அமெரிக்காவில் தமிழ் இணைய மாநாடு

0

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டு செயல்பட்டுவரும் தன்னார்வலர் நிறுவனம் “உத்தமம்”.  இந்த அமைப்பு கடந்த ஒன்பது வருடங்களாக தமிழ் இணைய மாநாடுகளை நடத்தி வந்துள்ளது.  2011ம் ஆண்டிற்கான தமிழ் இணைய மாநாட்டை 2011, சூன் 17 முதல் 19 வரை அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தின், பென்சில்வேனியா பல்கலைகழகத்தில் நடத்தவுள்ளது.

 


இந்த மாநாட்டில் அமெரிக்கா, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், கனடா, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, பிரான்சு, சவுதி அரேபியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து தமிழ் ஆய்வாளர்கள் மற்றும் தமிழ் கணினி நுட்பவியலாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

உத்தமம் அமைப்பின் முன்னோடிகள் திருவாளர்கள் மு. ஆனந்த கிருட்டிணன் மற்றும் பொன்னவைக்கோ,  பென்சில்வேனியா பல்கலைகழகத்தின் தெற்காசிய துறைத் தலைவர் திரு. தாவூத் அலி,  பேராசியர் ஹெரால்டு ஷிஃப்மன், பேராசியர் அண்ணாமலை, பிரான்சில் இருந்து பேராசியர் ஏ. முருகையன்,  தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை செயலர் திரு. சந்தோஷ் பாபு,  பேராசிரியர் ஏ.ஜி.ஆர்., கணித் தமிழ் சங்கத்தலைவர் ஆண்டோ பீட்டர், இளம் செம்மொழி அறிஞர் விருது பெற்ற அறிஞர்கள் வா.மு.செ. ஆண்டவர் மற்றும் மு. இளங்கோவன்,  உத்தமம் அமைப்பின் மலேசிய கிளையின் துணைத் தலைவர் திரு. இளம்தமிழ்,  சிங்கை சிவகுமாரன், சீதாலட்சுமி,  கனடாவில் இருந்து பேராசிரியர் செல்வகுமார், ஈழத்தின் சிவா அனுராஜ் ஆகிய அறிஞர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.

இம்மாநாட்டுடன் இணைத்து, டெலவர் பெருநில தமிழ்ச்சங்கத்தின் சிறுவர் திருக்குறள் போட்டியும் நடைபெறும்.  மேலும் கணித் தமிழ்ச்சங்க உறுப்பினர்களின் குருந்தகடுகளும் பார்வைக்கு வைக்கப் படவுள்ளன.

மாநாட்டின் நிகழ்ச்சி நிரல் கீழ் காணுமாறு

தமிழ் இணைய மாநாடு 2001 தொடக்கவிழா :  சூன் 17 காலை 09:00 முதல் 11:30 வரை (அமெரிக்க நேரப்படி)
தமிழ்த்தாய் வாழ்த்து
தலைமை :  முனைவர் வாசு அரங்கநாதன்,  தலைவர் உள்ளூர்க்குழு.
முன்னிலை :  பேராசிரியர் ஹெரால்டு ஷிஃப்மன், பென்சில்வேனியா பல்கலைகழகம்.               முனைவர். தாவூத் அலி, பென்சில்வேனியா பல்கலைகழகம்.

சிறப்புரை :  பேராசிரியர் ஆனந்த கிருட்டிணன்,     தலைவர், ஐ.ஐ.டி., கான்பூர்.

திரு.  சந்தோஷ் பாபு,  இ.ஆ.ப.,  தமிழக அரசு.

கணிஞர் வா.மு.சே.  கவிஅரசன்.,   தலைவர், உத்தமம்.

முனைவர் கல்யாணசுந்தரம்,  தலைவர், மலர்க்குழு.
நன்றியுரை :  கணிஞர் ஆண்டோ பீட்டர்,  தலைவர், கணித் தமிழ்ச்சங்கம்.
ஆய்வரங்குகள் : www.infitt.org/ti2011 என்ற உரலியில் வெளியிடப்படும்.

பொதுக்குழு :  சூன் 18, மாலை 5.30 (அமெரிக்க நேரப்படி)
தலைமை :  கணிஞர் வா.மு.சே.  கவிஅரசன், தலைவர், உத்தமம்.
நிறைவு விழா :  சூன் 19, காலை : 10:30 முதல் 12:00 வரை (அமெரிக்க நேரப்படி)
தமிழ்த்தாய் வாழ்த்து
தலைமை :  கணிஞர் இளந்தமிழன், துணைத் தலைவர், உத்தமம் மலேசிய கிளை.
முன்னிலை :  பேராசிரியர் ஆனந்த கிருட்டிணன்,     தலைவர், ஐ.ஐ.டி., கான்பூர்.

பேராசியர் ஹெரால்டு ஷிஃப்மன், பென்சில்வேனியா பல்கலைகழகம்.

நிறைவுரை :  முனைவர் பொன்னவைக்கோ, எஸ். ஆர். எம். பல்கலைகழகம்.

கணிஞர் வா.மு.சே.  கவிஅரசன்.,   தலைவர், உத்தமம்.

முனைவர் கு. கல்யாணசுந்தரம்,  தலைவர், மலர்க்குழு.

கணிஞர் ஆண்டோ பீட்டர், தலைவர், கணித்தமிழ்ச்சங்கம்.

கணிஞர் இனிய நேரு, தேசிய தகவல் தொழில் நுட்பமையம், இந்திய அரசு.

 

நன்றியுரை :  முனைவர் வாசு. அரங்கநாதன், தலைவர், உள்ளூர்க்குழு.

 

வாய்ப்புள்ள அனைத்து பெருமக்களும் மநாட்டில் கலந்து கொள்ளலாம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.