மாதவிப் பொன்மயிலாள் தோகை விரித்தாள்..

இருபெரும் கவிஞர்களென்று இதயம் திறந்து பாராட்ட வேண்டுமென்றால் கவியரசு கண்ணதாசன் அவர்களையும் காவியக்கவிஞர் வாலி அவர்களையுமே சேரும்! திரைப்பாடல்கள் வரிசையிலே எளிய இனிய தமிழை ஏந்தி வந்த இவ்விருவரும் பல நேரங்களில் கவிஞர் வாலி எழுதிய பாடல்கள் கவிஞர் கண்ணதாசனால் இயற்றப்பட்டது என்கிற எண்ணம் மக்கள் மத்தியில் பலருக்கு உண்டு. இதுபற்றி மேடையிலே கவிஞர் வாலி அவர்கள் “எனது பாடலை தங்கத்தோடுதான் ஒப்பிடுகிறார்களே தவிர, தகரத்தோடு அல்ல” என்று பெருமை பொங்க குறிப்பிட்டார்.

இருமலர்கள் என்னும் திரைச்சித்திரத்தில் ஒரு பாடல் காட்சி! சித்திரம்போல் இருவர் கல்லூரியில் நடைபெறும் கலைவிழா ஒன்றில் – காதலன் காதலியாக நடிக்க வேண்டம். பாத்திரப்படைப்புகளாக.. பொறுப்பேற்றவர்கள் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களும் நாட்டியப் பேரொளி பத்மினி அவர்களும் ஆவர். இக்காட்சியில் இடம்பெற்ற பாடல் .. மாதவிப் பொன்மயிலாள்.. தோகை விரித்தாள்.. கவிஞர் வாலியின் கைவண்ணம் மின்னுகிறது பாருங்கள்..

ஆம்.. சங்ககாலப் புலவர்களின் சமகால வாரிசோ என்று எண்ண வைக்கும் இனிய வரிகள்.. இலக்கியத்தரம் மிகுந்த அற்புதப் பாடலாய் அமைந்திருந்த இப்பாடல் படமாக்கப்பட்டிருந்த விதமும் நம்மை ஒரு இலக்கிய காலத்திற்குள் கடத்திச் சென்றுவிடுகிறது. மெல்லிசை மன்னரின் இன்னிசையில் விளைந்த அனைத்து கீதங்களும் இன்ப நாதங்கள்!!

குறிப்பாக கதையின் நாயகி பத்மினி அவர்களின் முகபாவனைகள், நாட்டியம் என மனக் கண்ணில் இன்றும் நீங்காத பாடலாய் நிலைபெறுகிறது. திரைப்பாடலிலும் இத்தனை இலக்கிய ரசம் பொங்கி வழிய முடியுமென இதோ வாலியின் வரிகள் வரிந்துகட்டிக் கொண்டு வருகின்றன பாருங்கள்!

வானில் விழும் வில்போல் புருவம் கொண்டாள்.. இளம்
வயதுடையாள் இனிய பருவம் கண்டாள்..
கூனல் பிறைநெற்றியில் நிலவாட.. அந்த நிலவொளியில்
நிழலாட.. அந்த விழி வழி ஆசைகள் வழிந்தோட..
மாதவிப் பொன்மயிலாள் தோகைவிரித்தாள்.. வண்ண மையிட்ட ..

முதலில் குறிப்பிட்டதைப் போல திரைப்படம் வெளியானபோது, அமோக வெற்றி பெற்றது மாதவிப் பொன்மயிலாள் பாடல்! இப்பாடல் கவிஞர் கண்ணதாசனால் எழுதப்பட்டது என்றே கவிஞர் கண்ணதாசன் இல்லத்திற்கு ரசிகர்கள் கடிதங்கள் வந்து குவிந்தன. கடிதங்களைப் படித்த கண்ணதாசன் இந்தப் பாடல் நான் எழுதவில்லையே.. தம்பி வாலி எழுதியது! அவற்றையெல்லாம் ஒரு மூட்டைகட்டி வாலியின் வீட்டில் கொண்டுபோய் கொடுக்கச் சொல்லி தனது உதவியாளரிடம் உத்தரவிட்டதுடன் கவிஞர் வாலிக்கு தொலைபேசியில் அழைப்புவிடுத்து இந்தப் பாடலைப் பற்றி மனம் திறந்து பாராட்டினார் என்பதும் அத்துடன் தனது பரிசாக ‘ரம்’ எனப்படும் மதுவகை பானம் ஒன்றையும் அனுப்பியதும் கவிஞர் கண்ணதாசன் அவர்களின் மேதாவிலாசத்திற்கு ஒரு சான்று!

http://www.youtube.com/watch?v=8OH8Fdl0ack

பாடல்: மாதவிப் பொன் மயிலாள்
திரைப்படம்: இரு மலர்கள்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
ஆண்டு: 1967

மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் – வண்ண
மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் – வண்ண
மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
காதல் மழை பொழியும் கார்முகிலாய்
காதல் மழை பொழியும் கார்முகிலாய் – இவள்
காதலன் நானிருக்கப் பேரெழிலாய்
காதல் மழை பொழியும் கார்முகிலாய் – இவள்
காதலன் நானிருக்கப் பேரெழிலாய் – இங்கே
மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் – வண்ண
மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
வானில் விழும் வில் போல் புருவம் கொண்டாள் – இளம்
வயதுடையாள் இனிய பருவம் கண்டாள்
வானில் விழும் வில் போல் புருவம் கொண்டாள் – இளம்
வயதுடையாள் இனிய பருவம் கண்டாள்
கூனல் பிறை நெற்றியில் குழலாட – கொஞ்சும்
குளிர் முகத்தில் நிலவின் நிழலாட
கூனல் பிறை நெற்றியில் குழலாட – கொஞ்சும்
குளிர் முகத்தில் நிலவின் நிழலாட – கலை
மானின் இனம் கொடுத்த விழியாட
ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ
ஆஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆஆஆ
மானின் இனம் கொடுத்த விழியாட – அந்த
விழி வழி ஆசைகள் வழிந்தோட – நல்ல
மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் – வண்ண
மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
காதல் மழை பொழியும் கார்முகிலாய் – இவள்
காதலன் நானிருக்கப் பேரெழிலாய் – இங்கே
மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் – வண்ண
மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள் – நல்ல
மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் – வண்ண
மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
காதல் மழை பொழியும் கார்முகிலாய் – இவள்
காதலன் நானிருக்கப் பேரெழிலாய் – இங்கே
மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் – வண்ண
மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
கரிதநிதபமகரி ஸரிகாமபதநி மாதவிப் பொன் மயிலாள்
கரிதநிதநிபதநிஸ்ரிநீ தபதமபமகரி
ஸரிகாமபதநி மாதவிப் பொன் மயிலாள்
ஸ்ரிரிகமநீ நிஸ்ஸ்ரிகதா தநிநிஸ்ரி பாதமாபமகரிஸ
ரிகமநி ஸ்ரிக மபதமா பதநி ஸ்ரிக நிரிஸ்தநி நித
மாபதநிஸ்கரி மாதவிப் பொன் மயிலாள்
தகிட தகிட திமி தகிட தகிட திமி தகிட தகிட திமி தகிட தகிட திமி
தா ஜிம் கிடதகதரிகிடதோம் தா ஜிம் கிடதகதரிகிடதோம்
தா ஜிம் கிடதகதரிகிடதோம் தாததிம்த தத்திம் தத்திம்
பதநிஸ்நித தணதஜம் தபஜுணுத ஜம் ஜம்
பதநி பதப ஜம் தஜம் தமதணகு ஜம் ஜம்
பமபதீம் தகிட நிதம ஜம் ஸ்ரித ஸ்நித சுகம் தகிட கரிநிதஜம்
பதநிஸ் தஜம் ஸ்ரிகம தகிடதஜம் கரிநீ ததரித ஜம்
ரிகமபா பதா தஜம் தணம் ஸ்கரி நிரிஸ் தணதா ப ஜணும்
ஸ்ரிகமாபதநீஸ்ரி கரிநீத தரிகிணதோம்
ஸ்ரிகாமபதாநிஸ் ரிஸ்நீத தரிகிணதோம்
ரிககாரி நிஸ்தாநி கரிநீத தரிகிணதோம் தரிகிணதோம் தரிகிணதோம்
மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் வண்ண
மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள்

http://youtu.be/8OH8Fdl0ack

http://youtu.be/8OH8Fdl0ack

கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடல்கள் எளிமைக்கு சான்று.  அது பற்றிய செய்திகள்.. விவரங்கள்.. இனிமை..  சொல்லாட்சி.. இவை பற்றிய வாசகர்களின் பின்னூட்டங்களுக்காக காத்திருக்கிறேன்.
 
 
அன்புடன் 
காவிரிமைந்தன் 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “கவிஞர் வாலி

  1. உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் இடம் பெற்ற “நிலவும் ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ’ எனும் பாடல் வாலி எழுதிய பாடல் என்றே எல்லோரும் நினைத்தார்களாம். தி.மு.க வின் அடக்குமுறையால் அப்படம் வெளியானதே பெரும் பாடாய் இருந்ததால் அப்படத்தின் விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை. படம் வெளியாகி வெற்றியடைந்து பல நாட்கள் கழித்தே அப்படத்தின் விவரங்கள் வெளியாயின அதன் பின்பே அந்தப்பாடல் கண்ணதாசன் எழுதியது என அறிந்தார்களாம். இந்த விவரங்கள் என் தந்தை சொல்ல கேட்டிருக்கிறேன்.

    கண்ணதாசனுக்கு ஒரு நடையும், வாலிக்கு ஒரு நடையும் என்று இருந்தாலும் சில பாடல்கள் யார் எழுதியது எனும் ஆர்வம் எனக்கும் வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.