குமரி எஸ். நீலகண்டன்
Kumari_S_Neelakandan
அப்பா அம்மாவோடுதான்
அவனது ஒவ்வொரு
பிறந்த நாளும்.

கேக் வெட்டி
மெழுகுத் திரிகள் ஒளிர
வருடம் தவறாமல்
கொண்டாடி வருகிறான்.

வருடந்தோறும்
மெழுகுத் திரிகளோடு
அவன் வயதும்
பெருகப் பெருக அவனது
அப்பாவும் அம்மாவும்
அதே இளமையில்
புகைப்படத்தில்…

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க