ஜெய் ஆகாஷ் இயக்கி நடிக்கும் ‘ஆயுதப் போராட்டம்’
ஜெய் பாலாஜி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், ஜெய் ஆகாஷ் இயக்கி நடிக்கும் “ஆயுதப் போராட்டம்” எனும் புதிய திரைப்படம், வெளிவரத் தயார் நிலையில் உள்ளது.
கதாநாயகனாக ஜெய் ஆகாஷ், கதாநாயகிகளாக பிரீத்தி மினாள் மற்றும் அனிதா ரெட்டி அறிமுகம். மேலும் சாய்கிரண், “ரேணிகுண்டா” புகழ் தீப்பெட்டி கணேஷ், நீரஜ் புரோக்கித், அதித் ஸ்ரீனிவாஸ், கோபி, மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். கதாநாயகனாக நடிக்கும் ஜெய் ஆகாஷ், முற்றிலும் மாறுப்பட்ட இரட்டை வேடத்தில் மிரள வைக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.
ஒரு இந்திய தமிழனுக்கும் – இலங்கைத் தமிழனுக்கும் உள்ள உணர்வுப் போராட்டமே, இந்த ஆயுதப் போராட்டம் படத்தின் கதைக் கரு.
இப்படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்து நாட்டில் தொடங்கி, அதை தொடர்ந்து ஹாங்காங், மற்றும் சீனாவில் பாடல் காட்சிகள் மற்றும் சண்டைக் காட்சிகளுடன் முடிவுடைகிறது. இதில் மொத்தம் ஐந்து பாடல்கள் இடம் பெறுகின்றன. இப்படத்தின் இசை அமைப்பாளர் நந்தன் ராஜ், ‘காதலன் காதலி’ படத்தின் இசையமைப்பாளராகப் பணியாற்றியவர்.
ஒளிப்பதிவாளர் சாய்சதீஷ் இப்படத்தின் மூலமாகத் தமிழில் அறிமுகமாகிறார். இவர், இந்தி, பெங்காலி மொழிகளில் பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர்.
இப்படத்தின் சிறப்பம்சமாகத் தாய்லாந்து நாட்டில் உள்ள காஞ்சனாபுரி காட்டுக்குள் பிரம்மாண்டமான காட்டு பங்களா செட் போடப்பட்டு, 30 நடிகர் நடிகைகள் பங்கு பெறும் கிளைமாக்ஸ் காட்சியை 20 நாட்கள் எடுத்து முடித்துள்ளனர்.
இலண்டன், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற அயல் நாடுகளில் பாடல் காட்சிகள் படம்பிடிக்கப்பட்டுள்ளன.
இப்படத்தில் மற்றுமொரு சிறப்பம்சமாக, நாயகன், நாயகி கண்ணி வெடிகளிலிருந்து தப்பி ஒடுவதற்காக, ஒரு தொங்கும் பாலத்தை ரிவர்குவாய் எனும் பிரிட்ஜ் அருகில் இந்தத் தொங்கும் பாலத்தை அமைத்து ஆபத்தான காட்சிகள் படம்பிடிக்கப்பட்டுள்ளன.
தாய்லாந்தில் “சிவப்பு புரட்சி இயக்கம்” நடந்து கொண்டிருந்த நேரத்தில் குண்டுவெடிப்பு, துப்பாக்கி சண்டை, கண்ணி வெடித் தாக்குதல் ஆகியவற்றிற்கு ஒரிஜினல் ஆயுதங்கள் பயன்படுத்துவதால் சிறப்பு காவல் படை அமைத்து, தாய்லாந்து நாட்டின் சிறப்பு ஆயுதப் பயிற்சியாளர்கள் முன்னிலையில் மிகுந்த சிரமத்தில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.
படத்தின் இறுதிக் கட்டக் காட்சியில் திரைப்பட முன்னணி நட்சத்திரங்கள் சிறப்புத் தோற்றமளிக்கின்றனர். கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் அதிகம் இடம்பெறுவதால், அதிகப் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது.
வன்முறைக் காட்சிகள் அதிகம் இடம்பெறுவதால் தணிக்கை குழு “ஏ” சான்றிதழ் அளித்துள்ளது. தமிழ் உணர்வுள்ள அனைவரும் பார்க்கக்கூடிய ஜனரஞ்சகமான படம் இது.
=======================================
தகவல் – மக்கள் தொடர்பாளர் செல்வரகு