அறிமுகப்படுத்தும் விழா, மே 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னை சவேரா ஓட்டலில் நடந்தது.

தமிழ் சினிமாவின் புன்னகை இளவரசி சிநேகா பங்கேற்று, நிஷா அழகு சாதனப் பொருள்களை அறிமுகப்படுத்தினார். முன்னாள் அமைச்சர் வேங்கடபதி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

விழாவில் சிநேகா பேசுகையில், ‘இன்றைக்கு ஆறிலிருந்து அறுபது வரை எல்லோருமே தங்களை அழகுபடுத்திக்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். இதற்காகப் பலவித அழகுக் கிரீம்களை பயன்படுத்துகிறார்கள். என் அம்மா கூட அழகு கிரீம் விளம்பரங்களைப் பார்க்கும்போதெல்லாம், ’இவற்றைப் பயன்படுத்தினால் நானும் இந்த விளம்பரத்தில் வரும் பெண்களைப் போல அழகாகிவிடுவேனா?’ என்று கேட்பார்.

டோனர், மாய்ஸரைசர், சன் பிளாக் என தனித் தனியாகத்தான் பொதுவாக வாங்க வேண்டியுள்ளது. ஆனால் நிஷா இவை அனைத்தையும் ஒரே பொதியாகத் தருகிறார்கள்.

நான் இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நிஷாவைப் பார்த்து வியந்தேன். அவர் வயது என்னவென்று நான் கேட்கவில்லை. காரணம் அப்படிக் கேட்பது நாகரிகமில்லை. ஆனால் அவரைப் பார்த்தால் ஒரு பெண்ணுக்கு அம்மா மாதிரியே தெரியவில்லை. அந்த அளவு இளமை.

இந்த அழகு சாதனப் பொருள்களை அவரது குடும்பத்தினர் அனைவருமே பயன்படுத்துவதாகக் கூறினார். முழுக்க முழுக்க மூலிகைகளால் ஆன இயற்கை அழகு சாதனப் பொருள்களைப் பயன்படுத்துவதுதான் சிறந்தது. அதைப் பல ஆண்டுகளாக மலேசியாவில் வெற்றிகரமாக விற்பனை செய்து வருகிறது நிஷா.

நிஷா அழகு சாதனப் பொருள்களைச் சென்னையில் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறேன். ஒரு நல்ல பொருளை அறிமுகம் செய்த திருப்தி இருக்கிறது, என்றார்.

நாஸியா நிறுவன மேலாண்மை இயக்குநர் முகமது ஜலீல் பேசுகையில், ‘ஆண்களுக்கும் பெண்களுக்குமான அழகு சாதனப் பொருள் நிஷா. பேஷியல் டோனர், மாய்சரைஸர், சன் பிளாக், நைட் க்ரீம், கொலோஜன் சோப் மற்றும் ஹெர்பல் சோப் அடங்கிய ஒரு பேக்காக இதனை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளோம். பயன்பாடு முழுமையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு. இந்த ஆறு அழகு சாதனப் பொருள்களும் கொண்ட ஒரு பேக்கின் அறிமுகச் சலுகை விலை, ரூ 4100 மட்டுமே, என்றார்.

நாஸியா நிறுவனம் ஆயத்த ஆடை ஏற்றுமதி தொழிலில் மலேசியாவில் கடந்த 1994ஆம் ஆண்டு முதல் ஈடுபட்டு வருகிறது.

================================

தகவல்: மக்கள் தொடர்பாளர் அ.ஜான்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *