வார ராசி பலன்!…02-09-13 – 08-09-13
காயத்ரி பாலசுப்ரமணியன்
மேஷம்: வியாபாரிகள் சரக்குகள் தேங்குவதைத் தவிர்க்க, வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்றவற்றை தருவித்துக் கொள்ளுதல் புத்திசாலித்தனமாகும். கலைஞர்கள் புதிய முயற்சிகளில் முழு வீச்சுடன் இறங்குவதற்கு நல்ல பலன் கிடைக்கும்.மாணவர்கள் வலுவில் வரும் வம்புச் சண்டைகளிலிருந்து ஒதுங்கியிருப்பது நல்லது.சுய தொழில் புரிபவர்கள் எடுக்கும் முயற்சிகள், சிறிது தேக்கத்திற்குப் பின் விறுவிறுவென்று நடைபெறும். அதிகாரிகளின் கண்டிப்புக்கு ஆளாக நேரிடும். வாய்ப்பிருப்பதால், பணியில் இருப்பவர்கள் முக்கியமான பொறுப்புக்களில் முழு கவனத்துடன் இருப்பது நல்லது.
ரிஷபம்: மாணவர்கள் உங்கள் திறமை மேல் நம்பிக்கை வைத்து செயலாற்றுங்கள். வெற்றி வாகை சூடுவது சுலபமாகும். புதிதாக பணியில் சேர்ந்தவர்கள் கடன் அட்டைகளை கருத்துடன் கையாளவும். தொழிலுக்கு முன்னுரிமை தந்தாலும், குடும்பத்தை கவனிப்பதில் குறை ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். பெண்களுக்கு மன ரீதியாக சில தொந்தரவுகள் இருந்தாலும், அதை வெளிக்காட்டாமல்,பணியை முடித்து விடும் ஆற்றலைப் பெறுவார்கள். கலைஞர்கள் விலை உயர்ந்த ஆபரணங்கையும், பொருள்களையும் தக்க விதத்தில் பராமரித்து வந்தால், வீண் செலவுகளை கட்டுக்குள் வைக்கலாம்.
மிதுனம்: மாணவர்கள் நண்பர்களிடமிருந்து எதிர்பார்த்த உதவி வரும். பணியில் உள்ளவர்கள் முக்கிய பொறுப்புள்ளவரின் நம்பிக்கைக்கு பாத்திரமாக நடந்து கொள்வது நல்லது. முதியவர்களுக்கு பயணங்கள் அதிகரிக்கும். எனவே ஆரோக்கியத்தில் கவனம் அவசியம். இல்லத்தில் கருத்து வேறுபாடு ஆகியவை அதிகரிக்கும் போது பெண்கள் மௌனத்தை மேற்கொண்டால், அல்லல்கள் அருகே வராது. கலைஞர்கள் பொது இடம் மற்றும் விழாக்களில் சர்ச்சைக்குரிய கருத்து பரிமாற்றங்களிலிருந்து ஒதுங்கி இருங்கள். . மன நிம்மதி பறி போகாமல் இருக்கும். இந்த வாரம் வியாபாரிகளுக்கு செலவுகள் சிலசமயம் கை மீறி செல்லும்.
கடகம்: மற்றவர்களுக்கு உதவும் குணத்தால், மாணவர்களின் தேவைகள் யாவும், சிரமமின்றி பூர்த்தியாகிவிடும். வியாபாரிகள் புதிய பணியாளர்களை அமர்த்துவதில் விழிப்புடன் இருங்கள். லாபம் குறையாது. பெண்கள் பிள்ளைகளின் போக்கை கவனித்து வருவது நல்லது. பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் வலுக்கும் வாய்ப்பிருப்பதால் எதிலும் கவனமாக செயல்படவும். சுய தொழில் புரிபவர்கள் கொடுக்கல் வாங்கலில் அவசரப் போக்கிற்கு இடம் தராமல் இருந்தால், புதிய சிக்கல்கள் உருவாகாது. மாணவர்கள் ,கூட இருந்தே குழி பறிப்பவர்களை இனங்கண்டு ஒதுக்கிவிடுங்கள்.
சிம்மம்: உத்தியோகத்தில் உள்ளவர்கள், பதவி உயர்வு பெற்று,வெளியிடங்களுக்கு மாற்றலாகி அதிக வசதியுள்ள இடங்களில் பணி புரிவார்கள். வியாபாரிகளின் கையைக் கட்டிப் போட்டிருந்த பொருளாதாரம் இந்த வாரம் சரளமாக இருக்கும் . கர்ப்பிணிப் பெண்கள் எனவே வேளை தவறிய உணவு, அலைச்சல் ஆகியவற்றை குறைத்துக் கொள்ளுங்கள்.மாணவர்கள் ரசாயனம் தொடர்பான செய்முறைகளில், எச்சரிக்கையாய் இருந்தால், சிறு காயங்களைத் தவிர்க்க முடியும். கலைஞர்கள் மூத்தவரிடம் இணக்கமாக நடந்து கொள்ளுங்கள். உங்களின் புதிய முயற்சிகளுக்கு ஆதரவாய் இருப்பதோடு வேண்டிய யோசனைகளும் கிட்டும்.
கன்னி: பொது வாழ்வில் இருப்பவர்கள் குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அலட்சியம் வேண்டாம். மாணவர்கள் முன்பின் யோசியாமல் எந்த வேலையிலும் இறங்காதீர்கள். பொறுப்பில் இருப்பவர்கள் பண சம்பந்தமான விஷயங்களை உங்களின் நேரடிப் பார்வையில் வைத்துக் கொள்ளுதல் அவசியம். சில நேரங்களில் நண்பர்களே உங்களை எதிரிகளாய் பார்க்கும் நிலை உண்டாகும். எனவே எதிலும் கவனமாக இருப்பது நல்லது. . கலைஞர்களுக்கு வரும் ஒப்பந்தங்களை சிலர் குறுக்கு வழியில் தட்டிப் பறிக்க முயலுவார்கள். எனவே நிதானமாகப் பேசி நினைத்த காரியத்தை பக்குவமாக முடித்துக் கொள்வது உங்கள் கையில் உள்ளது .
துலாம்: பெண்கள் விலை உயர்ந்த சாதனங்களை விவரமறிந்தவரிடம் கொடுத்து பழுது பார்த்தால், வீண் செலவுகள் அதிகரிக்காது. மாணவர்கள் பழகிய நண்பர்களின் சொல்லுக்கு கட்டுப்படும் நிலையும், அதனால் சில சிக்கல்களையும் சகித்துக் கொள்ள வேண்டி வரும். பொது வாழ்வில் இருப்பவர்கள் நம்பிக்கையின் அடிப்படையில்தான் நல்ல உறவு மலரும் என்பதைப் புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது. கலைஞர்கள் சட்டென்று உணர்ச்சி வசப்படுவதைக் குறைத்தாலே சங்கடங்கள் தானே குறையும். பணியில் இருப்பவர்கள் தேவையில்லாமல் உயர் அதிகாரிகளைப் பற்றிய விமர்சனங்களில் ஈடுபட வேண்டாம்.
விருச்சிகம்: மாணவர்கள் தவறான வழிகாட்டலுக்கு தலையசைக்காமல் இருந்தால், நிலையான நன்மைகள் உங்களை நெருங்கி வரும்.வியாபாரிகள் ,சரக்கு போக்கு வரத்தில் உள்ள ஓட்டைகளை அடைத்தால், வீண் விரையத்தைத் தவிர்க்கலாம். தொழிலதிபர்கள் காசோலை மற்றும் வாக்குறுதி வழங்குதல்- இரண்டிலும் நிதானமாக இருப்பது நல்லது.பெண்கள் உறவுகளிடம் குதர்க்கமான பேச்சைத் தவிர்த்தால், மனக் கசப்பு ஏற்படாது. கலைஞர்கள் எல்லாம் தெரியும் என்கிற மனப்பான்மை உங்களின் முன்னேற்றத்திற்குத் தடையாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள் . நல்ல பெயரோடு வாய்ப்புக்களும் வந்து சேரும்.
தனுசு: சுய தொழில் புரிபவர்கள் மனக் குழப்பம் உங்களின் திறமையை பாதிக்காதவாறு திடமாகச் செயல்படுங்கள். தொழிலில் இருந்த இடைஞ்சல்கள் தானே விலகும்.உறவினர் வருகையால்,பெண்களின் வேலைப் பளு சற்றே கூடும். பெற்றோர்கள் பிள்ளைகளோடு விவாதத்தில் இறங்காமல், இதமாக நடந்தால், தானே உங்கள் பக்கம் வந்து விடுவார்கள்.இந்த வாரம் மாணவர்கள் செய்ய மறந்த வேலைகளுக்காக அபராதம் கட்ட நேரிடலாம். எனவே தன் வேலைகளை முடிப்பதில் விழிப்புடன் இருப்பது நல்லது. பணியில் இருப்பவர்கள் சக ஊழியரின் பணிகளையும், பொறுப்புக்களையும் நீங்கள் சுமக்க வேண்டியிருக்கும்.
மகரம்: கலைஞர்கள் , வேலையாட்கள் முன் சொந்த விஷயங்களை அலசுவதை விட்டு விடுங்கள். வீண் வதந்திகள் வளராது. மாணவர்கள் வாகனம் ஓட்டுகையில், உரிய விதிகளை கடை பிடிப்பது அவசியம். வியாபாரிகள் கொடுக்கல், வாங்கல், காசோலை வழங்குதல், ஆகியவற்றில் முறையாக செயல்பட்டு உங்கள் கௌரவம் நிலைக்குமாறு செய்து கொள்ளுங்கள். பொது வாழ்வில் இருப்போர்கள் சூழ்நிலைக்கு தகுந்தவாறு செயல்படுவதுடன், வாக்குறுதிகளையும் அள்ளி வீசாமலிருப்பது நல்லது. பணியில் இருப்பவர்கள் உங்களின் சிரமங்களை, பணிவாக எடுத்துச் சொல்லி, தீர்வுகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
கும்பம்: பெண்கள் தங்கள் மனதில் பட்டதை வெளியில் சொல்லுவதிலும் ,சாதுரியமாகச் செயல்பட்டால், மற்றவர்களின் வெறுப்பிற்கு ஆளாகாமல் தப்பித்துக் கொள்ளலாம். நண்பர்கள் தரும் தெம்பால், மாணவர்கள் சவாலான காரியங்களையும் முடிக்கும் திறமையைப் பெறுவார்கள். வியாபாரிகள் சலுகைகளைப் பெற முறையற்ற வழிகளை நாடாமலிருப்பது நல்லது. இந்த வாரம் பணியில் உள்ளவர்கள் புது பொறுப்புகளை தக்க ஆலோசனை பேரில் ஏற்றுக் கொள்வது நலம். சோர்வும், தடுமாற்றமும் உங்களின் வேகத்தை குறைக்கலாம். எனவே முதியவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியமாகும்.
மீனம்: நெருங்கிய உறவினர்களின் வருகையால், பெண்களின் மகிழ்ச்சி பெருகும். இந்த வாரம் மாணவர்கள் கையில் உள்ள பணம் கரையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.அநாவசிய செலவுகளுக்காக கடன் படும் நிலை உருவாகாது. பொறுப்பில் இருப்பவர்கள் சுய பச்சாதாபத்திற்கு இடமளிக்காமல் வேலைகளை செய்தல் அவசியம். பொது வாழ்வில் உள்ளவர்கள் குறுக்கு வழிகளைக் கையாளாமலிருந்தால், உங்கள் கௌரவம் பாதிப்படையாது. கலைஞர்கள் பணம் சார்ந்த பரிவர்த்தனைகளில் எச்சரிக்கையாகவும், புத்திசாலித் தனமாகவும் நடந்து கொண்டால், ஏமாற்றத்தைத் தவிர்த்து, ஏற்றமான பாதைக்கு மாறலாம்.